audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, March 22, 2017

முருங்கைகீரை - கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

முருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
முருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

சில உண்மைகள்

அதிகம் சிரிப்பவர்கள்….. தனிமையில் வாடுபவர்கள்..

அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

அழுகையை அடக்குபவர்கள்… மனதால் பலவீனமானவர்கள்..

முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்… அன்புக்காக ஏங்குபவர்கள்…!!!!


பேச்சு – உளவியல் ஆலோசனைகள்…!
மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..
நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..

நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்…

அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்….

நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .
உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும்.
 
சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. …

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்…!

நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.

யாரும் சொன்னாலும் ரசித்தாலும்…தான்…. நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். … உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்… இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

உங்களால் எது முடியாது… உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்… எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை… என்பதே உண்மை….

உங்களுக்கு எதுவும் தெரியாது…. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்… இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்…. உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்….

அழும் போது தனியாக அழுங்கள்… நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்…!!!

கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்…
உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்…..

Thursday, March 16, 2017

"பாஸ்வேர்ட்" இப்படி இருக்கணும் ...!


டிஜிட்டல் உலகில் மூழ்கி போய் உள்ள நம்மவர்கள், இணையாதள
சமூகவலைத்தளங்களே கிடையாது. பேஸ்புக் , ட்விட்டர் என ஆரம்பித்து அனைத்திலும் நட்பு வட்டாரங்களை அதிகம் கொண்டுள்ளோம்.
இதில் அதிகமாக முக்கிய தகவல்களை வைத்திருப்பது மின்னஞ்ச லில் மட்டுமே .நாம் வைத்திருக்கும் மின்னஞ்சலில் பாஸ் வொர்ட் எப்படி வைத்திருப்போம் ? 
ஆறு எழுத்துக்களையும் . இரண்டு எண்களையும் ,ஏதாவது ஸ்பெஷல் கேரக்டரையும் தான் என நினைப்போம் . 
ஆனால் இவ்வாறு பாஸ் வொர்ட் வைத்திருந்தால் ஈசியாக ஹேக் செய்துவிட முடியும் .

எப்படி பாஸ் வேர்ட் இருக்க வேண்டும் ?
30 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை நீங்கள் வைத்திருந்தால், யாராலும் ஹேக் செய்வது மிக கடினம் .
அது மட்டுமில்லாமல் ஹேக் செய்தே ஆக வேண்டும் என யாரேனும் நினைத்தாலும் , உடனடியாக ஹேக் செய்து விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், 6 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை வைத்திருந்தால், ஹேக் செய்வது சுலபம் என தெரிவித்துள்ளனர் வல்லுனர்கள் .

வேகமாக பகிருங்கள்!! டெங்கு நோயை தடுக்கும் மருந்து!!

நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன்மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் வரும். எளிமையான மூலிகைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்.
கொசுக்களை அழிப்பதில் முதன்மையாக இருப்பது பேய் மிரட்டி இலை. இதை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். குன்றுகளுக்கு கீழ் கிடைக்கும் செடி. நாட்டு மருந்து கடைகளில் பேய் மிரட்டி திரி என்ற பெயரில் கிடைக்கும்.
பேய் மிரட்டி இலையில் விளக்கெண்ணெய் தடவி திரியாக திரித்து விளக்கேற்றி வைத்தால் அதில் இருந்து வரும் புகை கொசுவை விரட்டும். இலைகள் எரியும் தன்மை கொண்டது.
மலேரியா, டைபாய்டு, யானைக்கால் வியாதி ஆகியவற்றுக்கு காரணமான கொசுக்களை விரட்ட கூடியது. வேப்பிலை, நொச்சி ஆகியவற்றை கொசுக்களை விரட்ட பயன்படுத்தலாம்.
பேய் மிரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 இலையுடன் சிறிது மிளகுப்பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். காய்ச்சல் தணியும். உடல் வலிக்கு மருந்தாகிறது. பேய் மிரட்டி இலை, துளசி வகையை சேர்ந்தது. துளசியை போன்று நறுமணத்தை உடையது. சாலை ஓரங்களில் கிடைக்கும். ஊதா நிறத்தில் தும்பை பூ போன்ற உருவம் கொண்டது.
துளசியை போன்று கொத்தான மலர்களை கொண்டது. இதற்கு மலை துளசி என்ற பெயரும் உண்டு.அருகம்புல் வேரை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி அருகம்புல் வேரில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்க்கவும். காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை 50 முதல் 100 மில்லி எடுத்து கொண்டால் காய்ச்சல் குணமாகும்..
கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். இது டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கொய்யா இலை தேனீர் குடித்துவர விரைவில் குணமாகும்.
கொய்யா இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. டெங்கு காய்ச்சலை குணமாக்கும். டெங்கு வந்தால் அதிகமான குளிர், உடல் வலி இருக்கும். அப்போதுஇந்த தேனீரை குடித்தால் நன்மை ஏற்படும். இது முதல் தரமான மருத்துவ சிகிச்சை. காய்ச்சல் தணியும் வரை தேனீர் தயாரித்து குடிக்கலாம். எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடை சரக்குகளில் இருந்து காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரைக் கிழங்கு, சுக்கு, இந்துப்பு, கடுக்காய், கறிவேப்பிலை, தேன்.
அரை கிராம் இந்துப்பை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். சிறிது சுத்தப்படுத்திய கோரைக் கிழங்கு, கறிவேப்பிலை, சிறிது சுக்குப்பொடி, கடுக்காய் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். இது விஷ காய்ச்சல், கடுமையான உடல் வலியை குணமாக்கும். கண்கள் சிவந்து போவது, சளி பிரச்னையை சரிசெய்கிறது



http://www.todayindian.info