audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, September 21, 2022

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩

தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡

வகுப்புல பாடம் நடத்தும் போது நீ

என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு

கோபமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.

இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭

அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.

உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? 🤔

என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான்.

அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄

ஒரு புதிய சிந்தனை உருவானது.

தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.

ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.

அதன் பெயர் *இயர் மஃப் (Ear muff)*

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்

இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.

ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

அந்தச் சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என

அதிகாரி உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.

கோடீஸ்வரனானான்.

அவர்தான்

*செஸ்டர் கீரின் வுட்*😊

*சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்* 👍🏻👍🏻👍🏻

Tuesday, September 6, 2022

சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

*சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர்.முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது.என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.பணம் தலைமுறைகளை தாண்டி, நாடுகளை தாண்டி, கலாசாரங்களை தாண்டி, மதத்தை தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வையும் கூடுதலாக கொடுக்கிறது.பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. *ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.*

Sunday, September 4, 2022

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. 

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். 

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். 

லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். 

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. 

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.