அனுபவத்தில் ஒன்று!!
இது எனக்கு மட்டும் இல்ல , அதிகமான வேலைக்கு செல்லும் எல்லாருக்கும் இருந்திருக்கும் . இப்படி ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அதிஷ்டசாலிகள் !! எப்பவுமே ஒரு அனுபவம் இல்லாத வேலைக்கு புதிதாக செல்லும் போது அங்கே எமக்காக ஒருவர் காத்திருப்பார் , எமது ஊக்கத்தை கெடுப்பதற்கும் , எமது வேலையில் பிழை கண்டு பிடித்து மேலிடத்தில் புகார் அளிப்பதற்கும் சந்தர்ப்பம் தேடுவார் . அதுவும் அவருக்கு பலன் தரவில்லை என்றால் நாம் வேலையை விட்டு ஓட அத்தனை தந்திரங்களும் கையில் எடுத்து கொள்வார் . இதன் முக்கிய காரணம் அந்த நபர் தன் திறமையில் நம்பிக்கை இல்லாதது தான் காரணம் . அப்படியே அந்த வேலையின் மன அழுத்தத்தில் அந்த வேலை விட்டு விலகி இன்னொரு இடத்தில் வேலைக்கு போனாலும் அதே மாதிரி இன்னொருவர் இருப்பார் . அதனால் நாங்கள் அந்த வேலைய விட்டு போக வேண்டிய அவசியம் இல்லை , அதையும் எதிர் கொண்டு உங்கள் திறமை மீதும் உங்கள் கடின உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து முன்னேறுவது தான் புத்திசாலித்தனம் !
என்னை பொருத்தவரை அதுதான் பள்ளி கல்லூரி படிப்பை முடித்து வரும் முதலாவது வாழ்கையின் சவால் ஆகும் !!!
அதனால் எல்லாரையும் எல்லா சந்தர்ப்பத்திலும் எதையும் துணிந்து எதிர் கொள்ள கற்று கொள்ளுங்கள்.
😍😍😍