audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Sunday, February 18, 2018

වස්තු – vastū- பொருட்கள்



1
නානකාමරය
குளியலறை
2
ඇඳ 
படுக்கை
3
නිදනකාමරය
படுக்கைஅறை
4
සීලිම
உட்கூறை

5
පුටුව
நாற்காலி

6
රෙදි
துணிகள்

7
කබාය
மேற்சட்டை

8
කෝප්පය
கிண்ணம்

9
 මේසය
மேசை/ 

10
ඇඳුම
உடை

11
බිම
தரை

12
ගෑරැප්පුව
கவைமுள் /முட்கரண்டி
13
ගෘහ භාණ්ඩ
அறைகலன்
14
වීදුරු
கண்ணாடி
15
තොප්පිය
தொப்பி
16
නිවස
வீடு
17
තීන්ත
மை
18
ජැකට්ටුව
சிறியசட்டை






முருங்கை



முருங்கை ☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்  போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨✨✨✨✨

Thursday, January 18, 2018

கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

‘கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம்.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.
கோக்க கோலா மட்டுமன்றி சர்க்கரையுடன், கேபைன் எனப்படும் மூலப்பொருளும் கலந்த பானங்களை நாம் பருகும்போது..,
முதல் பத்து நிமிடம்:
நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது.
இருபதாவது நிமிடம்:
உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விளைவாக, இன்சுலின் சுரப்பி அமோக உற்பத்தியை தொடங்கி விடுகிறது. இதையடுத்து, கிடைக்கக்கூடிய சர்க்கரையை எல்லாம் நமது கல்லீரல் கொழுப்பாக மாற்றி, உடலுக்குள் தேக்கி வைத்து கொள்கிறது.
நாற்பதாவது நிமிடம்:
கேபைன் எனப்படும் வேதியல் கரைசலை நமது உடல் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. கண் விழிகள் விரிவடைகின்றன. இதை ஈடுசெய்ய அதிகமான சர்க்கரையை நமது கல்லீரல் இரத்தத்துக்கு அனுப்புகிறது. இந்த நிலையில் சோர்வை உணர்ந்துக் கொள்ளக் கூடிய மூளையின் உணர்வுப் பகுதி தற்காலிகமாக தடைக்குள்ளாகின்றது.
நாற்பத்தைந்தாவது நிமிடம்:
நமக்கு ஊக்கத்தையும், பேரின்பத்தையும் ஏற்படுத்தவல்ல மூளையின் மண்டலம் சுறுசுறுப்படைகிறது. இது ‘ஹெராயின்’ உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கும் ஊக்கம் மற்றும் சுறுசுறுப்புக்கு இணையானதாக கருதப்படுகிறது.
அறுபதாவது நிமிடம்:
இதில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ கால்சியம், மேக்னீசியம் மற்றும் துத்தநாக சத்துகள் நமது சிறுகுடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதன் விளைவாக இரத்த ஓட்டம் கூடுகிறது. சிறுநீர் கழித்தே தீர வேண்டிய கட்டாய உணர்வு ஏற்படுவதுடன், சிறுநீர் வழியாக உடலில் உள்ள கால்சியம் சத்தும் வெளியேறி விடுகிறது.
கட்டாயமாக சிறுநீர் கழிப்பதன் வாயிலாக நமது எலும்புகள் சக்திபெற ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்ட கால்சியம், மேக்னீசியம், துத்தநாகம், மற்றும் சோர்வுத்தன்மையை நீக்கும் ‘எலக்ட்ரோலைட்’ திரவம், நீர் ஆகிய சத்துகள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகின்றன. இவை யாவும் வெளியேறிய பின்னர், மீண்டும் சர்க்கரைக்காக உங்கள் இரத்தம் ஏங்கத் தொடங்கும்.எரிச்சல், களைப்பு ஆகியவை தோன்றி மீண்டும் இதைப்போன்ற குளிர் பானங்களை நாட வேண்டிய உந்துதலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உங்கள் வகுப்பிலும் அவன் இருக்கலாம்


வழமையான ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் மிஸஸ் தொம்ஸன். அவருக்கு ஒரு வழக்கம்  இருந்தது.அதுதான்  வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் மிஸஸ் தொம்ஸன் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்திற்கும் அவனை நிராகரித்தார்.

அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் ஒப்பதிற்காக அனுப்பப்பட்டது. ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் மிஸஸ் தொம்ஸனுக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது  பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார். உடனே மிஸஸ் தொம்ஸன் 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விடயம்கூட இல்லை!' என்றார்.

உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை மிஸஸ் தொம்ஸனுக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் மிஸஸ் தொம்ஸன்.

மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் மிஸஸ் தொம்ஸன்.

நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கென்சர் நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவன் பெறுபேறுகளில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய்  வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் மிஸஸ் தொம்ஸன் தலைமை ஆசிரியரைப்பார்த்து  சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'

அடுத்த திங்கள் காலை மிஸஸ் தொம்ஸன் வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது  அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விடயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…

அவ்வாண்டின் பாடசாலை இறுதிநாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென  பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொதி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. மிஸஸ் தொம்ஸனுக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் போத்தல் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் மிஸஸ் தொம்ஸன் அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.

மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி  சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட்  இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

ஓராண்டு கழிந்தது. மிஸஸ் தொம்ஸனின் மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. மிஸஸ் தொம்ஸன் ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டொக்டர் தியோடரிடமிருந்து...

Mrs. Thomson,
‘I have seen many more people in my life. But you are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore PhD…..

அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன. மிஸஸ் தொம்ஸனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் போத்தல் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு church இற்குப்புறப்பட்டார். அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் மிஸஸ் தொம்ஸனை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
மிஸஸ் தொம்சன் பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
.
.
.
.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த மிஸஸ் தொம்ஸனாய் இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! எம்மாலும் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.

🚙திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?🚗

முதலில் மோட்டாரில் கெட்டிக்காரன் எவனுமில்லை என்பதில் இந்த பதிவினை ஆரம்பிக்க விரும்புகிறேன்...
எனது கார் ஒன்றில் சமீபத்தில் 70km/hr வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை!
முன்னும் பின்னும் பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன!!! முதலில் நான் பதட்டப்படாமல் பிரேக் பெடலை பம்ப் செய்து பார்த்தேன், பிரேக் ஆயில் குறைவு ஏதும் இருந்தால் பம்ப் செய்தால் பிரேக் பிடித்து விடும்... பம்ப் செய்வது என்பது பிரேக் பெடலினை திருபத்திரும்ப வேகமாக மிதித்து ரிலீஸ் செய்வதுதான். பம்ப் செய்தும் பிரேக் பிடிக்கவில்லை! பின் சாலையின் சூழலை வேகமாக பார்த்து இடைவெளிகளையும் வாகனங்கள் செல்லும் வேகத்தையும் கணித்துக்கொண்டு வேகமாக கியரை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே முதல் கியருக்கு கொண்டு வந்தேன்.... அதே சமயம் வாகனத்தை பிற வாகனங்களில் மோதிவிடாமல் இடைவெளிகளை நோக்கி திருப்பி ஹெட்லைட் அமத்தியமத்தி எரியவிட்டு ஹாரனை அடித்து சாலையில் அனைவருக்கும் எச்சரிக்கை சமிக்கைகள் செய்துகொண்டே  ஓட்டினேன்... பிறகு ஹேன்ட் பிரேக்கை (எமர்ஜென்சி பிரேக்/ பார்க்கிங் பிரேக்) மெதுவாக இழுத்தேன்... வாகனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து நின்றது...

செய்யக்கூடாதவை :

வண்டி பிரேக் பிடிக்கவில்லை என்றவுடன் பதட்டப்பட்டு வேகமாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தால் வயர் கட்டாகிவிடும்... படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வந்தபின்தான் ஹேன்ட் பிரேக்கை இழுக்க வேண்டும்... ஹேன்ட் பிரேக் ஒன்றுதான் சேதாரத்தை குறைக்க ஒரே வழி......

இதுபோன்ற சூழல்களில் சீட் பெல்ட் போடாமல் இருந்தால் ஸ்டெரிங்கில் நெஞ்சு அடிபடவோ, கண்ணாடியில் தலை அடிபடவோ வாய்ப்புகள் இருக்கிறது!

சிலர் தங்கள் வாகனங்களில் ஹேன்ட் பிரேக் பழுதாகி பிடிக்காமல் இருப்பதை சரி செய்யாமல் இருப்பர்! ஹேன்ட் பிரேக் அவசர காலங்களில் உயிரை காக்கக் கூடியது என்பதை உணர்ந்து பழுதுபார்க்கவும்.....

எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்டும் போது எதிர்பாராத சூழல்களில் பதட்டப்படாமல் இருக்கவும்.....

முடிந்த அளவு முன் செல்லும் வண்டிக்கு பின்னால் போதிய இடைவெளியில் வண்டியை ஓட்டவும். அவசர காலங்களில் உயிரை காக்கக் இந்த இடைவெளி ரொம்ப முக்கியம்.......

தினமும் உங்கள் வண்டியில் பிரேக் ஆயில் அளவு, பிரேக் ஆயில் டியுப், டயரின் காற்றளவு, தேய்மானம் ஆகியவற்றை சரி பார்க்கவும்....
கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்துகொண்டு வண்டியை ஓட்டவும்........

இதெல்லாம் நான் இணையம் மற்றும்  NatGeo, Discovery Turbo தொலைக்காட்சிகள் வழியாக தெரிந்து கொண்டவை... எனக்கு ஆபத்து காலத்தில் உதவி உயிரை காப்பாற்றிவுள்ளது.......

மறந்துவிடாதீங்க வண்டி ஒட்டிக்கிட்டு போகும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால்.........
1) பதட்டப்படாமல் இருத்தல்
2) சாலையின் சூழலை நன்கு பார்த்தல்
3) ஹார்ன் அடித்து எச்சரிக்கை செய்தல்
4) கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வருதல்
5)மெதுவாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தல்
6)ஓரமாக வண்டியை நிறுத்துதல் வேண்டும்.....

ஷேர் பண்ணுங்க உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கு எப்பொழுதாவது உதவலாம்!