‘கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம்.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.
கோக்க கோலா மட்டுமன்றி சர்க்கரையுடன், கேபைன் எனப்படும் மூலப்பொருளும் கலந்த பானங்களை நாம் பருகும்போது..,
முதல் பத்து நிமிடம்:
நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது.
இருபதாவது நிமிடம்:
உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விளைவாக, இன்சுலின் சுரப்பி அமோக உற்பத்தியை தொடங்கி விடுகிறது. இதையடுத்து, கிடைக்கக்கூடிய சர்க்கரையை எல்லாம் நமது கல்லீரல் கொழுப்பாக மாற்றி, உடலுக்குள் தேக்கி வைத்து கொள்கிறது.
நாற்பதாவது நிமிடம்:
கேபைன் எனப்படும் வேதியல் கரைசலை நமது உடல் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. கண் விழிகள் விரிவடைகின்றன. இதை ஈடுசெய்ய அதிகமான சர்க்கரையை நமது கல்லீரல் இரத்தத்துக்கு அனுப்புகிறது. இந்த நிலையில் சோர்வை உணர்ந்துக் கொள்ளக் கூடிய மூளையின் உணர்வுப் பகுதி தற்காலிகமாக தடைக்குள்ளாகின்றது.
நாற்பத்தைந்தாவது நிமிடம்:
நமக்கு ஊக்கத்தையும், பேரின்பத்தையும் ஏற்படுத்தவல்ல மூளையின் மண்டலம் சுறுசுறுப்படைகிறது. இது ‘ஹெராயின்’ உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கும் ஊக்கம் மற்றும் சுறுசுறுப்புக்கு இணையானதாக கருதப்படுகிறது.
அறுபதாவது நிமிடம்:
இதில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ கால்சியம், மேக்னீசியம் மற்றும் துத்தநாக சத்துகள் நமது சிறுகுடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதன் விளைவாக இரத்த ஓட்டம் கூடுகிறது. சிறுநீர் கழித்தே தீர வேண்டிய கட்டாய உணர்வு ஏற்படுவதுடன், சிறுநீர் வழியாக உடலில் உள்ள கால்சியம் சத்தும் வெளியேறி விடுகிறது.
கட்டாயமாக சிறுநீர் கழிப்பதன் வாயிலாக நமது எலும்புகள் சக்திபெற ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்ட கால்சியம், மேக்னீசியம், துத்தநாகம், மற்றும் சோர்வுத்தன்மையை நீக்கும் ‘எலக்ட்ரோலைட்’ திரவம், நீர் ஆகிய சத்துகள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகின்றன. இவை யாவும் வெளியேறிய பின்னர், மீண்டும் சர்க்கரைக்காக உங்கள் இரத்தம் ஏங்கத் தொடங்கும்.எரிச்சல், களைப்பு ஆகியவை தோன்றி மீண்டும் இதைப்போன்ற குளிர் பானங்களை நாட வேண்டிய உந்துதலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
audio
https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3
Thursday, January 18, 2018
கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment