🍀🌹🍀🌹🍀
சுவாச ரகசியம் - 2
மனிதன் கிரியா சக்தியைப்பெற - சுவாசம் மூக்கின் வலது துவாரத்திலும்.
இச்சா சக்தியைப்பெற - சுவாசம்
மூக்கின் இடது துவாரத்திலும் நடைபெற வேண்டும்.
இத்தத்துவமே சிதம்பரத்தில் வலது கால் ஊன்றலும், மதுரையில் இடதுகால் ஊன்றலும்.
கிரியாசக்தி என்பது செயல் மூலம் ( உழைப்பு) பலனை பெறுதல்.
இச்சாசக்தி என்பது நினைத்த மாத்திரத்தில், ஆசைப்பட்டவுடன் அதனை அடைதல்.
வலது சுவாசம் - அறிவு
இடது சுவாசம் - மனம்
ஒருவர் ஆரம்ப ஆன்மீக பயிற்சியில் இருக்கிறார் என்றால் அவர் மனம் அலைபாயாமலிருக்க மனம் அடங்க - அறிவு விழிப்பாய் இருந்து எண்ணங்களையும் உணர்வுகளையும் கவனித்து நடக்க
சிதம்பர சுவாசம் செய்ய வேண்டும்.
அதாவது இடது பக்கம் மூச்சை இழுத்து வலதுபக்கம் விடவேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
மூச்சை இழுப்பதெல்லாம் இடதுபக்கமாகவும் மூச்சை விடுவதெல்லாம் வலதுபக்கமாகவும் செய்யவேண்டும். இதனால் அவரது சக்தி மேல்நோக்கி எழுப்பப்பட்டு ஆன்மதரிசனம் கிட்டும். கிரியாசக்தி கிட்டும்.
அதன்பிறகு அவர் வலதுபக்கம் மூச்சை இழுத்து இடதுபக்கம் விடவேண்டும் ( மதுரை ).
மூச்சை இழுப்பதெல்லாம் வலதுபக்கம், மூச்சை விடுவதெல்லாம் இடது பக்கம்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய இச்சாசக்தி கிட்டும். இதில் சுவாசத்தின் நான்கு நிலைகளில் எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்பது தகுந்த குருவை அணுகி கற்கவும்.
இதனாலேயே சிதம்பரத்தில் (ஆத்ம தரிசனம் பெற்றநிலையில்) ஆனந்த நடனமிடும்) சிவன் - மதுரையில் 64 இச்சாசக்தி சித்துக்கள் - 64 திருவிளையாடல் செய்தார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வலது பக்க சுவாசம் - அறிவு விருத்தி. (சிதம்பரம்) கிரியா சக்தி .
இடது பக்க சுவாசம் - மனோ விருத்தி.
( மதுரை ) இச்சா சக்தி.
ஒருவருக்கு அறிவு அதிகரிக்க - விழிப்புணர்வு அதிகரிக்க சிதம்பர சுவாசம் செய்யவும்.
கற்பனை சார்ந்த பணியில் இருப்போர் மனதின் கற்பனா சக்தி அதிகரிக்க மதுரை சுவாசம் செய்யவும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உடலின் வலபாகம் - உஷ்ணம் .பித்த தன்மை.
இடது பாகம் - குளிர்ச்சி. நீர் தன்மை.
பித்தம் உஷ்ணம் சார்ந்த நோய்களுக்கு - மதுரை சுவாசம் செய்யவும்.
கபம் நீர் சார்ந்த நோய்களுக்கு - சிதம்பர சுவாசம் செய்யவும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆணியியல் அறிவும்
பெண்ணியியல் மனமும்
அன்னுற அமைத்த
அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார்.
வலது சுவாசம் - ஆண் தன்மை - அறிவு
இடது சுவாசம் - பெண் தன்மை - மனம்.
🌻🌻இதன் பொருட்டே அறிவை வெளிப்படுத்தும் - வலது சுவாசத்தை ( ஆண் தன்மையை) கிரியா சக்தியை - சிதம்பர ஆட்சி என்றும்.🌻🌻 ( சிதம்பரத்தில் - சிவன்)
🌻🌻மனதின் சக்தியை வெளிப்படுத்தும் - இடது சுவாசத்தை ( பெண்தன்மையை) இச்சாசக்தியை - மதுரை ஆட்சி என்றும் கூறினர். ( மதுரையில் - மீனாட்சி ) .🌻🌻
இதன் காரணமாகவே வீட்டில் கணவன் ஆட்சி செய்தால் சிதம்பர ஆட்சி.
மனைவி ஆட்சி செய்தால் மதுரை ஆட்சி என்றும் கூறலாயினர்.
No comments:
Post a Comment