audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, June 30, 2022

பயம் மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?

 

  • இது சுந்தர் பிச்சை அவர்கள் கூறிய யோசனை.
  • தன் வாழ்வில் நிகழ்ந்ததை பற்றி இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்.
  • நான் ஒருமுறை விடுமுறை நாளில் ஒரு குளம்பியகம் (Cofee shop) சென்றிருந்தேன்.
  • காபி குடித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் எங்கோ இருந்து திடீரென பறந்து வந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த ஒருவர் மீது அமர்ந்தது.
  • அவர் அதை தட்டி விட்டார்.
  • பின்னர் அது ஒருவர் மீது ஒருவராக சென்று அமர ஒவ்வொருவரும் தட்டி விட்டனர்.
  • அப்போது அந்த அறையிலிருந்த ஒரு பெண் மீது அமர அவர் பதட்டத்தில் கத்தி விட்டார்.
  • இதனால் அந்த அறையே சிறிது நேரம் சலசலப்புடன் காணப்பட்டது.
  • அவர் பதட்டத்தால் உடல் நடுங்க அந்த உயிரினம் பறந்து சென்று அந்த கடையின் பணியாளர் ஒருவர்‌ மீது அமர்ந்தது.
  • அவர் பதட்டப்படவில்லை.
  • நிதானித்தார்.
  • உயிரினத்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
  • அது ஓரிடத்தில் நின்ற போது அதை பிடித்து சாளரம் (ஜன்னல்) வழியே வெளியில் வீசி எறிந்தார்.
  • அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
  • அந்த பெண்களின் இந்த செய்கைக்கு அந்த உயிரினம் தான் காரணம் என்றால் ஏன் அப்பணியாளர் பதட்டமடையவில்லை?
  • அப்போதுதான் எனக்குள் ஒன்று புரிந்தது.
  • நமக்கு பிரச்சினைகள் வரும்போது அதைக் கண்டு பயப்பட கூடாது.
  • பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம்? என யோசித்தால் வழி கிடைக்கும்.
  • சிக்கலான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்தால் அதிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்.
  • எனவே எந்த சூழலிலும் பதட்டப்படக் கூடாது.

Wednesday, June 29, 2022

எவரின் பிரிவும் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.


நாம் வாழ் நாள் முழுவதும் ஓடி ஓடி பணம் சம்பாதிக்க அலைகிறோம். யார் யாரயோ திருப்திப்படுத்த முனைகிறோம். 
ஆனால் அந்த மனிதனின் மரணம் அவனது சுற்றத்தின் இயககத்தையே நிறுத்தி விடுகிறதா?எவரின் பிரிவும் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.

உங்கள் பிரிவின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்.
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 
ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,
அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும் 

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,
உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?.

Copied.