audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Friday, October 14, 2022

මල්ලි සෙල්ලම් දාන්න එපා 
✋ Don't mess with me 

පල් මෝඩයා 
✋ Damn fool 

முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ?

🟠சில நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ? 

🟠எடுக்கும் முடிவு சரியானதா/ பிழையாகி  விடுமோ என்ற பயம் ஏற்படுகிறதா ? 
 
சில நேரங்களில் நாங்கள் எங்கள் மிக முக்கியமான கனவுகளைத் தொடர/ முடிவுகளை எடுக்க  பயப்படுகிறோம், ஏனென்றால் இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என பயப்படுகின்றோம்  , எங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ எமது முடிவுகள் திருப்பதி அடையச் செய்யாமல் இருந்து விடுமோ என்ற பயம் , இவ்வாறான உணர்வுகளின் விளைவுதான் என்ன ? இவ்வாறான சிந்தனை போராட்டம் எமது உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் அதிருப்தி ஆகும் 

சில முடிவுகளின் போது . “அவர்கள் சிரிப்பார்கள்,என்ற உணர்வும்  ” “உங்களால் அதைச் செய்ய முடியாது,” “நீங்கள் நிபுணர் அல்ல” என்ற மற்றவர்களின் எதிர்மறையான சிந்தனைகளும்  அல்லது “மோசமான ஒன்று நடந்து விடுமோ ."என்ற எமது பய உணர்வும் எம்மை ஆட்கொள்ளும் .

இங்குதான் நம் பயங்களுக்கும்  நம்முடைய உள் உணர்விற்கும் இடையில்  உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது உள் உணர்வு  ஒருபோதும் கொந்தளிப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தாது. எடுத்துக்காட்டாக, பயம் என்ற உணர்வுதான்  “இதைச் செய்யாதீர்கள் - அது வெற்றியளிக்காது ” என்று சொல்லும், அதே நேரத்தில் உங்கள் உள் வழிகாட்டுதல், “இது செயல்படவில்லை என்றால், அடுத்த  திட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று சொல்லும். எதிர்மறை சிந்தனைகள்  பயமுறுத்தும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, உள்ளுணர்வு  நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்துகிறது.
நம்முடைய சுய விழிப்புணர்வைத் தட்டுவதன் மூலம் இந்த இரண்டு குரல்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூற நாம் கற்றுக்கொள்ளலாம் - நம்மைப் பற்றிய அறிவு. 
நாம் யார் ?
• எனக்கு உணமையில் என்ன தேவை?
• எனக்கு பிடித்த விடையங்கள் என்ன?
• எனக்கு அமைதி அழிப்பது எது?
• என்னை விரும்புவார்கள் யார்?
• நான் யாரை அதிகம் நேசிக்கிறேன்?
• நான் எதிர்காலத்தி என்ன நிலையை அடைய  வேண்டும்?
• உங்களை அதிகம் கவலை அடைய  செய்வது எது?
• , சமூகத்துடன் எனது தொடர்பு எவ்வாறானது?
• எனக்கு உண்மையில் எதற்கு பயம்  தோல்விக்கா / தோல்வி பயத்திற்கா?
• நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்?
என்பது பற்றிய அறிவு. வலுவான மற்றும் ஆரோக்கியமான சுய விழிப்புணர்வை உருவாக்க இந்த வினாக்களுக்கு விடையை தேடலாம் . இந்த ஞானத்தைப் பயன்படுத்தி, உங்கள் உள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். இதைப் பற்றி உங்கள் உள்ளுணர்வு, உங்கள் உள் வழிகாட்டி அல்லது திசைகாட்டி என்றும் நீங்கள் சிந்திக்கலாம்.

Thursday, October 13, 2022

என்னால் முடியும்

யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது.

இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.
ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம்.
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.நம்மலால் முடியாது என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.

அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய  மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
 காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது.
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.

எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சி,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.

ஒருவகையில் நாமும் அந்த யானையை போலத்தான்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கைகுறைவிலேயே இருந்துவிடுகிறதோ அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாது,நமக்கு சரிபட்டு வராது,நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நம்மை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.

என்னால் முடியும்,
இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது,இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.

#என்னால் முடியும்#

கண்ணாடி தத்துவம்


=================
ஒரு வயதானவர் அடிக்கடி  கண்ணாடியைப் பார்ப்பார்.

பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். 

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் 
குறு குறுப்பு.

அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?

பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 

ஒரு வேளை மாயாஜாலக் கண்ணாடியோ?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..,

 பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில்

இருப்பது கண்ணாடி தானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?” 

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், 

நீ பார்த்தால்
 உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“ சாதாரணக் கண்ணாடிதான், 

ஆனால் 

அது தரும் பாடங்கள் நிறைய!”

பாடமா… ??? 

கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? 

அப்படிக் கேள்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” 

எத்துணை ஆழமான உவமை இது!

இந்த உவமையில் என்ன இருக்கிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், 

எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் 

என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.”

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. 

அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை,  குறைப்பதும் இல்லை. 

உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.

துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

 அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. 

நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். 

அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. 

இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

அப்புறம்?

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! 
மாறாக அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். 

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். 

அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும்.

இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! 

அருமையான விளக்கம்.

 நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! 

அப்பப்பா!”“ 

யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்

“இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம்  இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்..
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை...
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும்,உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.

இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?..
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று 
கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே..

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு..

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, 
தன் குணம் என்ன?, என்பதை ஒருநாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம்.. கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. 

கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக்கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும்துன்பமானாலும்
அதை நீயே சந்திக்ககற்றுக்கொள்.
அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். 

அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்.
பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.k

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
உன் கண்ணீரும் உன் கவலையும்
உன்னை பலவீனமாக காட்டிவிடும்...
அழுவதாலும் சோர்ந்து போவதாலும்
ஒன்றும் நடக்கப்போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.p

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
உனக்கு தெரிந்த வரை நீ அறிந்த வரைr
யாருக்கும் எந்த உயிருக்கும்,எந்த வகையிலும் நன்மை மட்டுமே செய்...
ஒரு ஆண்மகன் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய  விஷயங்கள் ....

வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், மகிழுந்து இந்த இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வீட்டில் tube light மாட்டவாவது தெரிந்திருந்தால் சிறப்பு.

இரண்டே இரண்டு உடைகள் வைத்திருந்தாலும் அதை கூட எப்படி நேர்த்தியாக அணிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குளித்து, முடி வெட்டி, தலையை சீவி (முடி இருந்தால்) கை நகங்களை அழுக்காக வைத்திருக்காமல் இருக்க வேண்டும். பக்கத்தில் வந்தாலே, ஒருவிதமான நாற்றம் அடித்தால் வெறுப்பாக இருக்கும். இதில் சிலர் ஒரே ஒரு விரல் நகத்தை மட்டும் பெரிதாக வளர்த்து இருப்பார்கள். ;(

Smart and shrewd - தற்போது இருக்கும் காலத்தில் இதுபோல இருந்தால் மட்டுமே எடுபடும். பச்ச புள்ளையாட்டம் இருந்தால் அவ்வளவு தான். Too nice guys' தற்போது தடுமாறுகிறார்கள்.

பெண்ணுக்காக அலைபவரை ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். உங்கள் பார்வை மார்பகத்தில் இருந்தால் ஒரு நொடியில் கண்டு பிடித்து விடுவார்கள். எந்த பெண்ணையும் தனியாக சந்தித்தால் மிக மிக கவனமாக இருங்கள். நீங்கள் தவறே செய்யாவிட்டாலும், ஒரு பெண் சொன்னால் இந்த சமூகம் உடனே நம்பும்.

உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட்டு, தொப்பை இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு. சிகரெட், தண்ணி இல்லையா? நீங்கள் ஒரு ஜெம்.

அந்தப் பெண்ணுக்காக என்ன வேணா செய்வேன் சார்" என்று சொல்லும் ஆண்கள் அபாயம். எப்போது ஒரு பெண்ணிடம் இருந்து விலக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். விசமான பெண்களை நீங்கள் எவ்வளவு தான் உண்மையாக காதல் செய்தாலும் சரி வராது. தெருவில் தான் நிற்க வேண்டும்.

எனக்கு சாம்பார் ரசம் மட்டும் தான் வைக்க தெரியும் என்கிறீர்களா? போதும். குறைந்த அளவிலான சமயல் தெரிந்திருந்தாலும் கூட நல்லது. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு தான் காசு கொடுத்து வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் குவாலிட்டி கிடைக்காது.

Crime never pays. எந்த குற்றத்திலும் உங்களை ஈடுபடுத்தி கொள்ளாதீர்கள். மீண்டு வருவது கடினம். வந்தால் கூட சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரும்.

உணர்வுகளை கட்டுபடுத்த கற்றுக்கொள்ளுங்கள். இங்கே தான் எல்லா இடங்களிலும் தவறுகள் நடக்கிறது. Impulse control, desire control, thought control இது போல எல்லாமே.

(இந்த கருத்துகளுக்கு பெண்களும் தற்போது அடக்கம்.)


விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம்.

விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம். Dr M.J.M. Suaib இன் நாள் குறிப்பேட்டில் இருந்து…
50 வயது நாடோடிக் குடும்பத்துப்பெண் மூச்செடுப்பதில் கஷ்டம், கழுத்து மற்றும் நெஞ்சு இருகிக் கொள்கிறது என்று காலை நேரம் எங்கள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள்.

கண்களை அகலத் திறந்தவளாக அவசர அவசரமாக ஆழமற்ற மூச்சுக்களை எடுத்தவளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆரம்பச் சோதனையில் என்ன நிலைமை என்பதை ஊகிக்க முடியவில்லை. மாலையாகும் போது அவளின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. மூச்சு விடுவதில் கஷ்டம் அதிகரிக்க, எதையுமே உண்ண முடியாது, குடிக்க முடியாது என்றாகி விட்டது. சிறு புத்தகத்தை விசிறும் போது வருகிற சிறு காற்றுக்குக் கூட மிக எரிச்சலடைந்து (irritable) பதறுபவளாக இருந்தாள்.

நீரை வாய்க்கெடுத்து மிகக் கஷ்டத்தோடு விழுங்கி உடனே மூச்செடுக்க முடியாமல் வாந்தியெடுத்தவள் நேரஞ் செல்லச்செல்ல நீரை வாய்க்கெடுக்கவும் மறுத்தாள்.

(இப்போது நிலைமை இது தான் என்பதை ஊகித்துக் கோண்டோம்)

இரவாகும் போது நிலைமை மிகமிக மோசமானது. ஜன்னலூடாக வருகிற காற்றுக்கு துடித்து விடுவாள், நீரைக் காணும் போதே உதறிவிட்டு மூச்செடுக்கக் கஷ்டப்படுவாள். மனித நடமாட்டங்களையோ வெளிச்சத்தையோ காணும் போதும் சத்தங்களைக் கேட்கும் போதும் எரிச்சலடைந்து தடுமாறுவாள். அருகே போனால் பாய்ந்து கடிக்கவும் முற்படுவாள். இடைக்கிடையே வலிப்பும் வந்து போனது. இக்காட்சிகளைக் காணுகிற போது இதற்கு மருத்துவமுமில்லை, சாவும் நிச்சயம் என்பதால் மிகவும் கவலையாக இருந்தது.

இனி செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அவளை இலகுவாக மரணிக்க விடுவது தான் (கருணைக் கொலை செய்வதல்ல, வரப்போகும் மரணத்தை இலகுவாக்குவது.)

கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்ட நிலையில் வாட்டின் ஒரு மூலையில் அவள் தனித்து வைக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டு மின்விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் நிறுத்தப்பட்டு காற்றும் வெளிச்சமும் சத்தங்களும் எவ்வித அசைவுகளையுங் காணாத படி கருப்புப் பொலிதீனை அவளைச்சுற்றிக் கட்டி அமைதியான சூழல் வழங்கப்பட்டது. அவளது எரிச்சலைக் குறைத்து அமைதியடையவும் தூங்க (sedation) வைக்கவுமென ஒரேயொரு ஊசி மருந்து மட்டுமே இடைக்கிடையே போடப்பட்டது. அதுவும் முழு அமைதியடைந்தவளாக இருக்கவில்லை.

மறுநாள் காலை எதிர்பார்த்த படி மூச்சு விட முடியாமலேயே மரணத்தைத் தழுவினாள்!!!

முதன்முதலில் காற்றுக்குப் பயந்தமை (aerophobia) நீரை வெறுத்தமை (hydrophobia) என்பன rabies எனும் விசர் நாய்க்கடி/ நீர் வெறுப்பு நோய்க்கே உரிய பண்புகளாதலால் நாய்க்கடி நிகழ்ந்ததா என குடும்பத்தில் அனைவரிடமும் தீர விசாரித்தோம். நீண்ட நேரம் யோசித்த அவளது கணவன் சொன்னார், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தோடு நாடோடிகளாகத் திரிந்த பின் ஓரிரவு வாரியபொல வாரச் சந்தைக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாய்க்குட்டி அவளைக் கடித்ததாம்!

 

இது தான் விசர் நாய்க்கடி நோயின் மேலோட்டமான கோரம், எல்லாக் குணங்குறிகளும் இங்கு சொல்லப்படவில்லை.

எல்லா மரணங்களிலும் மரண வேதனையை அனுபவிப்பது மரணிப்பவர் மட்டுமே என்றாலும் இவ்வகை மரணத்தைக் காண்பவர்களுங் கூட வேதனையை உணர்கின்றனர்.

ரேபீஸ் நோய்த் தொன்றுக்குள்ளான நாய் கடித்தால் 2 வாரங்களுக்குள் அந்நாய் மரணிப்பதோடு உரிய மருத்துவம் பெறப்படாவிடின் கடிபட்டவரும் நோய் தொற்றினால்  மரணித்தே விடுவது நிச்சயம்.

இந்நோயை வருமுன் (நாய் கடித்தவுடன்)  இரு வகை ஊசி மருந்துகள் மூலம் காக்க முடியுமே தவிர வந்த பின் குணப்படுத்த முடியாது.