காரணம் தெரியாத மனச் சோர்வா? உற்சாகம் இல்லாதது போலவும் வாழ்வே வெறுமையாக உள்ளதுபோலவும் திடீரென உணர்கிறீர்களா?(feeling low/ feeling down), சில நிமிடங்களை ஒதுக்கி பின்வரும் முறைகளை கடைப்பிடித்துப் பாருங்கள்:
1)இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியான சம்பவங்கள், வெற்றிகள், மகிழ்ச்சி தந்த வசதி வாய்ப்புக்கள் என்பவற்றை ஒரு பேப்பரில் சுருக்கமாக எழுதுங்கள் ( உதா: எனது மகன் பிறந்த வேளை, பல்கலை அனுமதிக்கடிதம் வந்த நாள், காதலி ஓ.கே சொன்ன நேரம், முறை😜) எழுதும்போது அவற்றை மனதில் இரைமீட்டுக் கொள்ளுங்கள். அப்போது அடைந்த அந்த சந்தோசத்தை நினைத்துப்பாருங்கள்.
எவ்வளவு அதிகமன சம்பவங்களை நினைக்கிறீர்களோ அவ்வளவு நன்று. இந்த செயற்பாட்டுக்கு நேர எல்லை கிடையாது. (ஒரு அரை மணி நேரத்தை சராசரியாகக் கொள்ளலாம் )
2) மேற்படி செயன்முறையைத் தொடர்ந்து 20 - 30 நிமிட நேரம் வரை உங்கள் உடலை அசைவில் வைத்திருங்கள். நடக்கலாம், சைக்கிள் ஓட்டலாம் அல்லது உங்களிற்கு ப் பிடித்த எந்த ஒரு விளையாட்டிலோ உடற்பயிற்சியிலோ ஈடுபடலாம்.
3) இந்தப் படிமுறை போனஸ் ( முடிந்தால் செய்யுங்கள்) 10 நிமிடங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து( வசதிப்பட்டால்) கண்களை மூடியபடி, நிதானமாக சுவாசித்தபடியே மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் விடாது அவதானியுங்கள்.
இப்போது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் காரணம் தெரியாத மனச்சோர்வு ஓடிவிட்டதல்லவா? இது கண்டிப்பாக வேலை செய்யும் முயன்று பாருங்கள்.
மிகச்சிறிய சிந்தனை மாற்றம், உடற் செயன்முறை மாற்றம் மூலமாக நம் உடல் உளச் செயற்பாட்டில் பெரிய அளவு சாதகமான மகிழ்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
It is a very effective self healing method (therapy) based on the principles of positive psychology, a very new sub discipline of psychology.