அகத்தியர்
இன்று அகத்தியர் அருளிய மருந்தொன்றினைப் பற்றி பார்ப்போம்.இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....
வேமப்பா விஷங்களுக்கும் குழம்பு கேளு
வேப்பம்முத்து ரசகெந்திது ருக வெள்ளை
வெள்லையோடு மனோசிலையும்பெருங் காயமேழு
மேன்மையாய் வகைக்கரைக்க ழஞ்சு கூட்டி
தள்ளையென்ற நேர்வாளஞ் சுத்தி செய்து
தருவாகக் கழஞ்சதுவு மேழு மொன்றாய்
வள்ளவே கல்வத்திலிட் டெருக் கம்பால்
மாட்டியரை ஒருசாமமெ ழுகு போல
துள்ளவே பின்புநிம்ப நெய்தான் விட்டுத்
துருசாக வொருசாமம ரைத்துக் கேளே.
அரைத்துமதைக் கொம்புச்சிமிழ் தன்னில் வைத்து
அப்பனே விஷந்தீண்டி வந்த பேர்க்கு
திறத்துடனே பயிறளவுவெற்றி லையில் லீய்ந்து
தீர்க்கமுடன் கடிவாயிற் கொஞ்சம் பூச
பறந்துவிடுஞ் சகலவிஷம் போகு மென்று
பரமனது வடமொழிநூல் பாக மப்பா
உரைத்துவிட்டேன் பத்தியத்தான்ப சுமோ ராகும்
உத்தமனே சந்நிக்குக லிக்கங் கேளே.
வேப்பம் முத்து, ரசம், கெந்தகம், துருசு, வெள்ளைப் பாடாணம், மனோசிலை, பெருங்காயம், ஆகியவற்றை வகைக்கு அரைக்கழஞ்சு அளவு எடுத்து, அதனுடன் சுத்தி செய்த நேர்வாளம் ஏழு கழஞ்சு சேர்த்து, இந்த கலவையை கல்வத்திலிட்டு, எருக்கம்பால் சேர்த்து ஒரு சாம நேரம் அரைக்க கலவையானது மெழுகு பதத்தில் வருமாம். அப்போது அதில் வேப்பெண்ணெய் விட்டு மேலும் ஒரு சாமம் அரைத்து எடுத்த மருந்தினை, கொம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மருந்து கெட்டியான மெழுகு பதத்தில் இருக்கும்.
எந்தவகையான விஷக் கடியாக இருந்தாலும், நாம் சேமித்து வைத்த மெழுகில் இருந்து பயறு அளவு எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து மடித்து பாதிக்கப் பட்டவரிடம் உண்னக் கொடுக்க வேண்டுமாம். பிறகு அந்த மெழுகில் இருந்து சிறிதளவு எடுத்து கடிவாயிலும் பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!
இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் பசு மோரை நீக்க வேண்டும் என்கிறார்.
- புலிப்பாணி சித்தர்.
புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.
- புலிப்பாணி சித்தர்.
எட்டிப் பழங்கள் சிலவற்றை எடுத்து ஒரு மண் சட்டியில் இட்டு, அது மூழ்கும் வரை வேப்பெண்ணெய் விடவேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி வேப்பெண்ணெய் வற்றும் வரை நன்கு காய்ச்சி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.
பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கி விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.
தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.
பாடியதோர் விசங்களெல்லாந் தீரவேதான்
பண்பாக எட்டிப் பழந்தன்னை வாங்கி
கூடியதோர் சட்டியிலே வேணமட்டுங்
குணமாகத் தானெடுத்து வேப்பெண்ணெய் விட்டு
நாடியே அடுப்பேற்றி வேகவைத்து
நலமாக உருட்டியதைச் செப்பில் மூடி
தூடியே விசந்தீண்டி வந்தபேர்க்குத்
தூதுளங் காயளவு கொடுத்திடாயே.
எட்டிப் பழங்கள் சிலவற்றை எடுத்து ஒரு மண் சட்டியில் இட்டு, அது மூழ்கும் வரை வேப்பெண்ணெய் விடவேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி வேப்பெண்ணெய் வற்றும் வரை நன்கு காய்ச்சி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.
பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கி விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.
தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.
தேரையர்
இந்த குறிப்பு தேரையர் அருளிய “தேரையர் வைத்திய காவியம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
எட்டிப் பழச்சாறுடன் அதற்கு சம அளவு வேப்பெண்ணெய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கி விடும் என்கிறார்.
இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.
நானறிந்த வரையில் இந்த மருத்துவ குறிப்பின் நம்பகத் தன்மை ஆய்வின் மூலம் உறுதி செய்யப் படவில்லை. எனவே சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.
பாம்புகள், தேள், விஷ வண்டுகள் போன்றவை கடித்தால் அதற்கான வைத்திய முறைகளை போகர் தனது "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
புகையிலையுடன் மயிலிறகின் நடுவில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவைகளைச் சேர்த்து சுருட்டி புகை குடிக்க விஷங்கள் நீங்குமாம்.
விஷக்கடி வாயில் உப்பை பொடியாக இடித்து வைத்து அதன் மேல் பூரத்தை சூடாக்கி வைத்து மூன்று கண்ணுடைய தேங்காய் சிரட்டையால் மூடி அதனை கட்டிவைத்துவிட விஷம் நீங்குமாம்.
விஷக்கடி வாயில் குரும்பியை தடவி துணியால் கட்டிவைக்க விஷம் நீங்குமாம்.
சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்து தின்றாலும், சீந்தில் தண்டில் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்குமாம்.
கொடிவேலிச் சாற்றை உண்ண பதினெட்டு வகை எலிவிஷங்கள் நீங்கும் என்கிறார் போகர்.
செப்பும் தோஷ சகல விஷங்கட்கு
வெப்பும் எட்டிப் பழச்சாறு வாங்கியே
துப்பும் வேப்பெண்ணெய் சரிசமன் கூட்டியே
கப்பு மெழுகுபோல் காச்சி வடித்திடே.
- தேரையர்.
வடித்துமே செப்பில் வாகாக மூடியே
துடித்த விஷங்கள் தீண்டின பேருக்கு
வெடித்த தூதளங் காயள வாகவே
நடித்து போதுண்ண நல்விஷந் தீருமே.
- தேரையர்.
எட்டிப் பழச்சாறுடன் அதற்கு சம அளவு வேப்பெண்ணெய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கி விடும் என்கிறார்.
இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.
நானறிந்த வரையில் இந்த மருத்துவ குறிப்பின் நம்பகத் தன்மை ஆய்வின் மூலம் உறுதி செய்யப் படவில்லை. எனவே சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.
போகர்
இந்த தகவல் போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
உண்டான விஷத்தையடா உண்மைகேளு
ஒருவருக்கும் ஆகாத பெட்டிதன்னை
கண்டவுடன் துளைசெய்து விளங்காய்போலே
கண்மணியே பழம்புளியை யுள்ளேவைத்து
மண்டலந்தான் சென்றெடுத்து எட்டியென்ற
மரத்தாலேசிமிள் ச்எய்து வைத்துக் கொள்ளு
சண்டாள விஷங்களப்பா யெதுவானாகும்
சாற்றிவிடு வெற்றிலையில் மிளகுபோலே.
மிளகுபோல் வெற்றிலையில் மடித்துக்கொள்ளு
மூன்றுநாள் கொடுத்துவிடு ஆறுவேளை
அவுடதத்திற்கும் பச்சரிசி கஞ்சியாகும்
அப்பனே முருங்கையிலை போட்டுக்காச்சு
உளவறிந்த உப்புதனைச் சேர்க்கவேண்டாம்
உத்தமனே பத்தியமதை பயமாய்க்காரு
களவான வீடதுபோல் விஷங்களெல்லாங்
கண்மறையப் போகுமடா உண்மைதானே.
எட்டி மரத்தில், விளாங்காய் அளவுள்ள துளை ஒன்றினைப் துளைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் பழப் புளியை கொட்டையை நீக்கிச் சுத்தம் செய்து, எட்டி மரத்தில் உருவாக்கிய துளைக்கு உள்ளே வைத்து, அந்த துளையினை எட்டி மர துண்டினால் ஆன தக்கையைக் கொண்டு நன்கு மூடிவிட வேண்டுமாம். பின்னர் நாற்பது நாள் சென்ற பிறகு எட்டி மரத்தில் இருந்து புளியை எடுத்து, எட்டி மரத்தினால் செய்யப்பட்ட சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
எந்தவகையான விஷக் கடியானாலும், சேமித்து வைத்த புளியில் இருந்து மிளகு அளவு எடுத்து, வெற்றிலையில் மடித்து பாதிக்கப் பட்டவரிடம் என்ன மருந்து என்று சொல்லாமல் உண்னக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு காலை மாலை என மூன்று நாட்களுக்கு, ஆறுவேளை உண்ணக் கொடுத்து வந்தால் களவு போன வீட்டைப் போல் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் காணாமல் சென்றுவிடும் என்கிறார்.
இதற்குப் பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாளும் உப்பு சேர்க்காது பச்சரிசியும், முருங்கையிலையும் போட்டு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்கிறார்.
பாம்புகள், தேள், விஷ வண்டுகள் போன்றவை கடித்தால் அதற்கான வைத்திய முறைகளை போகர் தனது "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
பாரப்பா புகையிலயு மயிலிரகினொடு
பண்பான வெள்ளெருக்கன் வேருங்கூடி
சீரப்பா சுருட்டிபுகை குடித்தாயானாற்
சிறப்பான கொட்டுவிஷ்ந் தீருந்தீரும்
சாரப்பா வுப்பதனைப் பொடித்துவைத்துச்
சார்வான பூரமது கொளுத்திவைத்து
நேரப்பா கண்சிரட்டைக் கொண்டுமூடி
நிலையாகக் கடித்தவிடங் கட்டப்போமே.
போமென்ற குரும்பியையுந் தடவிக்கட்டப்
பொல்லாத கொட்டுவிஷம் போகும்போகும்
நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால்
நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும்
வாமென்ற சடைச்சிவே ரரைத்துத்தின்ன
வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்
ஆமென்ற சீந்திற்றண்டின் பாலையுண்ண
வறியாத விஷங்களெல்லாம் வாங்கும்பாரே.
பாரென்ற வேலியதன் சாற்றையுண்ணப்
பதினெட்டு எலிவிஷமும் பரக்கும்பாரு.
புகையிலையுடன் மயிலிறகின் நடுவில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவைகளைச் சேர்த்து சுருட்டி புகை குடிக்க விஷங்கள் நீங்குமாம்.
விஷக்கடி வாயில் உப்பை பொடியாக இடித்து வைத்து அதன் மேல் பூரத்தை சூடாக்கி வைத்து மூன்று கண்ணுடைய தேங்காய் சிரட்டையால் மூடி அதனை கட்டிவைத்துவிட விஷம் நீங்குமாம்.
விஷக்கடி வாயில் குரும்பியை தடவி துணியால் கட்டிவைக்க விஷம் நீங்குமாம்.
சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்து தின்றாலும், சீந்தில் தண்டில் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்குமாம்.
கொடிவேலிச் சாற்றை உண்ண பதினெட்டு வகை எலிவிஷங்கள் நீங்கும் என்கிறார் போகர்.
No comments:
Post a Comment