audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 2, 2020

தும்மல் , இருமல் , மட்டும் இன்றி நுண்துளிகள் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு பரவும் கொரோனா வைரஸ்..! எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பானிய ஆய்வாளர்கள்…!!



இருமல் , தும்மல் , தவிர்த்து நுண்துளிகள் மூலமும் கொரொனா வைரஸ் பரவுவதாக ஜப்பானிய மருத்துவ ஆய்வாளர் இன்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது வரை இரண்டு முறையினால் அதாவது இருமல், மற்றும் தும்மலின் மூலம் மட்டுமே நேரடியாக தடைகளை மீறி கொரோனா தாக்கும் வாக்கு இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில்..
இன்றைய தினம் மூன்றவதாக நுண்துளிகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக ஜப்பானிய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தும்மல் மற்றும் இருமலை விட நுள் துளிகள் மூலம் பரவும் வேகமும் பலமும் அதிகம் என் கூறியுள்ள ஆய்வாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர் எதிரில் நின்று பேசும் போது நுண்துளிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டவை வெளிவருகின்றன.
காற்றில் கொரோனா வைரஸ் பரவாத நிலையில் நுண்துளிகளால் வைரஸ் சில மணி நேரங்கள் உயிர் வாழக் கூடியவை. அவை குறித்த இடத்திலேயே உயிருடன் இருக்கின்றன. இதனால் தும்மல் இருமலை விட நுண்துளிகள் மூலம் வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்த முறையில் வைரஸ் பரவினால் யாராலும் தடுக்க முடியாமல் போகும் என ஜப்பானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப் பட்டால் தயவு செய்து வைத்தியர்களை நாடுங்கள். உண்மை அறிகுறிகளை கூறி அரசுக்கு உதவுங்கள். எங்கள் கையை மீறி போகிறது இழப்புகள், ஜாதி, மதம் என்பதை மறந்து விடுங்கள். தயவு செய்து யாராவது பாதிக்கப் பட்டால் நீங்களாக மருத்துவமனை செல்லுங்கள். நாடு நம் ஒவ்வொருவர் கையில் உள்ளது. தயவு செய்து ஆபத்தை உணருங்கள்…!!

No comments:

Post a Comment