audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, March 23, 2023

திமிராய் வாழ்ந்து விடாதீர்கள். ஒருவேளை திரும்பிப் பார்ப்பதற்குள் வாழ்க்கை முடிந்து விடக்கூடும். மன்னிப்பை கொடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். தவறுகள் கண்டு கொள்ளாமல் நடந்தேறிக் கொண்டே இருக்கும். பிரியங்களை வெளிக்காட்டாமல் இருந்து விடாதீர்கள். பிரியும் நேரங்களில் கூட சொல்ல முடியாமல் போய் விடக்கூடும். துரோகங்களை சகித்துக் கொண்டே வாழ்ந்து விடாதீர்கள். நம்பிக்கை என்ற வார்த்தையே பொய்த்து விடக்கூடும். பிழைகளை சரி செய்ய மறந்து விடாதீர்கள். இல்லையெனில் சரியானவற்றை தவறாகச் சித்தரிக்கும் பழக்கம் எல்லோருக்குள்ளும் எழுந்து விடும். விரும்பியதைக் கற்றுக் கொள்ள முடியும். பிடித்ததை மற்றொரு முறை வாங்கிக் கொள்ள முடியும். அடுத்தமுறை தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் . இன்னொருமுறை வாழ்ந்து விட முடியாது. அவ்வளவு தான் வாழ்க்கை. நேசிப்பதற்கும்,நிராகரிப்பதற்கும் மட்டுமல்ல வாழ்க்கை. உங்களை நீங்களே ரசித்துக் கொள்ளவும் தான்.... வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்.

 திமிராய் வாழ்ந்து விடாதீர்கள்.

ஒருவேளை திரும்பிப் பார்ப்பதற்குள் 

வாழ்க்கை முடிந்து விடக்கூடும்.


மன்னிப்பை கொடுத்துக் 

கொண்டே இருக்காதீர்கள்.

தவறுகள் கண்டு கொள்ளாமல் 

நடந்தேறிக் கொண்டே இருக்கும்.


பிரியங்களை வெளிக்காட்டாமல் 

இருந்து விடாதீர்கள். 

பிரியும் நேரங்களில் கூட சொல்ல 

முடியாமல் போய் விடக்கூடும்.


துரோகங்களை சகித்துக் கொண்டே

வாழ்ந்து விடாதீர்கள்.

நம்பிக்கை என்ற வார்த்தையே

பொய்த்து விடக்கூடும்.


பிழைகளை சரி செய்ய மறந்து விடாதீர்கள்.

இல்லையெனில் சரியானவற்றை 

தவறாகச் சித்தரிக்கும் பழக்கம் 

எல்லோருக்குள்ளும் எழுந்து விடும்.


விரும்பியதைக் கற்றுக் கொள்ள முடியும்.

பிடித்ததை மற்றொரு முறை 

வாங்கிக் கொள்ள முடியும்.

அடுத்தமுறை தவறுகளைத்

திருத்திக் கொள்ள முடியும் .


இன்னொருமுறை வாழ்ந்து விட முடியாது.

அவ்வளவு தான் வாழ்க்கை.


நேசிப்பதற்கும்,நிராகரிப்பதற்கும் 

மட்டுமல்ல வாழ்க்கை.

உங்களை நீங்களே ரசித்துக் கொள்ளவும் தான்....

வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்.



#பிரதி

Friday, March 17, 2023

 #வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.


#உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!


#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்.


கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.

எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம்.


#பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து #பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.


பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.


பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....


நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....


இதற்கு மற்றொரு பெயர் “#வஜ்ஜிரவல்லி” தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ...


Wednesday, March 15, 2023

Six Leadership Principles that we can learn from an Eagle

 Six Leadership Principles that we can learn from an Eagles


1. Eagles fly Alone and at High Altitudes.

They don't fly with sparrows, ravens, and other small birds.


MEANING; Stay away from narrow-minded people, those that bring you down. Eagle flies with Eagles. Keep good company.


2. Eagles have an Accurate Vision. They have the ability to focus on something as far as 5km away. No matter the obstacles, the eagle will not move his focus from the prey until he grabs it.


MEANING; Have a vision and remain focused no matter what the obstacles and you will succeed.


3. Eagles do not Eat Dead things. They Feed only on Fresh Prey.


MEANING; Do not rely on your past success, keep looking for new frontiers to conquer. Leave your past where it belongs, in the past.


4. Eagles Love the Storm.

When clouds gather, the eagle gets excited, the eagle uses the storms wind to lift itself higher. Once it finds the wind of the storm, the eagle uses the raging storm to lift itself above the clouds. This gives the eagle an opportunity to glide and rest its wings. In the meantime, all the other birds hide in the branches and leaves of the tree.


MEANING; Face your challenges head on knowing that these will make you emerge stronger and better than you were. We can use the storms of life to rise to greater heights. Achievers are not afraid to rise to greater heights. Achievers are not afraid of challenges, rather they relish them and use them profitably.


5. Eagles Prepare for Training;

They remove the feathers and soft grass in the nest so that the young ones get uncomfortable in preparation for flying and eventually flies/ when it becomes unbearable to stay in the nest./


MEANING; Leave your Comfort Zone, there is No Growth there.


6. When the Eagle Grows Old,

His feathers becomes weak and cannot take him as fast and as high as it should. This makes him weak and could make him die. So he retires to a place far away in the mountains. While there, he plucks out the weak feathers on his body and breaks its beaks and claws against the rocks until he is completely bare; a very bloody and painful process. Then he stays in this hiding place until he has grown new feathers, new beaks and claws and then he comes out flying higher than before.


MEANING; We occasionally need to shed off old habit no matter how difficult, things that burden us or add no value to our lives should be let go of.


Keep following Dr Fami

Tuesday, March 14, 2023

10 Lessons From How To Win Friends and Influence People by Dale Carnegie.

 10 Lessons From How To Win Friends and Influence People by Dale Carnegie. 


1. Read and Apply What You Learned 


“Only knowledge that is used sticks in your mind.”


Read widely. Apply obsessively. 


2. Be A Good Listener 


Good conversationalists start by being good listeners. Learning to listen well is key to human relationships.


If you show genuine interest in them, you will be showing that you also think those things are important.


3. Focus on Your Similarities When In Disagreement 


If you are having a disagreement with someone, you start on common ground and ease your way into the difficult subject and not the other way around.


4. Be Quick To Acknowledge Your Own Mistakes   


Nothing will make people less defensive and more agreeable than you being humble and reasonable enough to admit your own mistakes.


5. Remember Their Name   


Remembering people’s names when you meet them is difficult. 


You casually meet a lot of people so it’s challenging but if you can train yourself to remember people’s names


It makes them feel special and important.


6. Be Generous With Praise


You won't find any person, however great or exalted in their station who did not do better work and put forth greater effort under a spirit of approval than they would ever do under a spirit of criticism. Praise people for the little they do, and they will do more. 


7. Make People Feel Important  


If you make people feel important, how you walk through the world will be an exponentially more pleasant and incredible experience.


8. Always wear a smile. 


“If you have only one smile in you, give it to the people you love.”


9. Be understanding and forgiving 


“Any fool can criticize, complain, and condemn—and most fools do. But it takes character and self-control to be understanding and forgiving.”


10. Life is All About Give and Take 


“By fighting you never get enough, but by yielding you get more than you expected.” Make some concessions. Give some. Win some.


KEEP FOLLOWING Dr Fami

"Mind management not time management

 "Mind management not time management


1. Being productive today isn't about time management, it's about mind management.


2. Time management optimizes the resource of time. Mind management optimizes the resource of creative energy.


3. Not all hours are created equal: If you write for an hour a day, within a year you'll have a book. But you can't instead simply write for 365 hours straight, and get the same result.


4. The First Hour Rule is simply this: Spend the first hour of your day working on your most important project.


5. If you start your day working on the most important thing, there's less of a chance for other things to get in the way.


6. Sometimes your mind is better-suited to think creatively. Sometimes your mind is better-suited to think analytically.


7. The point of time is not to fill as much life as possible into a given unit of time. The point of time is to use time as a guide to living a fulfilling life.


8. A one-hour increase in average daily sleep raises productivity by more than a one-year increase in education.


9. When you randomly switch from one activity to another, your energy leaks...If you're doing that all the time, little of your energy is going toward traction.


10. A Harvard study found that the busier knowledge workers were, the less creative they were; this study found that as workers became more busy , they did less creative thinking activities such as; brainstorming. They reported fewer insights and their work was also rated as less creative by their colleagues .


11. Noise level can also affect your ability to think creatively...studies suggest that a background noise level of about seventy decibels is optimal for idea generation.


12. Things are not difficult to make; what is difficult is putting ourselves in the state of mind to make them."


Keep following Dr Fami

Some interesting facts you need to know

 Some interesting facts you need to know 

 

1. If you speak too much, you will lie.


2. If you think too much, you will be depressed.


3. If you cry too much, you will lose your sight.


4. If you love too much, you will be lost.


5. If you care too much, you will be taken for granted.


6. If you play too much, you will not be taken serious often.


7. If you trust too much, you will be betrayed.


8. If you eat too much, you will be obessed


9. If you sleep too much, you will be idle.


10. If you spend too much, you will have no future.


11. If you wear make up too much, you will lose your beauty.


12. If you look too much, you will lose your focus.


13. If you pursue life too much, you will lose everything.


And lastly...


14. If you expect too much, you will be disappointed. Don't be too much because that too much can hurt you so much.



Monday, March 6, 2023

 மிகப்பெரிய கோபக்காரங்களை பார்த்துருக்கீங்களா?


அவங்களை நல்லா கவனிச்சு பாருங்களேன்.


காட்டுக்கத்தலா கத்துவாங்க,

எடுத்தெறிஞ்சு பேசுவாங்க,என்ன பேசறோம்னு கூட தெரியாத அளவுக்கு வார்த்தைகளை விடுவாங்க,

அழுவாங்க. சீக்கிரம் உடைஞ்சு போவாங்க, தனியா பேசுவாங்க, அவசரப் படுவாங்க.தன் பக்கத்து நியாயத்தை எப்படி வெளிப் படுத்தனும்னு தெரியாம, தான் பேச வந்ததை கோபத்தால் மாத்தி கெட்ட பேரு வாங்கிட்டு போவாங்க.


ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க.முக்கியமா நடிக்க மாட்டாங்க.


ரோட்ல வண்டியில் போகும்போது யாராவது பின்னாடி இருந்து வேகமா ஹாரன் அடிச்சா கையசைச்சு போகவிடுவாங்க.


லைன்ல நிக்கும் போது யாராவது பின்னாடி இருந்து அவசரபடுத்தினா வழிவிடுவாங்க.


யாராவது எங்கேயோ கஷ்டபட்டா யாராவது எங்கேயோ வலிச்சா , டிவியில சீரியல்ல யாராவது வேதனைப் பட்டா இங்கே இவங்களுக்கு வலிக்கும்.


துடிச்சு போவாங்க..

பாவம் இல்லனு தனக்குள்ளே பேசி முனறுவாங்க.

வளர்ந்த குழந்தை போல இருப்பாங்க.


ரொம்ப அமைதியா இருப்பாங்க,அதிகமா தனிமையை நாடுவாங்க,

எல்லோரையும் நேசிப்பாங்க.


தனக்குன்னு இருக்கிற உயிரை 'தனக்கு மட்டும் தான்' னு நினைச்சு உருகிடுவாங்க.


எத்தனையோ நெகட்டீவ் அவங்க மேலே இருந்தாலும் ஒரேயொரு விஷயம் அவங்களை முன்னிருப்பு செய்யும்.


அது 


அடுத்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டாங்க எப்போதும். முதுகில குத்தவே மாட்டாங்க உயிரே போனாலும்...

 விருந்தும் மருந்தும்.!!!!


எவ்ளோ  நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர்

வீட்டில்  விருந்தாளியாக இருக்கக்

கூடாது.!! அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு  அழகு.!!!!


.  நோய்வாய்பட்டால்3 நாள் மருந்து

சாப்பிட்டாலே குணம்  ஆக வேண்டும்.

அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு." விருந்தும் மருந்தும்

மூன்று நாளைக்குத்தான்" என பழமொழி இருக்கும் பொழுது மாதக்

கணக்கில்  மருந்து எடுத்துக்கொள்வது

சரியா.????


இந்த பழமொழியை  கேள்விப்படும் 

போதெல்லாம், ஒரு அருமையான கதை

நினைவில் வருகிறது..


ஒருத்தன் தன் தாயிடம் சென்று" அம்மா

என்னை என் மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள் .

போயிட்டு வரட்டுமானு அனுமதி கேட்டான். தாயும் சரி என்று சொல்ல,

அம்மா எப்போ நான் திரும்பி வர என்று

 மகன் கேட்க,  அதற்கு அந்த தாய்,

" எப்பொழுது உன் முகம் உனக்கு 

தெரிகிறதோ அன்று வந்துவிடு.

அதற்கு மேல்  ஒரு நாள் கூட அங்கே 

தங்க வேண்டாம்"  னு சொல்லி

அனுப்பினாள்.!!!


தாய் என்ன சொன்னாள் என்று புரியாமல் மகனும், மனைவியை 

அழைத்துக்கொண்டு விருந்துக்கு 

சென்றான். அங்கே தடல்புடலாய் 

விருந்து உபசரிப்பு.!!!!!


பெரிய தலை வாழை இலை போடப்பட்டு

விருந்து பரிமாறப்பட்டது.இலையில் 

வைக்க இடம் இல்லை.அத்தனை வகைகள்.!!!கோழி,மீன்,முட்டை,மட்டன்

என்று அனைத்தும் பரிமாறப்பட்டது.

அவனுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.!!!!


இரண்டாம் நாளும் எல்லாம் இருந்தது.

மட்டனை தவிர.அப்படியாக ஒவ்வொன்றாக ,ஒவ்வொரு ஐட்டமாக

ஒவ்வொரு நாளும் குறைந்தது .6ம் நாள்

உணவில் சைவ உணவு. சாம்பார் ஒரு

பொரியல்,ஒரு கூட்டு.!!!!


ஏழாம் நாள் இலையே இல்லை.தட்டில்

சோறு,சாம்பார். உடன் ஒரே ஒரு பொரியல்.8 ம் நாள் சாம்பார் சாதம்

மட்டுமே. இதை எல்லாம் பொருட்

படுத்தாமல் அவனும் அதை சாப்பிட்டான்.( காரணம் அந்தக்

காலத்தில் சின்ன வயதில் திருமணம் செய்து விடுவார்கள்.ஒரு மெச்சூரிட்டி

இருக்காது.!!!!)


  9 ஆம் நாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. தட்டில் கஞ்சி சோறு,தொட்டுக்க  ஊறுகாய். பசியில்

அதையும் சாப்பிடுவதற்கு தலையை

குனிஞ்சா , அந்த கஞ்சி தண்ணியில்

அவன் முகம் தெரிந்தது.!!!!


அப்போ தான் அவன் அம்மா சொன்னது

நினைவுக்கு வந்தது.அவனும் இனிமேல்

இங்கே இருந்தா நமக்கு மரியாதை

இல்லை என்று உணர்ந்து, தன் வீட்டுக்கு

கிளம்பி விட்டான்.!!!!


( விருந்தும் மருந்தும் மூன்று நாள் )

 அடேங்கப்பா.. இது நம்ம வீட்டுல பொறந்த புள்ள நிகழ்த்திய சாதனை போலதான் மிகவும் பிரமிப்பா இருக்கு...  இத படிக்கவே... கேட்கவே அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு.  


"2013, February 27 இதே நாள் இதே நேரம் சென்னையில் அடியெடுத்து வைத்தேன். 10 வருட சென்னையில் Professional Career வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறேன்.


இதென்ன அவ்வளவு பெரிய விஷயமா எனக் கேட்டால் எனக்கு இது வாழ்நாள் கனவு. 


நான் பள்ளி படிப்பு மற்றும் யூஜி படிப்பை அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவள்.


கிருஷ்ணகிரி போன்ற சிறிய ஊரில் இருந்து அரசு பள்ளி மாணவியாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி இன்று பிபிசி வரை வந்தருக்கும் இந்த 17 வருட பயணம் எனக்கு கொடுத்த படிப்பினைகள் ஏராளம்.


இந்த 17 வருடத்தில் நான் காதில் அதிகம் கேட்ட வார்த்தைகள் என்ன தெரியுமா?


01. பொம்பள புள்ளைக்கு எதுக்கு இவ்ளோ படிப்பு?


02. கல்யாணம் பண்ண போற புள்ளைக்கு எதுக்கு கம்ப்யூட்டர் படிப்பு?


03. நீ என்ன பிபிசி கா போக போற.. எதுக்கு Reporter வேலை?


04. ஓ மீடியா வேலையா? அப்போ எவனையோ இழுத்துட்டு ஓடதான் போகப்போறா? பெத்த கடமைக்கு சீக்கிரம் எவனையாவது பாத்து கட்டி வச்சிருங்க. நம்ம கடமையை முடிச்சாதான் நமக்கு நிம்மதி?


05. உள்ளூர் சேனல் ல வேலை பாக்குற உனக்கு சென்னையை பத்தி என்ன தெரியும்? நீ Chennai க்கான Anchor கிடையாது. உனக்கு வரவும் வராது. ஒழுங்கா இங்கேயே இருந்தா மாசம் 8000 சம்பாதிக்கலாம்.


06. இதெல்லாம் எவ்ளோ நாளைக்கு? கல்யாணம் முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது.


07. அரசியல் பெண்களுக்கு பேச வராது. அதனால நீ entertainment Show பண்ணு.


08. ஓ கல்யாணம் ஆகிருச்சா? இனி அவ்ளோதான். Gym லாம் போக முடியாது. பேசாம வீட்டு வேலை பாக்குறது உனக்கு நல்லது.


09. ஓ சிசேரியன் ஆ.. அவ்ளோதான் முடிஞ்சது. இனி எந்த வேலையும் பண்ண முடியாது.


10. ஒரு நிறுவனம் தான் உனக்கு அடையாளம். அதுல இருக்கிற வரை தான் உனக்கு மரியாதை. அதை விட்டுட்டு வெளியே போயிட்டா அவ்ளோதான் முடிஞ்சது. இனி Career லாம் தனியா Build பண்றது கஷ்டம். உன்னால கண்டிப்பா முடியாது


ஆனால் நடந்தது என்ன?


HemaRakesh - | Journalist | Anchor | News Reader | SubEditor | Content Writer | Documentary Film Director | Event Host | Mentor | Motivational Speaker | YouTuber | Digital Entrepreneur | Digital Media Consultant.


எனது கல்வி..


M.HemaRakesh , M.A, B.Ed ( English Literature)


🛑MBA ( Human Resource)

🛑PG Diploma in Computer Applications

🛑PG Diploma in English Language & Communication

🛑Diploma in Journalism & Mass Communication 

🛑Certificate Course in French Language

🛑Certificate Course in Spoken English

🛑Certification in Digital Marketing 


என் பணி அனுபவம்.


2004 இல் பள்ளியில் படிக்கும்போது தினம் காலை Prayer இல் மாணவ செய்தி வாசிப்பாளர், விடுமுறை தினத்தில் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்.


கல்லூரியில் இளங்கலை படிக்கும் போது தமிழன் மற்றும் வைகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்.


முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போது சேலம் பாலிமர், CTN, SS TV, Ashoka TV இல் நிகழ்ச்சி தொகுப்பாளர்.


மேல் சொன்ன அனைத்தும் பகுதி நேரம்.


முழுநேரமாக Lotus News தொலைக்காட்சியில் உதவி ஆசிரியர் & செய்திவாசிப்பாளர் பணியில் சேர்ந்து


தந்தி தொலைக்காட்சியில் மூத்த செய்திவாசிப்பாளர், அரசியல் நிகழ்ச்சி விவாத நெறியாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


காவேரி நியூஸ் தொலைக்காட்சியில் - இணையதள செய்தி ஆசிரியர், அரசியல் நிகழ்ச்சி விவாத நெறியாளர், பிரேக்கிங் நியூஸ் தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் இணையதள செய்தி ஆசிரியர், அரசியல் நிகழ்ச்சி விவாத நெறியாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


குமுதம் டிஜிட்டலில் Deputy டிஜிட்டல் செய்தி ஆசிரியர் , நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


என பயணித்து இப்போது பிபிசி தமிழுக்காக சென்னையில் இருந்து ப்ரீலான்ஸ் செய்தியாளர், மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரிகிறேன்.


இது Self Promotion ஆ என கேட்டால் ஆமாம். ஆனால் எனக்கானது அல்ல. என்னை போன்று சிறிய ஊர்களில் இருந்து வருபவர்களுக்கும், சென்னை நமக்கானது அல்ல என்று நினைக்கும் சில அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், பெண் என்றால் திருமணம் தான் அவள் கடைசி முடிவு என நினைப்பவர்களுக்கும் அஅதை சொல்ல நினைக்கிறேன். 


என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்


01. என்ன தடங்கல் வந்தாலும் கல்வி பயலுங்கள்.


02. ஊரே புறம் பேசினாலும் உங்களை நம்புங்கள்.


03. திருமணம் வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர முடிவு கிடையாது.


04. வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருந்தால் தவறு.


05. சின்ன வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்துங்கள்.


06. எந்த வேலையிலும் உடனே பலனை எதிர்பார்க்காதீர்கள்.


07. தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டே இருங்கள்.


08. அடித்தளத்தை வலுவாக்குங்கள். Multi Tasking ஆக இருங்கள்.


09. நமக்கான நேரம் வரும் வரை தகுதிபடுத்திக்கொண்டே இருங்கள்.


10. இறுதியாக யார் என்ன சொன்னாலும் உங்கள் மனசு சொல்வதை கேளுங்கள்.


எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. என்ன செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.


இந்த பயணத்தில் எப்போதும் உடன் நிற்கும் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்"


- Hema Rakesh

https://www.facebook.com/groups/253105681815624/permalink/1663668414092670/?mibextid=Nif5oz

 Someone graduated at the age of 22, but waited 5 years before securing a good job.

Someone became a CEO at 25, and died at 50.

While another became a CEO at 50, and lived to 90 years.


Someone is still single, while someone from his school group has become grandfather.


Obama retired at 55 & Trump started at 70.

Everyone in this world works based on their time zone.

People around you might seem ahead of you & some might seem to be behind you.

But everyone is running their own race, in their own time.


Do not envy them.

They are in their time zone, and you are in yours.

So, relax.


You're not late.

You're not early.

You are very much on time.


#goodmorning #haveaniceday #advice #dailyadvice #motivation #english #keenenglish