audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, March 6, 2023

 அடேங்கப்பா.. இது நம்ம வீட்டுல பொறந்த புள்ள நிகழ்த்திய சாதனை போலதான் மிகவும் பிரமிப்பா இருக்கு...  இத படிக்கவே... கேட்கவே அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு.  


"2013, February 27 இதே நாள் இதே நேரம் சென்னையில் அடியெடுத்து வைத்தேன். 10 வருட சென்னையில் Professional Career வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறேன்.


இதென்ன அவ்வளவு பெரிய விஷயமா எனக் கேட்டால் எனக்கு இது வாழ்நாள் கனவு. 


நான் பள்ளி படிப்பு மற்றும் யூஜி படிப்பை அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவள்.


கிருஷ்ணகிரி போன்ற சிறிய ஊரில் இருந்து அரசு பள்ளி மாணவியாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி இன்று பிபிசி வரை வந்தருக்கும் இந்த 17 வருட பயணம் எனக்கு கொடுத்த படிப்பினைகள் ஏராளம்.


இந்த 17 வருடத்தில் நான் காதில் அதிகம் கேட்ட வார்த்தைகள் என்ன தெரியுமா?


01. பொம்பள புள்ளைக்கு எதுக்கு இவ்ளோ படிப்பு?


02. கல்யாணம் பண்ண போற புள்ளைக்கு எதுக்கு கம்ப்யூட்டர் படிப்பு?


03. நீ என்ன பிபிசி கா போக போற.. எதுக்கு Reporter வேலை?


04. ஓ மீடியா வேலையா? அப்போ எவனையோ இழுத்துட்டு ஓடதான் போகப்போறா? பெத்த கடமைக்கு சீக்கிரம் எவனையாவது பாத்து கட்டி வச்சிருங்க. நம்ம கடமையை முடிச்சாதான் நமக்கு நிம்மதி?


05. உள்ளூர் சேனல் ல வேலை பாக்குற உனக்கு சென்னையை பத்தி என்ன தெரியும்? நீ Chennai க்கான Anchor கிடையாது. உனக்கு வரவும் வராது. ஒழுங்கா இங்கேயே இருந்தா மாசம் 8000 சம்பாதிக்கலாம்.


06. இதெல்லாம் எவ்ளோ நாளைக்கு? கல்யாணம் முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது.


07. அரசியல் பெண்களுக்கு பேச வராது. அதனால நீ entertainment Show பண்ணு.


08. ஓ கல்யாணம் ஆகிருச்சா? இனி அவ்ளோதான். Gym லாம் போக முடியாது. பேசாம வீட்டு வேலை பாக்குறது உனக்கு நல்லது.


09. ஓ சிசேரியன் ஆ.. அவ்ளோதான் முடிஞ்சது. இனி எந்த வேலையும் பண்ண முடியாது.


10. ஒரு நிறுவனம் தான் உனக்கு அடையாளம். அதுல இருக்கிற வரை தான் உனக்கு மரியாதை. அதை விட்டுட்டு வெளியே போயிட்டா அவ்ளோதான் முடிஞ்சது. இனி Career லாம் தனியா Build பண்றது கஷ்டம். உன்னால கண்டிப்பா முடியாது


ஆனால் நடந்தது என்ன?


HemaRakesh - | Journalist | Anchor | News Reader | SubEditor | Content Writer | Documentary Film Director | Event Host | Mentor | Motivational Speaker | YouTuber | Digital Entrepreneur | Digital Media Consultant.


எனது கல்வி..


M.HemaRakesh , M.A, B.Ed ( English Literature)


🛑MBA ( Human Resource)

🛑PG Diploma in Computer Applications

🛑PG Diploma in English Language & Communication

🛑Diploma in Journalism & Mass Communication 

🛑Certificate Course in French Language

🛑Certificate Course in Spoken English

🛑Certification in Digital Marketing 


என் பணி அனுபவம்.


2004 இல் பள்ளியில் படிக்கும்போது தினம் காலை Prayer இல் மாணவ செய்தி வாசிப்பாளர், விடுமுறை தினத்தில் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்.


கல்லூரியில் இளங்கலை படிக்கும் போது தமிழன் மற்றும் வைகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்.


முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போது சேலம் பாலிமர், CTN, SS TV, Ashoka TV இல் நிகழ்ச்சி தொகுப்பாளர்.


மேல் சொன்ன அனைத்தும் பகுதி நேரம்.


முழுநேரமாக Lotus News தொலைக்காட்சியில் உதவி ஆசிரியர் & செய்திவாசிப்பாளர் பணியில் சேர்ந்து


தந்தி தொலைக்காட்சியில் மூத்த செய்திவாசிப்பாளர், அரசியல் நிகழ்ச்சி விவாத நெறியாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


காவேரி நியூஸ் தொலைக்காட்சியில் - இணையதள செய்தி ஆசிரியர், அரசியல் நிகழ்ச்சி விவாத நெறியாளர், பிரேக்கிங் நியூஸ் தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் இணையதள செய்தி ஆசிரியர், அரசியல் நிகழ்ச்சி விவாத நெறியாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


குமுதம் டிஜிட்டலில் Deputy டிஜிட்டல் செய்தி ஆசிரியர் , நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


என பயணித்து இப்போது பிபிசி தமிழுக்காக சென்னையில் இருந்து ப்ரீலான்ஸ் செய்தியாளர், மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரிகிறேன்.


இது Self Promotion ஆ என கேட்டால் ஆமாம். ஆனால் எனக்கானது அல்ல. என்னை போன்று சிறிய ஊர்களில் இருந்து வருபவர்களுக்கும், சென்னை நமக்கானது அல்ல என்று நினைக்கும் சில அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், பெண் என்றால் திருமணம் தான் அவள் கடைசி முடிவு என நினைப்பவர்களுக்கும் அஅதை சொல்ல நினைக்கிறேன். 


என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்


01. என்ன தடங்கல் வந்தாலும் கல்வி பயலுங்கள்.


02. ஊரே புறம் பேசினாலும் உங்களை நம்புங்கள்.


03. திருமணம் வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர முடிவு கிடையாது.


04. வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருந்தால் தவறு.


05. சின்ன வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்துங்கள்.


06. எந்த வேலையிலும் உடனே பலனை எதிர்பார்க்காதீர்கள்.


07. தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டே இருங்கள்.


08. அடித்தளத்தை வலுவாக்குங்கள். Multi Tasking ஆக இருங்கள்.


09. நமக்கான நேரம் வரும் வரை தகுதிபடுத்திக்கொண்டே இருங்கள்.


10. இறுதியாக யார் என்ன சொன்னாலும் உங்கள் மனசு சொல்வதை கேளுங்கள்.


எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. என்ன செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.


இந்த பயணத்தில் எப்போதும் உடன் நிற்கும் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்"


- Hema Rakesh

https://www.facebook.com/groups/253105681815624/permalink/1663668414092670/?mibextid=Nif5oz

No comments:

Post a Comment