இந்த காலத்துல எதையும் நம்பி யார்கிட்டையும் சொல்ல கூடாதுங்க…
நம்பகிட்ட எவ்ளோ பணம் இருக்கு, எவ்ளோ நகை இருக்கு, சொத்து, வசதி விவரங்களை சொல்லவே கூடாது. சோஷியல் மீடியாவுல போடவும் கூடாது.
சொந்தகாரங்க பொறாமைபடுவாங்க… மத்தவன் எப்படி ஏமாத்தி பறிக்கலாம்னு பார்ப்பாங்க….
நாம எதிர்காலத்துல என்ன செய்ய போறோம், எதிர்கால திட்டங்கள் அதனால நமக்கு கிடைக்க போற பணப்பயன்கள் யாரிடமும் சொல்ல கூடாது. உங்கள் திட்டங்கள் மற்றவர்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு முன்னமே அவங்க ஆரம்பிச்சிடுவாங்க…
யாரிடமும் எதிர்கால திட்டங்களை சொல்லாதிங்க…
உங்களை பற்றிய ரகசியங்களை யாரிடமும் உளறி வைக்காதிங்க… பிரபலமான பழமொழி ஒன்னு இருக்கு…
"உங்களிடம் ரகசியம் இருக்கும்வரை அதற்கு நீங்கள் எஜமானர். மற்றவரிடம் பகிர்ந்துவிட்டால் அவர்க்கு நீங்க அடிமை"
ரகசியம் தெரிந்தவர்கள் என்றாவது எதிரியா மாறுனா உங்களுக்குதான் ஆப்பு. அதுவும் திருமணம் மீறிய உறவு, திருமணத்திற்கு முன் செய்த தவறுகள் எதையும் யாரிடமும் கொட்டி விடாதீர். வாழ்க்கை வீணாக போய்டும்.
…….
உங்க உடல் ஆரோக்கியத்தை பற்றி மருத்துவரிடம் மட்டும் தான் சொல்லனும். போறவங்க வரவங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு இருந்தா, அவங்க ஊரெல்லாம் சொல்லி உங்கள பாடையில ஏத்தாம விடமாட்டாங்க…
நம் உடல்நிலை பற்றி கண்டவங்ககிட்ட சொல்லி ஆலோசனை கேட்காதிங்க…
…….
நீங்கள் வாங்கும் ஆடம்பர பொருட்களை பற்றி மூச்சு விடாதிங்க. (பெரிய டி.வி, பொன் நகை). மத்தவங்க உங்களின் ஆடம்பரத்தை பார்த்து வயிறு எரிவதும் மட்டும் இல்லாமல் உங்களுக்கு சூனியம் வைக்கவும் சான்ஸ் இருக்கு.
……
உங்கள் கணவரை பற்றி தோழியிடம் நல்லவர், வல்லவர் என்றும், அவர் தன்னை எப்படி எல்லாம் தாங்கு தாங்குனு தாங்கறார் என்று பிரஸ்தாபித்தால், அவளே உங்களுக்கு சக்களத்தியாக வருவதற்கு சான்ஸ் இருக்கு.… கணவன் மனைவிக்குள் இருக்கும் படுக்கறை அறை விஷயங்களை பகிராதீர்கள்.. மத்தவங்க try பண்ண அதிக சான்ஸ் இருக்கு….
……
எல்லாத்தையும் விட கஷ்டத்தை சொல்லாதிங்க… நல்லவங்க போல ஆறுதல் சொல்லிட்டு, அதை மத்தவங்கிட்ட போய்ட்டு சொல்லி சிரிப்பாங்க…
……
எல்லாத்தையும் விட பொண்டாட்டிகிட்ட உண்மையான சம்பளத்தை சொல்லாதிங்க…
இப்படி யாரையும் நம்பலனா எப்படினு கேக்கலாம். உங்கள் மீது அதிக பற்றும் பாசமும், அக்கரையும் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனித மனத்திற்கு அத்தனையும் உள்ளுக்குள் பூட்டி வைத்துக்கொள்ள தெரியாது. உங்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாத விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்…
No comments:
Post a Comment