திறமையற்ற ஒரு நிர்வாகிக்கு தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், தனது ‘திறமை’யைப் பறைசாற்றவும் தன்னைச் சூழ தன்னை விடவும் திறமையற்றவர்களை வைத்துக் கொள்வதை விட மிகச் சிறப்பான வேறு உத்திகள் கிடையாது. “மோட்டு ஸ்கூல்ல மொதலாம் ஆளா வாரது” என்று இதனைக் கிராமத்துப் பாஷையில் சொல்வார்கள். உண்மையில் திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள் கூப்பிடு தூரத்துக்குள் வந்தாலே ‘தமது சாயம் வெளுத்து விடும்’ என்ற அச்சம் இருப்பதன் காரணமாக எவரையும் அண்டவும் கூட விட மாட்டார்கள்.
இதனைப் படிக்கும் போது உங்கள் கற்பனை உங்களைப் பக்கத்துத் தெரு பள்ளிவாசல் முதற்கொண்டு ஐ.நா. சபை வரை அழைத்துச் செல்லலாம். ஆனால் அதற்கெல்லாம் தயவு செய்து என்னைப் பொறுப்பாக்கி விடாதீர்கள் தோழர்களே!
ஜஸ்ட் உலகெங்கும், குறிப்பாக மூன்றாம் உலகெங்கிலும் நடப்பிலுள்ள ஒரு யதார்த்தத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்!
No comments:
Post a Comment