audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Friday, November 4, 2022

Learn English

1. Listen and Repeat
- Best way to learn anything, is to listen and repeat.
- it could be anything your favourite talkshow, movie or a story. 

2. Speak to a friend
- Find a friend. 
- Try to converse only in english.
- It is a great way to increase your confidence and fluency.

3. Read more
- Be it a story book, newspaper or novel. 
- Read, Read and Read.

4. Make more mistakes
- Dont be worried about making mistakes. 
- The more you converse, you will become aware of your mistakes and stop repeating them.

5. Watch the pace you talk
- Best public speakers speak slowly. 
- Dont be in a rush.
- Speaking slowly increases confidence.

6. Set challenges
- It could be as simple reading a paragraph daily for a month. 
- Trying to speak in english for a minute on a random chosen topic.
- You may not do as expected the very first time.
- Slowly you will get good at it.

7. Control the way you speak
- Speak louder.
- Dont speak in fragments.
- It would mean lower confidence levels.

8. Watch your pronunciation 
- Learn how to pronounce words correctly.
- If not, it would impact the pace you talk. 
- subconsciously thinking if you are pronouncing words right or not.

9. Try to converse with yourself in english
- When you talk to yourself,
- you can have any random topic and you can try to fame the sentences at your own pace.

10. Try to think in english. 
- The conversations you have in your head , your thought process are usually in your mother tongue. 
- When you slowly tune to think in english, you get more confident about speaking in that language.

(Source - Twitter)
If you need someone to talk and practice, feel free to Inbox, DM , personally message me or send friend request.

Thursday, November 3, 2022

வீடியோ வழி பல்கலை கழகங்கள்.

வீடியோ வழி பல்கலை கழகங்கள்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED 

உங்கள் பொன்னான நேரத்தை
ப்ராங் வீடியோ , டிக்டொக் வீடியோ போன்றவற்றை பார்ப்பதில் செலவு செய்கிறீர்களா? அந்த டைமை வேறு பிரயோசனமான வழிகளில் பயன்படுத்த உங்களுக்கு விருப்பமா? 
ஆம் என்றால் இந்தப் பதிவு உங்களுக்காக. மேலே படியுங்கள். இல்லை என்றால் லைக் ஒன்றை போட்டு விட்டு ஆள் மாறுங்கள்.

நான்கு வருடங்களைச் செலவழிக்காமல் ஒரு பட்டப்படிப்பை  மேற் கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு நூற்றாண்டு பிந்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்போது, பல்கலைக்கழகம் போகாமல், நான்கு வருட பட்டப்படிப்பை, குறைந்த நேரத்தில் கற்றுக்கொள்ள உங்கள் மொபைலை நீங்கள் உபயோகிக்க முடியும். அதன் மூலம் உங்கள் திறமைகளை நீங்களே வளர்த்துக் கொள்ளலாம்.

வெவ்வேறு உள்ளடக்கம் கொண்ட 50,934,583 சேனல்கள் YouTube முழுவதும் காணப்படுகின்றன. அவற்றுள் 4 வருட பட்டப்படிப்பைக் காட்டிலும் அதிக திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான 10 education channels காணப்படுகின்றன. அவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்யவே இந்தப் பதிவு.

1. Crash Course 
பொருளாதாரம், இயற்பியல், தத்துவம், வானியல், அரசியல், உளவியல், இலக்கியம் மற்றும் உயிரியல் போன்ற பல பாடங்களைக் கொண்ட 10-12 நிமிட வீடியோக்களை CrashCourse கொண்டுள்ளது. இது ஓ எல், ஏ எல், மற்றும் உயர் கற்கை மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானது.

Provides high-quality educational videos for everyone. You can quickly get videos related to educational programs such as psychology, economics, history, geography, physics, chemistry, and other subjects. You just need to subscribe to the channel to get the available and latest videos.

https://www.youtube.com/c/crashcourse?app=desktop

2. Khan Academy, Kahn Academy Kids
கான் அகாடமியின் இணைய தளத்தை நீங்கள் இதற்கு முன் பயன்படுத்தவில்லை எனில், நீங்கள் இன்னும் இந்த நவீன உலகில் வாழவில்லை என்று கருதலாம். இது அனைத்து வகையான பாடங்கள் பற்றிய பயிற்சிகளுடன் கூடிய இலவச கல்வி வழங்கும் ஒரு தளம். முன்பள்ளி முதல் பிச்டி வரை எல்லா படிப்புகளும் இங்கே உண்டு. உங்களது பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தது. எனது மகளின் மிக விருப்பத்திற்குரிய ஒன்லைன் கல்விக்கூடம் இது. App உம் உண்டு.

Provides free, world-class education for everyone. Adults and kids can quickly get videos on different educational topics. If you are searching for good mathematical skills, life, the universe, geological and climate history, stars, and galaxies, don’t forget to subscribe to the channel to avail the opportunity.

https://www.youtube.com/c/khanacademy

3. Thomas Frank 
இது உண்மையில் கோலேஜ் இன்ஃபோ கீக் என்று அழைக்கப்படுகிறது. படிப்பு மட்டுமன்றி பழக்கவழக்கங்கள் குறித்தும் இந்த தளம் பேசுகிறது‌ அது போல கல்லூரி பல்கலைக்கழகங்களில் வகுப்புகளில் எப்படி சிறப்பாக செயல்படலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளும் இங்கே உண்டு. உயர் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனம் தரும்.

Helps you be more productive in high school, university or college. The channel is best known for catering videos related to personal development, learning habits, or topics related to management. In this channel, you will also get ideas to learn new skills to earn from home.

https://www.youtube.com/c/Thomasfrank

4. The School of Life
இது வாழ்க்கையின் பெரிய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கும் இடமாகும்.  இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டும்  வீடியோக்களை கொண்டுள்ளது. மனம் சோர்ந்து போகும் தருணங்களில் உதவும் ஒரு நண்பனாக இந்த தளம் காணப்படுகிறது.

Aims to provide videos to help you learn, heal and grow. The channel is made by a group whose mission is to bring growth, healing, calm, and self-understanding to our youth. If you have any queries regarding your future, career, or personal life, you can easily find answers to your questions positively. You can find videos on creativity, mindfulness, passion Vs. Duty, loneliness, and other reality-based topics.

https://www.youtube.com/c/theschooloflifetv

5. TED
TED என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது பொதுவாக குறுகிய, சக்திவாய்ந்த பேச்சுக்கள் (18 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவானது) வடிவத்தில் கருத்துக்களை பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் விருப்பமானது. தினமும் ஒரு வீடியோ பார்த்தால் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இதுவரை இந்த தளத்தில் உள்ள ஒரு வீடியோவையாவது பார்க்காத யாரும் இருந்தால் அது அதிசயம் தான்.

TED is dedicated to researching and sharing knowledge that matters through presentations and short talks. This channel will get short videos and presentations of hardly 8-10 minutes on different topics and current scenarios. Moreover, the presentations on channels referred to as “Ted talks” are recorded public speaking presentations initially given at the main TED (technology, entertainment, and design).

https://www.youtube.com/c/TED

6. MIT OpenCourse Ware
தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் MIT இன் எல்லா பாடநெறிகளும் இங்கே உண்டு. IT துறையில் கால் பதிக்க விரும்புபவர்கள் கட்டாயம் MIT ஐ தெரிந்து வைத்திருப்பர்‌. நவீன உலகில் அதிக கேள்வி உள்ள கற்கை நெறிகள் இங்கே உண்டு.

MIT open course Ware is a web-based publication of virtually all MIT course content. It is a publicly accessible, openly licensed digital collection of high-quality teaching and learning materials. MIT is a highly-ranked Boston University in the United States and the world.

https://www.youtube.com/c/mitocw

7. Bozeman Science
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் விஷயங்களை ஆழமாக கற்றுக்கொள்ள சிறந்த இடம். அறிவியல் ஆர்வம் உள்ள எல்லோராலும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு தளம்.
The videos are about in-depth science realities and environmental sciences. You can get videos on human cells, human structure, nature, animal studies, and atmosphere and geology

https://www.youtube.com/bozemanscience

8. Free Code Camp
கோடிங் செய்வது எப்படி ,? ப்ரோக்ராம் எழுதுவது எப்படி என்பதை ஆரம்பத்தில் இருந்து இலவசமாக இங்கே கற்றுக் கொள்ள முடியும்.  இணைய மேம்பாடு மற்றும் நிரலாக்க பயிற்சிகள்  HTML, CSS, JavaScript, Python மற்றும் பலவற்றைக் கற்பிக்கும் முழு படிப்புகள் இங்கே உண்டு. கணிணி மென்பொருள் ஜாம்பவான்களாக ஆசை உள்ளவர்களுக்கு பிரயோசனம் தரும் ‌

The channel has a wide range of different topics for people interested in learning programming and coding. Not only this, but you can also apply for free coding and math courses. The track has free web development courses and programming tutorials, teaching HTML, CSS, JavaScript, Python, and more.

https://www.youtube.com/c/Freecodecamp

9. Charisma On Command
உங்கள் சுய முன்னேற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்படி தன்னை முன்னிறுத்துவது‌ போன்ற விஷயங்களை இங்கே படிக்கலாம். தொழில் தேடுபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சனல். அதிபர் ஆசிரியர்கள், மௌலவிமார்  மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நிறுவன தலைவர்கள் என எல்லோரும் இந்த தளம் குறித்து கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 

The channel invites you to increase your Charisma and confidence and to bring the better version of yourself. Moreover, the channel covers excellent topics such as the rules of life, avoiding the trap, becoming more confident, making people laugh, and much more. Charisma on command will teach you how to tap into your charismatic potential. Therefore, you can turn it on whenever you want.

https://www.youtube.com/c/Charismaoncommand

10. Better Than Yesterday
சுய முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டும். 

எப்படி நேர முகாமைத்துவம் செய்யது. எப்படி நம்மை நாமே சுய பரிசோதனை செய்வது போன்ற அம்சங்கள் இங்கே உண்டு. ஒவ்வொரு வீடியோவும் நேற்றை விட சிறப்பாக செயல்பட உதவும். வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முகவரி.

It is an animated YouTube channel where you will get videos on productivity and time management, exploring new ideas in a new and creative way to make your life more productive.

https://www.youtube.com/c/BetterThanYesterday

தகவல் - Tech Juice.

பிற் குறிப்பு-இது போன்ற நீங்கள் அறிந்த பிரயோசனமான யூடியுப் சேனல்களையும் கொமண்டில் தெரிவித்ததால் பலரும் பயனடைவார்கள்.

Tuesday, November 1, 2022

நவீன பெற்றோர்களை ஆட்டுவிக்கும் ஆட்டிசம்.



Jp

"சார் புள்ளைக்கி ரெண்டு வயாசுகுது இன்னும் பேசுறான்ல".

"இவன் சரியான கரைச்சல். ஒரு இடத்தில இருக்க மாட்டான்".

" நேர்சரி டீச்சர் சொல்றா இவள் படிக்கமாட்டாளாம். அறவே கவனம் இல்லையாம்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளுடன் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள்.‌ சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர் இன்டர்நெட்டில் தேடிக் களைத்து ஆட்டிசம் என்ற சொல்லை கண்டவுடன் பரிதவித்து போகிறார்கள். பலருக்கு இந்தச் சொல் பழக்கமாக இருந்தாலும் இன்னமும் பயம் குறைந்தபாடில்லை.

👉ஓகே. Autism(ஆட்டிசம்)என்றால் என்ன? நீங்களே சொல்லுங்களேன்.

🙂அது ஒன்றும் இல்லை. இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. சிலவேளை, ஒரு சில இலகுவான பிரச்சினைகளும், சில வேளைகளில் மிகச் சிக்கலான பிரச்சினைகளும் இருப்பதால் இதை  "Autism Spectrum Disorders (ASD)" என்று அழைக்கிறோம். அது போல இருதயத்தில் மேல் அறையில் ஏற்படும் துறையையும் ASD(Atrial Septal Defect-'ஹோல் இன் த ஹாட்') என்றே அழைக்கிறோம். ASD என்பதை டயக்னோஸிஸ் காட்டில் பார்த்து விட்டு 'ஹோல் இன் த ஹாட்' உள்ளவர்கள் நரம்பியல் நிபுணரையும், ஆட்டிசம் உள்ளவர்கள் கார்டியொலிஜிஸடயும் வந்தடைந்த கதைகள் நிறைய உண்டு. (Dr Aakiff , Dr Haartheek அப்படித்தானே) 

ஆட்டிசம் குழந்தைகளின் தொடர்பாற்றல், கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கிறது. பேச்சாற்றலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதில்,  தன் உணர்வுகளை சரியாக  வெளிப்படுத்துவதில் இயலாமையை உண்டாக்குகிறது. இது தான் பிரச்சினை.

இருந்தாலும், இது  ஒரு நோய் கிடையாது. ஒரு குறைபாடு மாத்திரமே. நோய் என்றால் சுகப்படுத்தலாம். குறைபாடு என்றால் நிவர்த்திக்கலாம். ஆகவே அச்சம் கொள்ள வேண்டியதில்லை. 

👉ஓகே. அப்படியானால் 
ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?

🙂இதை குழந்தையின் வளர்ச்சி செயல்பாடுகளை கவனமாக உற்று நோக்குவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும். இதற்கான விஷேட பரிசோதனைகள் எதுவும் இல்லை. 

குழந்தைகள் பொதுவாக, ஏனைய மனிதரைப் போலவே ஒரு சமூக விலங்கு.  முக பாவனைகளுக்கு ஏற்றாற்போல் தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கு உண்டு. புன்னகைத்தால் புன்னகைப்பார்கள். முறைத்தால் அழுவார்கள். கையை விரித்து  நீட்டி கிட்டப்போனால் ஓடி வருவார்கள். இது தான் அவர்கள் இயல்பு. 

ஆனால், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவர்களுடைய தனி உலகில் இருப்பார்கள். நமது அரசியல்வாதிகளை போல யாரையும் பற்றி கவலைப்பட மாட்டார்கள். உணர்வுகளை பிரதிபலிக்க மாட்டார்கள். பெயர் கூறி அழைத்தால் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். பேச மாட்டார்கள். யாருடனும் ஒட்டி உறவாட மாட்டார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தற்செயலாக யாரோடு பேச நேர்ந்தாலும் எதிரில் பேசுபவரின் கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். (அப்படி ஒருவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கிறார். எந்த நாடு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.)

இவர்களுக்கு 'மூட் ஸ்விங்ஸ்' அதிகமாக இருக்கும். சில நாட்களில் அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏன் என்று தெரியாது. சில நாட்களில் சோகமாக காணப்படுவார்கள். அதுவும் ஏன் என்று யாருக்கும் தெரியாது. அதிகம் கோபமடைவார்கள். எடுத்ததற்கெல்லாம் இரிடேட் ஆவார்கள். சில வேளை கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். செல்லப்பிராணிகளை துன்புறுத்தி மகிழ்வார்கள்.

Echolalia  எக்கோலாலியா" விரும்பிகளாக இருப்பார்கள் - அதாவது சொன்ன வார்த்தையையோ(சில வேளை தூசனமாக , சில வேளை பாடலில் முதல் வரியாக, அவர்கள் பேசும் ஒரு வசனமாக இது இருக்கும்), அதையே  திரும்பத் திரும்ப கூறுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் வாதிகள் திரும்ப திரும்ப தருகின்ற வாக்குறுதி போல, பெரும்பாலும், இதற்கு பொருளோ, காரணமோ இருக்காது.  

உங்கள் குழந்தைகளிடமும் பின்வரும் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால், அது ஆட்டிசமாக இருக்கலாம். லாம். லாம்.லாம் என்பதை கவனிக்கவும்.

🌛எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.

🌛கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது. Avoiding eye contact 

🌛பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

🌛வழக்கமான குழந்தைகளின் விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.

🌛தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.

🌛சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.

🌛தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

🌛காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.

🌛வலியை உணராமல் இருப்பது.

🌛வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பது.

🌛பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

🌛பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.

🌛எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.

🌛தன்னந்தனியே சிரித்துக் கொள்வது.

🌛சுற்றக்கூடிய, சுழலக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.

🌛வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.

🌛சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.

🌛நாளாந்த செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது. ஒரே ப்ளேட்,  ஒரே கப் என, ஒரே இடம், ஒரே ஒடர் என பிடிவாதமாக இருப்பது. 

🌛சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங் கூட்டத்தில் தனித்து இருப்பது. (சபையை தனிமையாக்கவும், தனிமையை சபையாக்கவும் உன்னால் ஒன்னுமா? என்று வைரமுத்து கேட்பது அது வேற ஸ்பெக்ட்றம் டிஸ்ஓடர் ப்ரென்ட்ஸ்) 

இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படை அறிகுறிகள். இவைகள் இருந்தால் உங்கள் குழந்தைகளை உடனடியாக விஷயம் தெரிந்த வைத்தியரிடம், ஒரு சிறுவர் வைத்தியரிடம் காண்பிப்பது சிறந்தது.

👉ஆட்டிசம் உள்ள குழந்தைகளை என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும்? அடித்து திருத்தலாமா?

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு மற்ற சாதாரண குழந்தைகளை விட கூடுதலாக தேவைப்படும். மிக அதிகமாக தேவைப்படும். மனிதத் தொடர்பு மிக அதிகமாக தேவைப்படும். ஸ்க்ரீன் டிவைஸ்கள், டிஜிட்டல் சாதனங்களிலிருந்து அவர்களை தூரமாக்க வேண்டும். இது தற்போதைய காலத்து பெற்றோர்களுக்கு  மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஆட்டிசம்  அடையாளம் காணப்பட்ட பிள்ளைகளை கையாள பொறுமை மிக அவசியம். அவசியம் என்பதை விட அத்தியாவசியம் என்று சொல்லலாம். 

இவர்களை மற்ற குழந்தைகளுடன் பழகுவதை ஊக்குவித்து உதவி செய்ய வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். மெனக்கட வேண்டும். அதுபோல, ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். Occupational therapy அளிக்க வேண்டும். 

இந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும். இது அவர்களின் கற்றல் ஆற்றல் மேம்பட உதவும். 

குழந்தைகளுக்கான மூளை நரம்பியல் மருத்துவர் Paediatric Neurologist, குழந்தை நல சமூக மருத்துவர் Community Paediatrician, குழந்தை நல மருத்துவர் Paediatrician போன்றவர்களகன்  கண்காணிப்புடன்; Speech Therapy ஸ்பீச் தெரபி, Cognitive Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி, என பல்துறை வல்லுனர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை Multi Disciplinary team தேவைப்படும். நீண்ட காலம் எடுக்கும். பொறுமையுடன் சிகிச்சைகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். இவர்களை அடிப்பதால் ஏசுவதால் எந்த பயனும் இல்லை.

👉ஓகே டாக்டர். என்ன காரணத்தினால் ஆட்டிசம் குழந்தைகளில் ஏற்படுகிறது என்று சொன்னால் நாங்கள் அவைகளை தவிர்க்கலாமே? அது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.

🙂( நாம சொன்னா உடனே பாஞ்சி உழுந்து செஞ்சிடப்போறாக. சரி அதையும் சொல்லுவமே)

ஆட்டிசம் ஏற்பட இதுதான் காரணம் என குறிப்பாக எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியிலான காரணங்கள் வெறும் 0.5% க்கும் கீழே தான் இருக்கின்றன. இருந்தாலும் சராசரி வயதை(20-30) தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது(80s 90sகிட்ஸ் உங்களை தான்). மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் (குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களிடம்), போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அதுபோல குழந்தைகளின்
மூளையின் அமைப்பில் உள்ள மாறுபாடுகள் (Structural abnormalities), அல்லது மூளையின் வேதித்தனிமங்களில் (Chemical abnormalities) உள்ள குறைபாடுகளும் குழந்தையின் ஆட்டிசத்துக்கு காரணமாகின்றன. இவை கருவில் குழந்தை இருக்கும் போதும் மகப்பேறின் போதும் ஏற்புடும் சிக்கல்கள் காரணமாக உருவாகும். உதாரணமாக கழுத்தில் மாக் கொடி சுற்றுதல் (Cord around the neck), முதன்முதலாக வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல்(Meconium Aspiration), குழந்தை பிறந்த உடன் அழாமல் இருப்பது, பின்னாளில் ஏற்படும் மூளைக் காய்ச்சல்,  மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகளால், மூளைக்கு பாதிப்பு ஏற்படல் போன்றவற்றால் ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

👉இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்

🙂ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தால் குழந்தைகள் சாதாரண வாழ்க்கை வாழ்வார்கள். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். அப்படி இல்லாமல்,  அடையாளம் காணாது, கண்டும் காணாமலும் விட்டுவிட்டால், அது போல, பொறுமையாக இருந்து சிகிச்சை அளிக்காமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். 

1943-ல் Dr. Leo Kanner ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் அந்த ஆய்வுக் கட்டுரைக்கு வைத்த தலைப்பு `பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம்’ (Autistic Disturbances of Affective Contact). அந்த தலைப்பு ஒன்றே இதை விளங்கப்படுத்த போதுமானது.

பிற் குறிப்பு- இந்த ஆக்கத்தை மேற்பார்வை செய்து தந்த, ஆட்டிசம் குறித்து இந்த துறையில் விஷேட பயிற்சி பெற்ற Dr Phirarthana Kamalanathan.
Consultant Community Paediatrician
அவர்களுக்கு கோடி நன்றிகள்

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.

Friday, October 14, 2022

මල්ලි සෙල්ලම් දාන්න එපා 
✋ Don't mess with me 

පල් මෝඩයා 
✋ Damn fool 

முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ?

🟠சில நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ? 

🟠எடுக்கும் முடிவு சரியானதா/ பிழையாகி  விடுமோ என்ற பயம் ஏற்படுகிறதா ? 
 
சில நேரங்களில் நாங்கள் எங்கள் மிக முக்கியமான கனவுகளைத் தொடர/ முடிவுகளை எடுக்க  பயப்படுகிறோம், ஏனென்றால் இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என பயப்படுகின்றோம்  , எங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ எமது முடிவுகள் திருப்பதி அடையச் செய்யாமல் இருந்து விடுமோ என்ற பயம் , இவ்வாறான உணர்வுகளின் விளைவுதான் என்ன ? இவ்வாறான சிந்தனை போராட்டம் எமது உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் அதிருப்தி ஆகும் 

சில முடிவுகளின் போது . “அவர்கள் சிரிப்பார்கள்,என்ற உணர்வும்  ” “உங்களால் அதைச் செய்ய முடியாது,” “நீங்கள் நிபுணர் அல்ல” என்ற மற்றவர்களின் எதிர்மறையான சிந்தனைகளும்  அல்லது “மோசமான ஒன்று நடந்து விடுமோ ."என்ற எமது பய உணர்வும் எம்மை ஆட்கொள்ளும் .

இங்குதான் நம் பயங்களுக்கும்  நம்முடைய உள் உணர்விற்கும் இடையில்  உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது உள் உணர்வு  ஒருபோதும் கொந்தளிப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தாது. எடுத்துக்காட்டாக, பயம் என்ற உணர்வுதான்  “இதைச் செய்யாதீர்கள் - அது வெற்றியளிக்காது ” என்று சொல்லும், அதே நேரத்தில் உங்கள் உள் வழிகாட்டுதல், “இது செயல்படவில்லை என்றால், அடுத்த  திட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று சொல்லும். எதிர்மறை சிந்தனைகள்  பயமுறுத்தும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, உள்ளுணர்வு  நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்துகிறது.
நம்முடைய சுய விழிப்புணர்வைத் தட்டுவதன் மூலம் இந்த இரண்டு குரல்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூற நாம் கற்றுக்கொள்ளலாம் - நம்மைப் பற்றிய அறிவு. 
நாம் யார் ?
• எனக்கு உணமையில் என்ன தேவை?
• எனக்கு பிடித்த விடையங்கள் என்ன?
• எனக்கு அமைதி அழிப்பது எது?
• என்னை விரும்புவார்கள் யார்?
• நான் யாரை அதிகம் நேசிக்கிறேன்?
• நான் எதிர்காலத்தி என்ன நிலையை அடைய  வேண்டும்?
• உங்களை அதிகம் கவலை அடைய  செய்வது எது?
• , சமூகத்துடன் எனது தொடர்பு எவ்வாறானது?
• எனக்கு உண்மையில் எதற்கு பயம்  தோல்விக்கா / தோல்வி பயத்திற்கா?
• நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்?
என்பது பற்றிய அறிவு. வலுவான மற்றும் ஆரோக்கியமான சுய விழிப்புணர்வை உருவாக்க இந்த வினாக்களுக்கு விடையை தேடலாம் . இந்த ஞானத்தைப் பயன்படுத்தி, உங்கள் உள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். இதைப் பற்றி உங்கள் உள்ளுணர்வு, உங்கள் உள் வழிகாட்டி அல்லது திசைகாட்டி என்றும் நீங்கள் சிந்திக்கலாம்.

Thursday, October 13, 2022

என்னால் முடியும்

யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது.

இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.
ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம்.
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.நம்மலால் முடியாது என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.

அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய  மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
 காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது.
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.

எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சி,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.

ஒருவகையில் நாமும் அந்த யானையை போலத்தான்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கைகுறைவிலேயே இருந்துவிடுகிறதோ அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாது,நமக்கு சரிபட்டு வராது,நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நம்மை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.

என்னால் முடியும்,
இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது,இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.

#என்னால் முடியும்#

கண்ணாடி தத்துவம்


=================
ஒரு வயதானவர் அடிக்கடி  கண்ணாடியைப் பார்ப்பார்.

பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். 

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் 
குறு குறுப்பு.

அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?

பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 

ஒரு வேளை மாயாஜாலக் கண்ணாடியோ?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..,

 பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில்

இருப்பது கண்ணாடி தானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?” 

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், 

நீ பார்த்தால்
 உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“ சாதாரணக் கண்ணாடிதான், 

ஆனால் 

அது தரும் பாடங்கள் நிறைய!”

பாடமா… ??? 

கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? 

அப்படிக் கேள்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” 

எத்துணை ஆழமான உவமை இது!

இந்த உவமையில் என்ன இருக்கிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், 

எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் 

என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.”

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. 

அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை,  குறைப்பதும் இல்லை. 

உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.

துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

 அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. 

நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். 

அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. 

இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

அப்புறம்?

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! 
மாறாக அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். 

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். 

அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும்.

இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! 

அருமையான விளக்கம்.

 நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! 

அப்பப்பா!”“ 

யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்

“இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம்  இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்..
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை...
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும்,உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.

இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?..
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று 
கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே..

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு..

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, 
தன் குணம் என்ன?, என்பதை ஒருநாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம்.. கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. 

கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக்கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும்துன்பமானாலும்
அதை நீயே சந்திக்ககற்றுக்கொள்.
அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். 

அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்.
பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.k

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
உன் கண்ணீரும் உன் கவலையும்
உன்னை பலவீனமாக காட்டிவிடும்...
அழுவதாலும் சோர்ந்து போவதாலும்
ஒன்றும் நடக்கப்போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.p

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
உனக்கு தெரிந்த வரை நீ அறிந்த வரைr
யாருக்கும் எந்த உயிருக்கும்,எந்த வகையிலும் நன்மை மட்டுமே செய்...
ஒரு ஆண்மகன் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய  விஷயங்கள் ....

வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், மகிழுந்து இந்த இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வீட்டில் tube light மாட்டவாவது தெரிந்திருந்தால் சிறப்பு.

இரண்டே இரண்டு உடைகள் வைத்திருந்தாலும் அதை கூட எப்படி நேர்த்தியாக அணிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குளித்து, முடி வெட்டி, தலையை சீவி (முடி இருந்தால்) கை நகங்களை அழுக்காக வைத்திருக்காமல் இருக்க வேண்டும். பக்கத்தில் வந்தாலே, ஒருவிதமான நாற்றம் அடித்தால் வெறுப்பாக இருக்கும். இதில் சிலர் ஒரே ஒரு விரல் நகத்தை மட்டும் பெரிதாக வளர்த்து இருப்பார்கள். ;(

Smart and shrewd - தற்போது இருக்கும் காலத்தில் இதுபோல இருந்தால் மட்டுமே எடுபடும். பச்ச புள்ளையாட்டம் இருந்தால் அவ்வளவு தான். Too nice guys' தற்போது தடுமாறுகிறார்கள்.

பெண்ணுக்காக அலைபவரை ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். உங்கள் பார்வை மார்பகத்தில் இருந்தால் ஒரு நொடியில் கண்டு பிடித்து விடுவார்கள். எந்த பெண்ணையும் தனியாக சந்தித்தால் மிக மிக கவனமாக இருங்கள். நீங்கள் தவறே செய்யாவிட்டாலும், ஒரு பெண் சொன்னால் இந்த சமூகம் உடனே நம்பும்.

உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட்டு, தொப்பை இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு. சிகரெட், தண்ணி இல்லையா? நீங்கள் ஒரு ஜெம்.

அந்தப் பெண்ணுக்காக என்ன வேணா செய்வேன் சார்" என்று சொல்லும் ஆண்கள் அபாயம். எப்போது ஒரு பெண்ணிடம் இருந்து விலக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். விசமான பெண்களை நீங்கள் எவ்வளவு தான் உண்மையாக காதல் செய்தாலும் சரி வராது. தெருவில் தான் நிற்க வேண்டும்.

எனக்கு சாம்பார் ரசம் மட்டும் தான் வைக்க தெரியும் என்கிறீர்களா? போதும். குறைந்த அளவிலான சமயல் தெரிந்திருந்தாலும் கூட நல்லது. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு தான் காசு கொடுத்து வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் குவாலிட்டி கிடைக்காது.

Crime never pays. எந்த குற்றத்திலும் உங்களை ஈடுபடுத்தி கொள்ளாதீர்கள். மீண்டு வருவது கடினம். வந்தால் கூட சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரும்.

உணர்வுகளை கட்டுபடுத்த கற்றுக்கொள்ளுங்கள். இங்கே தான் எல்லா இடங்களிலும் தவறுகள் நடக்கிறது. Impulse control, desire control, thought control இது போல எல்லாமே.

(இந்த கருத்துகளுக்கு பெண்களும் தற்போது அடக்கம்.)


விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம்.

விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம். Dr M.J.M. Suaib இன் நாள் குறிப்பேட்டில் இருந்து…
50 வயது நாடோடிக் குடும்பத்துப்பெண் மூச்செடுப்பதில் கஷ்டம், கழுத்து மற்றும் நெஞ்சு இருகிக் கொள்கிறது என்று காலை நேரம் எங்கள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள்.

கண்களை அகலத் திறந்தவளாக அவசர அவசரமாக ஆழமற்ற மூச்சுக்களை எடுத்தவளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆரம்பச் சோதனையில் என்ன நிலைமை என்பதை ஊகிக்க முடியவில்லை. மாலையாகும் போது அவளின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. மூச்சு விடுவதில் கஷ்டம் அதிகரிக்க, எதையுமே உண்ண முடியாது, குடிக்க முடியாது என்றாகி விட்டது. சிறு புத்தகத்தை விசிறும் போது வருகிற சிறு காற்றுக்குக் கூட மிக எரிச்சலடைந்து (irritable) பதறுபவளாக இருந்தாள்.

நீரை வாய்க்கெடுத்து மிகக் கஷ்டத்தோடு விழுங்கி உடனே மூச்செடுக்க முடியாமல் வாந்தியெடுத்தவள் நேரஞ் செல்லச்செல்ல நீரை வாய்க்கெடுக்கவும் மறுத்தாள்.

(இப்போது நிலைமை இது தான் என்பதை ஊகித்துக் கோண்டோம்)

இரவாகும் போது நிலைமை மிகமிக மோசமானது. ஜன்னலூடாக வருகிற காற்றுக்கு துடித்து விடுவாள், நீரைக் காணும் போதே உதறிவிட்டு மூச்செடுக்கக் கஷ்டப்படுவாள். மனித நடமாட்டங்களையோ வெளிச்சத்தையோ காணும் போதும் சத்தங்களைக் கேட்கும் போதும் எரிச்சலடைந்து தடுமாறுவாள். அருகே போனால் பாய்ந்து கடிக்கவும் முற்படுவாள். இடைக்கிடையே வலிப்பும் வந்து போனது. இக்காட்சிகளைக் காணுகிற போது இதற்கு மருத்துவமுமில்லை, சாவும் நிச்சயம் என்பதால் மிகவும் கவலையாக இருந்தது.

இனி செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அவளை இலகுவாக மரணிக்க விடுவது தான் (கருணைக் கொலை செய்வதல்ல, வரப்போகும் மரணத்தை இலகுவாக்குவது.)

கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்ட நிலையில் வாட்டின் ஒரு மூலையில் அவள் தனித்து வைக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டு மின்விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் நிறுத்தப்பட்டு காற்றும் வெளிச்சமும் சத்தங்களும் எவ்வித அசைவுகளையுங் காணாத படி கருப்புப் பொலிதீனை அவளைச்சுற்றிக் கட்டி அமைதியான சூழல் வழங்கப்பட்டது. அவளது எரிச்சலைக் குறைத்து அமைதியடையவும் தூங்க (sedation) வைக்கவுமென ஒரேயொரு ஊசி மருந்து மட்டுமே இடைக்கிடையே போடப்பட்டது. அதுவும் முழு அமைதியடைந்தவளாக இருக்கவில்லை.

மறுநாள் காலை எதிர்பார்த்த படி மூச்சு விட முடியாமலேயே மரணத்தைத் தழுவினாள்!!!

முதன்முதலில் காற்றுக்குப் பயந்தமை (aerophobia) நீரை வெறுத்தமை (hydrophobia) என்பன rabies எனும் விசர் நாய்க்கடி/ நீர் வெறுப்பு நோய்க்கே உரிய பண்புகளாதலால் நாய்க்கடி நிகழ்ந்ததா என குடும்பத்தில் அனைவரிடமும் தீர விசாரித்தோம். நீண்ட நேரம் யோசித்த அவளது கணவன் சொன்னார், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தோடு நாடோடிகளாகத் திரிந்த பின் ஓரிரவு வாரியபொல வாரச் சந்தைக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாய்க்குட்டி அவளைக் கடித்ததாம்!

 

இது தான் விசர் நாய்க்கடி நோயின் மேலோட்டமான கோரம், எல்லாக் குணங்குறிகளும் இங்கு சொல்லப்படவில்லை.

எல்லா மரணங்களிலும் மரண வேதனையை அனுபவிப்பது மரணிப்பவர் மட்டுமே என்றாலும் இவ்வகை மரணத்தைக் காண்பவர்களுங் கூட வேதனையை உணர்கின்றனர்.

ரேபீஸ் நோய்த் தொன்றுக்குள்ளான நாய் கடித்தால் 2 வாரங்களுக்குள் அந்நாய் மரணிப்பதோடு உரிய மருத்துவம் பெறப்படாவிடின் கடிபட்டவரும் நோய் தொற்றினால்  மரணித்தே விடுவது நிச்சயம்.

இந்நோயை வருமுன் (நாய் கடித்தவுடன்)  இரு வகை ஊசி மருந்துகள் மூலம் காக்க முடியுமே தவிர வந்த பின் குணப்படுத்த முடியாது.