தோசைல ரவா தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை கூட செஞ்சிடுவேன், ஆனா இந்த மசாலா தோசை மட்டும் செய்ய வரமாட்டேங்குதுன்னு சொல்ற ஆளா நீங்க. அப்போ இந்த பதிவு உங்களுக்கேதான்.
இன்னிக்கு மசால் தோசைதான் செய்ய போறோம். அதுவும் சாதாரண மசால் தோசை இல்லை மைசூர் மசால் தோசை.
யாருக்குத்தான் தோசை பிடிக்காது. அதுவும் ஹோட்டல்க்கு போய் மெனு கார்ட் திருப்பி பார்த்தா வித விதமா தோசை இருக்கும். அதுல பாதிக்கும் மேல என்ன தோசைன்னே தெரியாது. சரி அதை வாங்கி சாப்பிடலாம்னு பார்த்தா, ஆர்டர் பண்ணி கொண்டு வந்து வெச்சதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா என்ன பண்றது.
அது போலதான் இந்த மைசூர் மசால் தோசையும். உள்ளூர் மசால் தோசை கேள்விபட்டிருக்கேன். இது என்ன மைசூர் மசால் தோசை. வாங்க அதையும் தெரிஞ்சிப்போம்.
மைசூர் மசால் தோசை செய்ய
தேவையான பொருட்கள் :
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பொட்டுக் கடலை - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 20
பூண்டு - 120 கிராம்
மல்லி - 1 ஸ்பூன்
தோசை மாவு - 1 கப்
பெருங்காய பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதல்ல அடுப்பை பத்த வெச்சு, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய விடுங்க.
எண்ணெய் நல்லா காய்ஞ்சதும், அதில எடுத்து வெச்சிருக்க கடலை பருப்பு மற்றும் உளுந்தை சேர்த்து 5 நிமிடம் நல்லா வதக்கிக்கோங்க.
அது கூட சீரகம், மல்லி, பூண்டு மற்றும் காய்ந்த மிளகா எல்லாத்தையும் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க..
ஒரு 10 நிமிசதுக்கு பிறகு அது கூட கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நல்லா பொன் நிறமா வர்ற வரைக்கும் வதக்கிட்டே இருங்க.
கடைசியா வதக்கிய பொருளை ஆறவெச்சு, மிக்சி ஜார்ல சேர்த்து நல்லா பேஸ்ட் பதத்திற்கு அரைச்சு எடுத்துக்கோங்க. இது கூட 10 பற்கள் பூண்டு எடுத்து, நைசாக நறுக்கிக்கோங்க.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊத்தி, எண்ணெய் சூடானதும் அதில நைசா நறுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கி, அது கூட அரைச்ச பேஸ்டினை சேர்த்து தாளிச்சுக்கோங்க. அவ்வளவு தான் மைசூர் மசாலா தயார்.
அடுத்து வழக்கம் போல தோசை கல்லை அடுப்பில வெச்சு வழக்கம் போல் தோசை ஊத்தி நல்லா வெந்ததும், அது மேல மைசூர் மசாலாவை தடவி மடிச்சு எடுத்தா போதும், மைசூர் மசால் தோசை தயார்.
இந்த வாரம் ஞாயிறு எங்க வீட்ல மைசூர் மசால் தோசைதான். நீங்களும் உங்க வீட்ல செஞ்சி பார்த்துட்டு எப்படி இருந்துச்சு சொல்லுங்க.
No comments:
Post a Comment