audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, November 13, 2024

குயட் ஃபயரிங் (Quiet firing)

 குயட் ஃபயரிங் (Quiet firing) என்பது இன்றைய மேலாண்மை உலகில் பின்பற்றப்படும் ஒரு செயல். அது பற்றிப் பார்ப்போம்.

குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவரை அந்த குழுவின் தலைமைப் பொறுப்பாளர் அல்லது மேலாளர், ஏதோ ஒரு காரணத்துக்காக அவரை ஒதுக்கி வைப்பது, அவருடைய பணிகளை மனம் திறந்து பாராட்டாமல் இருப்பது, அவருக்கு வர வேண்டிய ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை, அவார்ட் /ரிவார்ட் தராமல் இருப்பது, முக்கிய அலுவலக கூட்டங்களில், கிளையன்ட் மீட்டிங் ல் அவரை தவிர்ப்பது ஆகியவை செய்தால் அதுதான் – Quite firing.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வேலைக்கு சேர்த்துக் கொளளப்பட்ட ஒருவர், பணியில் சோபிக்காமல் ஏனோ தானோ என்று இருந்தால் அவர் நாம் மேற்கூறியது போல் நடத்தப்பட்டால் அதனைக் குறை சொல்ல முடியாது. ஆனால், மாங்கு மாங்கு என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்தவர்கள், சாதித்துக் காட்டியவர்கள், கெட்டிக்காரர்கள், திறமைசாலிகள் ஆகியோர் Quite firingக்கு ஆளாகிப் போவது கொடுமை. அலுவலக அரசியலின் கோர முகம் அது.
ஓரம் கட்டப்படும் போது ஓயாது உழைத்த மனிதனால் இப்படி நடத்தப்படுவதை தாங்க இயலாது.
டீம் லீடர் எனப்படும் தலைமைப் பொறுப்பாளரை விட கெட்டிக்காரர் ஆக உள்ள குழு உறுப்பினர்களையும் பாராட்டி வேலையை வாங்குவது என்பது சிறந்த தலைமைப் பண்பின் அடையாளம். மாறாக, கெட்டிக்காரர் ஆக இருப்பவரை Quiet firing மூலம் தவிர்க்க நினைப்பது, அவராக விலகிக் கொள்ளும் நிலையில் கொண்டு நிறுத்துவது டீம் லீடருக்கு ஒரு வித அல்ப மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால், அது டீமுக்கும் நிறுவனத்துக்கும் நன்மை பயக்காது.
சரி. Quiet firing தமக்கு நடக்கிறது என்பதை ஒரு ஊழியர் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உணர்ச்சி வசப்படாமல், தம்முடைய மேலதிகாரி அல்லது மேலாளரிடம் இது குறித்து அவரிடம் மனம் விட்டுப் பேசிப் பார்க்க வேண்டும்.
ஒதுக்கப்படுவதற்கான காரணத்தை கோபப்படாமல் கேட்க வேண்டும். நீங்கள் உரையாடல் மேற்கொண்ட பின்னரும் நிலைமை மாறா விட்டால் நீங்கள் வேறு நிறுவனத்திற்கோ வேறு பணிக்கோ போக வேண்டும்

No comments:

Post a Comment