audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, April 7, 2021

💜💛💜💛💜💛💜💛💜💛💜💛

*💗உடல் நலம்...*

*சிறுநீரகங்களை பாதிக்கும் இரண்டு காரணிகள்..!!*

கடந்த, 15 ஆண்டுகளில் சிறுநீரக பிரச்னைகளுக்காக, மருத்துவ ஆலோசனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்னைகளில், சமீபத்தில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள் என்று, இரண்டு வகைகள் உள்ளன. இதில், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள் பற்றி, அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

*உறுப்புகளை பாதிக்கும்..*

நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகளுக்கு, பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பது, சர்க்கரை கோளாறு. கட்டுக்குள் வைக்காத ரத்த சர்க்கரை, பல உறுப்புகளை பாதிக்கும்; சிறுநீரகங்களை அதிகமாக பாதிக்கும். இரண்டாவது, உயர் ரத்த அழுத்தம்; இதுவும் ரத்த சர்க்கரை போன்றே கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதற்குண்டான மருந்துகள், உணவு முறை, உடற்பயிற்சி செய்து, இரண்டையும் சீரான நிலையில் வைக்க வேண்டியது அவசியம்.

நாள்பட்ட சிறுநீரக கோளாறு உள்ள, 100 பேரில், 70 சதவீதம் பேருக்கு, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என்ற இரண்டால் தான், சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது; 30 சதவீதம் பேருக்கு மட்டுமே, மற்ற காரணிகளால் பாதிப்பு வருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் தாராளமாக கட்டுப்படுத்த முடியும்; வராமலேயே தடுக்கவும் இயலும். இப்படி செய்தால் மட்டுமே, சிறுநீரக கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

காரணம், நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளுக்கு நிரந்த மருத்துவ தீர்வு கிடையாது. ரத்த சர்க்கரையின் அளவும், உயர் ரத்த அழுத்தமும் தொடர்ந்து அதிகமாக இருந்தால், நாளாக நாளாக சிறுநீரகங்களில் பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்லும். பாதிப்பின் வீரியத்தை குறைக்க முயற்சி செய்யலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், பாதிப்பு வந்த அடுத்த ஓராண்டில், 'டயாலிசிஸ்' சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடும். இந்த சிகிச்சை ஆரம்பித்த இரண்டாண்டுகளுக்கு மட்டுமே, அவர்கள் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்கு, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.

அந்த நிலை தற்போது இல்லை. உடனடியாக, டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. பிரச்னை வந்த பின், அடுத்த, 15 ஆண்டுகளுக்கு கூட, மருந்துகளிலேயே நாள்பட்ட சிறுநீரகக் கோளாறை கட்டுக்குள் வைக்க முடியும்.

*அறிகுறிகள்..*

கால் வீக்கம், முக வீக்கம், சிறுநீரில் நுரை போல போவது, ரத்தம் வருவது, சிறுநீர் அளவு குறைவாக போவது, மூச்சு வாங்குவது, களைப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள், தொடர்ந்து மூன்று மாதங்கள் இருந்தால், சிறுநீரக கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், பல ஆண்டுகள் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையில் உயிர் வாழ இயலும். அந்த அளவிற்கு நவீன மருத்துவ தொழில்நுட்பம் மாறி விட்டது. நல்ல தரமான டயாலிசிஸ் செய்தால், இயல்பாக வாழ முடியும்.

எனவே, டயாலிசிஸ் என்பது, அசாதாரணமான சிகிச்சையாக இருந்தாலும், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. டயாலிசிஸ் செய்தாலே, உடலின் வேறு உறுப்புகள் பாதிக்கும்; டயாலிசிஸ் என்பது, சிறுநீரகக் கோளாறின் இறுதிக் கட்டம் என்ற நிலையும் தற்போது இல்லை. இந்த சிகிச்சை செய்து, பல ஆண்டுகள் இயல்பாக வாழ்பவர்கள் பலர் இருக்கின்றனர்.

'சிறுநீரகங்கள் முழுக்க செயலிழந்த பின், டயாலிசிஸ் செய்கிறோம். அப்படி இருந்தாலும், இது, வலி மிகுந்த செலவு பிடிக்கும் சிகிச்சை' என்று மனதளவில் சோர்வடையாமல், இயல்பாக ஏற்றுக் கொண்டால், எந்த பிரச்னையும் இருக்காது. நல்ல தரமான டயாலிசிஸ் சிகிச்சை என்றால், வாரத்திற்கு மூன்று முறை வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டும். இதற்கு மாதம், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். நம் நாடு என்றில்லை, வளர்ந்த நாடுகளில் கூட, இலவசமாக இதை செய்வது என்பது இயலாத விஷயம்; மருத்துவ காப்பீடு இருந்தால் பிரச்னைகள் இருக்காது.

இதன் இன்னொரு பக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். டயாலிசிஸ் என்பது, சர்வரோக நிவாரணி இல்லை. இதை செய்தால், இதயக் கோளாறு, மூளை தொடர்பான பிரச்னைகள் வராது என்றெல்லாம் சொல்ல முடியாது. சர்க்கரை கோளாறு இருந்தால், உடலின் பல உறுப்புகளும் பாதிக்கப்படலாம். டயாலிசிஸ் சிகிச்சை என்பது, பழுதான சிறுநீரகங்களுக்கான சிகிச்சை. இந்த சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, மற்ற உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால், டயாலிசிஸ் செய்து, 15 ஆண்டுகள் வரை இயல்பாக வாழ முடியும்.

டயாலிசிஸ் செய்பவர்களுக்கு மாரடைப்பு வருவது, இந்த சிகிச்சையால் இல்லை. சர்க்கரை கோளாறு நீண்ட காலமாக இருப்பதால், இதயமும் பாதிக்கப்பட்டு இருக்கும்; அதனால் வந்த விளைவு இது. டயாலிசிஸ் ஆரம்பித்த சில ஆண்டுகளில் மாரடைப்பு வந்தால், இந்த சிகிச்சையால் தான் என்ற தவறான எண்ணம் இருக்கிறது.

இது, இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால் வருவது. இதய வால்வுகளில் அடைப்பு ஓரிரு ஆண்டுகளில் வராது. சர்க்கரை கோளாறு பல ஆண்டுகள் இருந்து, ரத்த நாளங்களில் அடைப்பு என்று, சர்க்கரை கோளாறு ஆரம்பித்த அன்றிலிருந்து, மெதுவாக வர ஆரம்பித்து இருக்கும்.
பல நேரங்களில் அறிகுறிகள் இல்லாமல், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்த பின், வெளியில் தெரிய வரும். அதனால், சர்க்கரை கோளாறு, ரத்த அழுத்தம் இருந்தால், ஆண்டிற்கு ஒருமுறை எல்லா உறுப்புகளும் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பரிசோதித்து, தெரிந்து கொள்வது நல்லது; அறிகுறிகள் வந்த பின் சென்றால், பிரச்னையை முழுமையாக சரி செய்ய முடியாமல் போய்விடும்.

டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியம்
சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்.

*பகிர்வு*

💜💛💜💛💜💛💜💛💜💛💜💛

உளவியல் தகவல்கள்



1. _ஏழாண்டுகளுக்கு மேலாக *நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும்* நீடிக்குமாம்._ 

2. _அடிக்கடி *ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.*_ 

3. எல்லாவற்றுக்கும் _எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்க_ ளாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது _ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்._ 

5. நாளொன்றுக்கு நான்கைந்து _பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்._ 

6. உங்கள் _மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்._ 

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. *மிக _விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்_ தானாம்.* 

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, _அவர்களுக்குள் காதல் இருக்கிறது._ இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. *இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.* 

11. *ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம்* என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் *அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் _(ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்)_* என்று அர்த்தம். 

13. *ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.*  

14. ஒருவர் *அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்.* 

 *15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு _இதய நோய்_ வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.*  

 _*16. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் (மணிநேரம்) ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.*_ 

_*17. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* (முடியாது/கிடைக்காது/இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* பேசுபவராக இருப்பார்..💜

ஏசியின் சரியான பயன்பாடு

*🦉*26+ டிகிரியில் ஏ.சி. வைக்கவும்.*
 📣📣📣📣📣📣? ?📣

*EB இலிருந்து ஒரு நிர்வாக பொறியியலாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்கள்:*

*ஏசியின் சரியான பயன்பாடு:*

*வெப்பமான கோடை காலம் தொடங்கி, ஏர் கண்டிஷனர்களை தவறாமல் பயன்படுத்துவதால், சரியான முறையைப் பின்பற்றுவோம்.*

 பெரும்பாலான மக்கள் தங்கள் ஏ.சி.க்களை 20-22 டிகிரியில் இயக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் குளிர்ச்சியை உணரும்போது, ​​அவர்கள் உடல்களை போர்வைகளால் மூடி விடுவார்கள்.  இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது.  எப்படி ???

 நம் உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்பது உங்களுக்குத் தெரியுமா?  உடல் 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் பொறுத்துக்கொள்ள முடியும்.  இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

 அறை வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது, ​​தும்மல், நடுக்கம் போன்றவற்றால் உடல் வினைபுரிகிறது.

 நீங்கள் ஏ.சி.யை 19-20-21 டிகிரியில் இயக்கும் போது, ​​அறை வெப்பநிலை சாதாரண உடல் வெப்பநிலையை விட மிகக் குறைவாக இருக்கும், மேலும் இது உடலில் தாழ்வெப்பநிலை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது, இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இதன் மூலம் உடலின் சில பகுதிகளில் இரத்த வழங்கல்  போதுமானதாக இல்லை என்றும் காண்கிறார்.  கீல்வாதம் போன்ற நீண்ட கால  குறைபாடுகள் உண்டாகும்.

 ஏ.சி இயக்கத்தில் இருக்கும்போது பெரும்பாலும் வியர்வை இருக்காது, எனவே உடலின் நச்சுகள் வெளியே வரமுடியாது, நீண்ட காலமாக தோல் ஒவ்வாமை அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

 இதுபோன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏ.சி.யை இயக்கும்போது, ​​அது அமுக்கி தொடர்ந்து முழு ஆற்றலில் இயங்குகிறது, அது 5 நட்சத்திர தரங்களாக இருந்தாலும், அதிக சக்தி நுகரப்படும் & அது உங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை வீணடிக்கும்.

 ஏசி இயக்க சிறந்த வழி எது ??  26 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலைகளை அமைக்கவும்.
 முதலில் ஏ.சியின் வெப்பநிலையை 20 - 21 என அமைப்பதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, பின்னர் 
 ஏ.சி.யை 26+ டிகிரியில் இயக்குவது மற்றும் விசிறியை மெதுவான வேகத்தில் வைப்பது எப்போதும் நல்லது.  28 பிளஸ் டிகிரி சிறந்தது.

 இதற்கு குறைந்த மின்சாரம் செலவாகும், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையும் வரம்பில் இருக்கும், மேலும் உங்கள் உடல்நலத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

 இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஏசி குறைந்த மின்சாரத்தை உட்கொள்ளும், மூளையில் இரத்த அழுத்தமும் குறையும் மற்றும் சேமிப்பு இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.  எப்படி ??

 26+ டிகிரியில் 10 லட்சம் வீடுகளில் ஏ.சி.யை இயக்குவதன் மூலம் ஒரு இரவுக்கு 5 யூனிட்டுகளை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பின்னர் நாங்கள் ஒரு நாளைக்கு 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கிறோம்.

 பிராந்திய மட்டத்தில் இந்த சேமிப்பு ஒரு நாளைக்கு கோடி யூனிட்டுகளாக இருக்கலாம்.

 தயவுசெய்து மேலே உள்ளவற்றைக் கருத்தில் கொண்டு, உங்கள் ஏ.சி.யை 26 டிகிரிக்குக் கீழே இயக்க வேண்டாம்.  உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

*பகிர்வு*

கருக்குழாயில் கருவளர்ச்சி பற்றி

Partagé de mes Notes:
🔯 #கருக்குழாய்_கருவளர்ச்சி
#பற்றி

#நாம்_தெரிந்து_கொள்ள 
#வேண்டியவை…❓❓❓

(#Ectopic_Pregnancy)

தாம்பத்ய உறவில் கணவனிடம் இருந்து வெளியாகும் விந்து, பெண் உறுப்புக்குள் வருகிறது. அதில் இருக்கும் உயிரணு மட்டும் நீச்சல் அடித்து கர்ப்பப்பை வாய்வழியாக கருக்குழாய்க்குள் நுழைகிறது. 

சினைப்பையில் இருந்து முதிர்ந்து வெடித்து வெளியேறும் சினைமுட்டையும் கருக்குழாய்க்கு வருகிறது. 

4, 5 மணிநேரத்தில் உயிரணு சினை முட்டையை துளைத்து உள்ளே புகுந்து கருவாகி விடுகிறது. மனிதப் பிறப்பின் இந்த அற்புத நிகழ்வு கருக்குழாயில் தான் அரங்கேறுகிறது. 
4, 5 நாட்கள் கருக்குழாயிலே கரு வளர்ந்து சிறிது சிறிதாக கர்ப்பப்பையை நோக்கி நகர்ந்து வரும். 

கர்ப்பப்பை தேவையான மாற்றங்களோடு கருவை உள்வாங்கிக்
கொள்ளும். பின்பு கர்ப்பப்பைக்குள் கரு, சிசுவாக வளர்ந்து குழந்தையாக உருவாகும். கருக்குழாய்கள் மற்றும் அதனைச் சார்ந்த நவீன மருத்துவ முறைகளைப் பார்ப்போம்...

#கருக்குழாய்கள்

- இவை பிறப்பில் பெரும்பங்கு வகிக்கும் இனப்பெருக்க உறுப்புகள்.

- கருக்குழாய்கள் சினைப்பையில் தொடங்கி, கர்ப்பப்பையில் நிறைவடைகிறது.

- உற்றுக்கவனித்தால், ஒரு மனிதன் இருகைகளையும் நீட்டி சினைப்பைகளை தாங்கிப் பிடித்தது போல், இந்த கருக்குழாய் கட்டமைப்பு தோன்றும். 
தலா 10 செ.மீ. நீளம் கொண்டவை. நூலிழை போல் ஒன்று முதல் 4 மி.மீட்டர் அகலம் கொண்டவை.

நீங்கள் சோதனைக்குழாய் குழந்தை முறையைப் பற்றி கேள்விப்
பட்டிருப்பீர்கள்.
 முதல் #சோதனைக்குழாய்_குழந்தை 
#லூயிஸ்_பிரவுன் இங்கிலாந்தில் பிறந்தது.

பெண்ணின் உடலுக்குள் கருக்குழாய் இயற்கையாக செய்யும் அதே பணியைத்தான், வெளியே ஆய்வு கூடத்தில் சோதனைக்குழாய் மூலம் செய்கிறார்கள். சினை முட்டையையும், உயிரணுவையும் சோதனைக் குழாயில் சேர்த்து கருவாக்கம் செய்து, பின்பு தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். கருக்குழாயில் பாதிப்பு கொண்ட பெண்களுக்காக சோதனைக் குழாய் முறை உருவாகி இருக்கிறதென்று!

கருக்குழாய்கள் மிகமிகச் சிறியதாகவும்-மிகமிக மென்மையான
தாகவும் இருப்பதால் இது பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். 

தற்போதைய கணக்குப்படி பெண்களின் குழந்தையின்மைக்கு 20 முதல் 25 சதவீதம் கருக்குழாய் பாதிப்புதான் காரணமாக இருக்கிறது.

* திருமணத்திற்கு முன்பு பெண்கள் ஏற்படுத்திக்
கொள்ளும் உடலுறவு மற்றும் அதன் பின் விளைவுகளால் ஏற்படும் நெருக்கடிகள்.

*அதிகமானவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும்போது ஏற்படும் பால்வினைநோய் பாதிப்பு❗ பால்வினை நோய்களில் '#கிளாமைடியா' என்பது #வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இது எந்தவித நோய் அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் உள்ளே இருந்து கருக்குழாய்களை பாதிக்கச் செய்துவிடும்.

* காச நோயின் அதிக தாக்குதலும் கருக்குழாய்களை பாதிக்கலாம்.

* அறுவை சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பாலும், பிறவியிலே ஏற்படும் குறைபாட்டாலும் கருக்குழாயில் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு.

கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுபிடிக்க நவீன மருத்துவ வழிமுறைகள் உள்ளன. குறிப்பிட்ட திரவத்தை கர்ப்பப்பை வாய் பகுதியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். அந்த திரவம் செலுத்தப்படும் போது அது கருக்குழாய்களுக்குள் முன்னேறி செல்லும். அப்போது எங்கு தடை ஏற்படுகிறது❓

👉எந்த அளவுக்கு அந்த தடை  உள்ளது❓
என்பதை எல்லாம் கண்டுபிடித்து விடலாம். 

லேப்ராஸ்கோபி முறையில் கண்களுக்குத் துல்லியமாகத் தெரியும் நீலநிற திரவத்தை செலுத்தலாம். அந்த திரவம் செல்வதை கேமிராவில் பார்க்கலாம்.

இதன் மூலம் வலது-இடது எந்தபக்க கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து சிகிச்சை செய்யலாம். அழுத்தம் கொடுத்து திரவத்தை செலுத்தும்போதே சிலருக்கு அடைப்பு நீங்கி, பாதை சரியாகிவிடும். அதனால் அவர்கள் விரைவாகவே தாய்மை அடையும் வாய்ப்பு ஏற்படும். நுண் குழாயை உள்ளே செலுத்தி அடைப்பை நீக்கும் முறையும் ஓரளவு பலன்தரும். இந்த முறைகளில் பலன் கிடைக்காதபோது சோதனைக்குழாய் குழந்தை முறை பரிந்துரைக்கப்படும்.

கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதிலே கரு தங்கி வளர்வது உயிருக்கே ஆபத்தானதாகும். 

கருக்குழாயில் வளரும் கருவானது 5-வது நாள் கர்ப்பப்பைக்குள் வந்துவிட வேண்டும். அடைப்பு இருந்தால், கர்ப்பப்பைக்குள் செல்லமுடியாமல் கருக்குழாயிலே தங்கி கரு வளரத் தொடங்கிவிடும். 
அது வளரும் போது கருக்குழாய் வெடித்து, தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இப்படி கரு வளர்வதை '#எக்டோபிக்_பிரக்னன்சி' என்பார்கள். 

முன்பெல்லாம் இத்தகைய புற கர்ப்பம் (எக்டோபிக் பிரக்னன்சி) பாதிப்பால் ஏராளமான #பெண்கள் #இறந்திருக்கிறார்கள். 

தற்போது அதை கண்டுபிடித்து, அந்த கருக்குழாயை அகற்றி, கருவை நீக்கம் செய்து விடுவார்கள். மீதமிருக்கும் இன்னொரு குழாய் மூலம் அடுத்து தாய்மை அடைய முடியும்.

தேவைக்கு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் மீண்டும் தாய்மை அடைவதை தவிர்க்க

 கருத்தடை ஆபரேஷன் செய்து
கொள்வார்கள். 

அப்போது கருக்குழாயை துண்டித்து முடிச்சு போடப்படும். இது '#டியூபெக்டமி' கருத்தடை ஆபரேஷன் ஆகும். இந்த கருத்தடை ஆபரேஷனை செய்து கொண்டவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், 
'#ரீ_கேனலைஷேசன்' செய்து மீண்டும் கருக்குழாய்களை ஆபரேஷன் மூலம் இணைப்பார்கள். 

அதன்பின்பு தாய்மை அடைய வாய்ப்பு உண்டு❗

#புதுமணத்_தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

🔴 தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன❓❓❓❗❗❗

* கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா அல்லது அதைக் கடந்து விட்டேமா❓

* தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்
கிறதா❓

* உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா❓

* கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது❓

* கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்❓

* தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்❓

* உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா❓ அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேணடியது அவசியமா❓

* உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா❓

* பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன❓

* பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா❓

* எப்போது கருத்தரிக்க இயலும்❓

* கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்❓

* கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா❓

* பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி❓

* சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன❓

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
#La médecine traditionnelle

பித்தப்பை கற்கள் என்றால்

 🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


*பித்தப்பை கற்கள் என்றால் :

நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும்.
பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.

பெண்களுக்கு அதிகம் :
இந்த பித்தப்பையில் கல் உருவாகும் பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள்,கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

காரணம் :
இதைத் தவிர நம்முடைய வாழ்க்கை முறையும் பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றே சொல்லலாம். அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன.
நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், டயட் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.

வகைகள் :

பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

 பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர்.
அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.

*மருத்துவர்*
*Dv.Arul...*
,.....
 🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

  *பித்தப்பை கல்* (Gallstones)
         *கரைய எளியவழிகள்.*

       பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.

     நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை. 

     அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

     நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

     இப்படி பித்தப்பை சுருங்கி விரியாமல் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

     ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாத போது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். 

   பொதுவாக நம் தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் இதில் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

*பித்தப்பையில் கற்கள் *
   〰〰〰〰〰〰〰〰

       அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் .

மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

அறிகுறிகள்
  〰〰〰〰

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல், வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற கள் பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.
அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

*பித்தப்பை கல் இருப்பது
 உறுதியானால்..*
〰〰〰〰〰〰〰〰

1. அசைவ உணவை அறவே நிறுத்தி விட வேண்டும்.

2. வறுத்த மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்க வேண்டும் ,

6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.

8. உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

பித்தப்பை கல் நீங்க...
〰〰〰〰〰〰〰〰

1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

2. எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். 

   பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். 

    கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

4. பத்து பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறுக்கி வடிகட்டி அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக பருகுவதின் வாயிலாக பித்தப்பை கற்கள் கரைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

5.நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். 

ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது

1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும்.

 இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,

2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.

வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.

4. வலி இல்லாத காலத்தில் நிலவேம்பு சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

5. பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில அருகில் உள்ள (அக்குபஞ்சர்,சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா,)  பாரம்பரிய மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.

*மருத்துவர்*
*Dv.Arul...*

தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது...கவனிங்க...

*

பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத் தான் நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு.

பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்...

*மூளை:* 
மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.  

*குடல்:* 
குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப் பிரச்னை போன்றவை தலை காட்டும்.  

*மார்பகம்:* 
பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.  

*சிறுநீர்ப்பை:* 
இது வயசாவது 65ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக்கி வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.   

*நுரையீரல்:*
 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து வெளியே விடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான். 

*குரல்:* 
தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும்.  65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.  

*கண்:* 
பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.  

*இருதயம்:* 
ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.  

*கல்லீரல்:* 
இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது.  குவாட்டரை நினைக்காத வரை  இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.  

*சிறுநீரகம்:* 
ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.  

*எலும்புகள்:*
 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.  

*பற்கள்:* 
எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.  

*தசைகள்:* 
முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.  

*தோல்:* 
தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.  

தலைமுடி:
முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்;  வெள்ளை முடி தோன்றும்...

Thursday, April 2, 2020

மது அருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியுமா.!? இதோ உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்..!!








கொரொனா வைரஸிற்கு ஜெர்மன், அமெரிக்கா, இந்தியா என மருந்து கண்டுபிடித்துவிட்டதாய் அறிவித்த போதும் இன்னும் முதற்கட்டத்திலேயே இருக்கின்றது. மனிதர்களுக்கு பரிசோதனை செய்தார்களா? என்னானது என்பது இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அண்மை காலமாக மது அருந்தினால் கொரொனா வைரஸ் தாக்காது என்ற செய்தி வைரலானது.


இதனை நம்பி மக்கள் மது தேடி அலைந்தனர். ஆனால் இது குறித்த உண்மை தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆல்கஹாலுக்கு கொரோனா வைரஸ் அழியும் என்பதை மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கொரோனாவை அழிப்பதற்கு ஆல்ஹாலின் அளவு 99% வீதம் இருக்க வேண்டும். அது வெளியில் உயிர் வாழும் வரை தான்.





அதாவது கைகள், கால்களில் இருக்கும் வைரஸை அழிக்க மட்டுமே. ஆனால் நீங்கள் அருந்தும் மதுவில் 40 தொடக்கம் 60 வரையிலான ஆல்ஹால் அளவே இருக்கிறது. இது கை கால்களில் உள்ள வைரஸை அழிக்கவே போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உங்களுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மது அருந்தினால் குணமாகும் என்ற தவறான கருத்தில் இருந்து மீண்டு விடுங்கள். இது முற்றிலும் வதந்தியாகும் கொரொனா வைரஸில் இருந்து மீள வைத்தியசாலையை நாடுவதே சிறந்தது என தெரிவித்துள்ளதுடன் மது அருந்தினால் கொரொனா வைரஸ் அழியாது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளது…!!

தும்மல் , இருமல் , மட்டும் இன்றி நுண்துளிகள் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு பரவும் கொரோனா வைரஸ்..! எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பானிய ஆய்வாளர்கள்…!!



இருமல் , தும்மல் , தவிர்த்து நுண்துளிகள் மூலமும் கொரொனா வைரஸ் பரவுவதாக ஜப்பானிய மருத்துவ ஆய்வாளர் இன்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது வரை இரண்டு முறையினால் அதாவது இருமல், மற்றும் தும்மலின் மூலம் மட்டுமே நேரடியாக தடைகளை மீறி கொரோனா தாக்கும் வாக்கு இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில்..
இன்றைய தினம் மூன்றவதாக நுண்துளிகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக ஜப்பானிய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தும்மல் மற்றும் இருமலை விட நுள் துளிகள் மூலம் பரவும் வேகமும் பலமும் அதிகம் என் கூறியுள்ள ஆய்வாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர் எதிரில் நின்று பேசும் போது நுண்துளிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டவை வெளிவருகின்றன.
காற்றில் கொரோனா வைரஸ் பரவாத நிலையில் நுண்துளிகளால் வைரஸ் சில மணி நேரங்கள் உயிர் வாழக் கூடியவை. அவை குறித்த இடத்திலேயே உயிருடன் இருக்கின்றன. இதனால் தும்மல் இருமலை விட நுண்துளிகள் மூலம் வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்த முறையில் வைரஸ் பரவினால் யாராலும் தடுக்க முடியாமல் போகும் என ஜப்பானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப் பட்டால் தயவு செய்து வைத்தியர்களை நாடுங்கள். உண்மை அறிகுறிகளை கூறி அரசுக்கு உதவுங்கள். எங்கள் கையை மீறி போகிறது இழப்புகள், ஜாதி, மதம் என்பதை மறந்து விடுங்கள். தயவு செய்து யாராவது பாதிக்கப் பட்டால் நீங்களாக மருத்துவமனை செல்லுங்கள். நாடு நம் ஒவ்வொருவர் கையில் உள்ளது. தயவு செய்து ஆபத்தை உணருங்கள்…!!

Sunday, June 9, 2019

உலகின் முதல் மொழி தமிழ்!
மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.

Saturday, June 1, 2019


2. I got your message. මට ඔයාගෙ පණිවුඩය ලැබුන.

3. When? කවද්ද/ කීයටද?

4. Before the lunch. දවල් කෑමට පෙර.

5. You are late. ඔයා පරක්කුයි.

6. Sorry! Sorry! සමාවෙන්න සමාවෙන්න.

7. You know, I like everything here. ඔයා දන්නවනෙ ,මම මෙහේ හැමදේටම කැමතියි.

8. Can I come in? මම ඇතුලට එන්නද? 

9. Let`s go. Let`s go. යමු යමු.

10. Hurry up. I am late. ඉක්මන් කරන්න.මම පරක්කුයි. 

11. Let me take a piss first. මුලින්ම මම මුත්‍රා කරල එන්නම්./ඉඩදෙන්න 

12. I gotta pee. මම මුත්‍රා කරන්න ඕනෙ.

13. That`s not even funny. ඕක විහිළුවක්නම් නෙමෙයි හොඳේ.

14. I am hungry. මට බඩගිණියි.

15. I`m starving. මම හාමතේ.

16. I`ll buy you breakfast. මම ඔයාට උදේකෑම අරන්දෙන්නම්.

17. You are so serious. ඔයා හරි සීරියස් නෙ.

18. Today is my first day. අද මගේ පළවෙනු දවස.

19. We have to be on time. අපිට වෙලාවට ඉන්න වෙනව.

20. We are going. අපි යනගමන්. / අපි යනව.

21. I got a job. මට ජොබ් එකක් ලැබුන.

22. Could I stay with you for a couple days? මට ඔයත් එක්ක දින කීපයක් ඉන්න පුලුවන්ද?

23. I don`t know if that`s such a good idea. මම දන්නේ නෑ ඒක එතරම් හොඳ අදහසක් ද කියල.

24. I don`t have anybody else. මට වෙන කවුරුවත් නෑ.

25. You are the only one. ඔයයි එකම කෙනා.

26. You could have paid the rent. ඔයාට කුළිය ගෙවන්න හැකිව තිබ්බ.

27. I don`t want to live this life anymore. මට මේ ජීවිතේ ගෙවන්න ඕනෙ නෑ තවදුරටත්./ මේ විදියට ඉන්න ඕනෙ නෑ/ මේ ක්‍රමේ 

28. I really don’t. මට ඇත්තටම ඕනෙ නෑ.) මෙය පෙර සඳහන් කළ අදහස හා බැඳේ)

29. What are we doing here? අපි මොනවද මෙහේ කරන්නෙ?

30. I believe you are honest. මම විශ්වාස කරනවා ඔයා අවංකයි.( කියල)

31. I don`t care what you believe. මම ගණන්ගන්නෙ නෑ ඔයා විශ්වාසකරන දේ.

32. That`s not the reason. ඒක නෙමෙයි හේතුව.

33. We have two years left. අපිට අවුරුදු දෙකක් ඉතුරුයි.

34. Why did you keep this as a secret? ඇයි ඔයා මේක රහසක් විදියට තියාගත්තෙ?

35. It is important. ඒක වැදගත්.

36. Did he name me? එයා මාව නම්කරාද?

37. I am going to decline. මම ප්‍රතික්ෂේප කරන්නයි යන්නෙ.

38. I am going to get you out. මම ඔයාව එළියට ගන්නයි යන්නෙ.

39. Are you kidding me? ඔයා මට විහිලු කරනවද?

40. No. I am not. නෑ මම එහෙම නෙමෙයි.

41. I think your job is more important than this. මම හිතන්නෙ ඔයාගෙ ජොබ් එක මේකට වඩා වටිනව.

42. You know what I mean. ඔයා දන්නව මම අදහස් කරන්නෙ මොකද්ද කියල.

43. I don`t know what you are talking about. මම දන්නෙ නෑ ඔයා මොනව කතාකරනවද කියල.

44. Have you watched Avatar? ඔයා ඇවටා බලල තියේද?

45. What? මොකක් ?

46. It is an English movie. ඒක ඉංග්‍රීසි චිත්‍රපටයක්.

47. I have never seen that movie. මම කවදාවත් බලල නෑ ඒ චිත්‍රපටය.

48. It is old. ඒක පරණයි.

49. My god. No… මගේ දෙයියනෙ .නෑ …

50. You need to do everything you can. ඔයා ඔයාට පුලුවන් හැමදේම කරන්න ඕනෙ.

51. I mean, if you want to learn English. මම කියන්නේ , ඔයාට ඉංග්‍රීසි ඉගෙනගන්න ඕනෙ නම්. 

52. I can`t believe you. මට ඔයාව විශ්වාස කරන්න බෑ.

53. How do you know all these things? ඔයා කොහොමද මේව දන්නෙ?

54. I am helping you. මම ඔයාට උදවු කරනව/ කරනගමන්.

55. I decided to think like you. මම තීරණයකරා ඔයාවගේ හිතන්න.

56. You know that, right? ඔයා ඒක දන්නව නේ?

57. Yes, I know. ඔවු මම දන්නව.

58. I want you to be involved. මට ඕනෙ ඔයාව සබන්ධවෙන්න.

59. You need to know how the rest of them feel. ඔයා දැනගන්න ඕනෙ ඔවුන්ගෙ අනෙක් අයට දැනෙන්නෙ කොහොමද කියල.

60. They are your family members. එවුන් ඔයාගෙ පවුලේ අය.

61. Am I in trouble? මම කරදරේකද?

62. I don`t care. මට ගානක් නෑ/ ගනන්ගන්නෙ නෑ 

63. What would you do with it? ඔයා එකෙන් මොනව කරන්නද?

64. Did Nina give you the newspaper? නිලූ ඔයාට පත්තරේ දුන්නද?

65. She gave it to me. ඇය ඒක මට දුන්න.

66. She didn`t give it to me. ඇය ඒක මට දුන්නෙ නෑ.

67. Did he come? ඔහු ආවද??

68. He left a message. ඔහු පණිවුඩයක් තිබ්බ.

69. Did you agree? ඔයා එකඟ උනාද?

70. He wanted to see me. ඔහුට මාව හම්බ වෙන්නයි ඕනෙ උනේ.

71. What did you say? ඔයා මොකද්ද කිව්වෙ?

72. I texted him and I told him I was not interested. මම මැසේජ් එකකින් කිව්ව මගේ කැමැත්තක් නෑ කියල/ මට ඕනෙ නෑ කියල 

73. You gotta tell him. ඔයා එයාට කියන්න වෙනව.

74. Why do you need them? ඇයි ඔයාට ඒව ඕනෙ වෙන්නෙ?

75. Don`t ever go behind my back again. ආයෙ කවදාවත් මම නැතිව/නැතිවෙලාවෙ /හොරෙන් වැඩකරන්න එපා./මට පිටින් තීරණගන්න එපා 

76. He needs my help. ඔහුට මගේ උදවු ඕනෙ.

77. This is drilling a hole in my brain. මේක මගේ ඔලුව අවුල් කරනව/ මගේ මොලේ හිලක් විදිනව 

78. I don`t need them. මට ඒව ඕනෙ නෑ.

79. It is not the same thing. ඒක සමාන නෑ/ ඒක අනිත් ඒවට වඩා වෙනස්./ ඒ ඒකම නෙමෙයි 

80. Today is my first trial. අද මගේ මුල් ට්‍රයල් එක./ පරීක්ෂණය 

81. I haven`t been to trial before. මම කලින් ට්‍රයල් වලට ගිහින් නෑ.

82. I was on the phone. මම ෆෝන් කේ උන්නෙ?

83. I need a favor. මට උදව්වක් ඕනෙ.

84. A big one? ලොකු එකක්?

85. I know what it is for. මම දන්නව ඒ මොකටද කියල.

86. What do you want? ඔයාට මොකද්ද ඕනෙ?/ මොනවද 

87. I don`t want anything. මට මොකුත් ඕනෙ නෑ.

88. Listen to me. මට ඇහුම්කන්න දෙන්න. / කියනදේ අහන්න 

89. I hear you. මට ඔයා කියන දේ ඇහෙනව.

90. It is not that simple. ඒක ඒ තරම් සරල නෑ.

91. Do it now. දැන් ඒක කරන්න.

92. It is for me. ඒක මං වෙනුවෙන්.

93. I don`t respond to threats. මම තර්ජනවලට ප්‍රතිචාර දක්වන්නෙ නෑ.

94. I know you. මම ඔයාව දන්නවනෙ.

95. Don`t touch that. ඕක අල්ලන්න එපා.

96. All right. All right. හරි හරි.

97. You really know me. ඔයා ඇත්තටම මමගැන දන්නව.

98. I really do. මම ඇත්තටම දන්නව.( පෙර අදහස සමග බැඳේ)

99. As a friend, I can start a ritual with you. යාලුවෙක් විදියට මට ඔයත් එක්ක පුරුද්දක් ඇතිකරගන්න පුලුවන්./ සිරිතක් 

100. What do you want to do? ඔයාට මොකද්ද කරන්න ඕනෙ?

101. We can say “Theruvan saranay” when we leave. අපිට තෙරුවන් සරණයි කියන්න පුලුවන් අපි පිටමං වෙනකොට.

102. You mean,saying, “good bye?” ඔයා කියන්නෙ , සමුගන්නව කියන එකද?

103. Yes. What do you think? ඔවු. ඔයා මොකද හිතන්නෙ?

104. Good idea. හොඳ අදහසක්.

105. One more thing. තව එක දෙයක්.

106. Yes. ඔවු / කියන්න 

107. Where can I find the video of this lesson? කොහෙන්ද මම මේකේ වීඩියෝ එක ගන්නෙ?

108. Oh, simple. Subscribe “Free English in Sinhala.” ආහ් සරලයි . සබස්ක්‍රයිබ් කරන්න “Free English in Sinhala”

109. What is it? මොකද්ද ඒ?

110. A YouTube channel. යූටියුබ් චැනල් එකක්.

111. Thanks. ස්තූතියි.
******************************

******************************************