audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, August 22, 2022

சேமியுங்கள் ! ஆனால் வாழ்வதில் கஞ்சத்தனம் வேண்டாம்


அட ! ஜஸ்கிறீம் குடிக்க போறியா ? வேண்டாம் ! விருந்தினர்விடுதி போய் வித விதமாக சாப்பிட போறியா ? வேண்டாம் ! தியேட்டர் போறியா ? வேண்டவே வேண்டாம்.

இது போன்று அடிக்கடி சேமிக்க வேண்டும் அதற்காக இது போன்றவைக்கு செலவழிக்க வேண்டாம்  என்றும் கூறும் அதிகளவானோரை நாம் பார்த்திருப்போம்.
நாமும் அவர்கள் கூறுவது சரி தான் வீணாக இவற்றுக்கெல்லாம் எதற்காக செலவழித்து பணத்தினை அநிநாயமாக்குவான் என்று எண்ணியிருப்போம்.
சேமிப்பு முக்கியம் தான் அதுவே எதிர்காலத்தில் வரப்போகின்ற சில பிரச்சினைகளுக்கு கை கொடுக்க உதவப் போகின்றது.
அதற்காக வாழ்வில் ஏற்படுகின்ற சிறிய சிறிய சந்தோசங்களையும் பிடித்தமானவற்றை வாங்கி உண்ணுவதிலும் நாம் பின்வாங்கி விடுகின்றோம்.
கேட்டால்  விருப்பம் இருக்கு ஆனால் சேமிக்கின்றோம் என்பார்கள். மிகவும் முட்டாள் தனமாக ஒரு விடயம். 

அதனை விட கவலை என்னவென்றால் இறுதியில் அவர்களை எடுத்து பார்த்தால் எதையுமே அனுபவித்து இருக்க மாட்டார்கள்.

வாழ்வின் ஏன் இந்த உலகத்தின் சுவாரஸ்யமான விடயங்களை கூட அனுபவிக்காமல் மண்ணுடன் மண்ணாக இறுதிக்காலத்தில் மாண்டு விடுவார்கள்.
இல்லாவிட்டால் ஏதேனுமொரு நோய் நிலைமை உண்டாகி அதற்கு அதிகளவில் செலவழிப்பார்கள். 
எத்தனை அழகான இந்த வாழ்வில் எத்தனை புதிய இடங்களை அனுபவிக்க வேண்டிய இந்த படைப்பில் சேமிப்பு என்பதை விட கஞ்சத்தனத்தில் அதிகளவானவற்றை இழந்து விடுவார்கள்.

ஒரு விபத்து ஏற்பட்டு இல்லாவிட்டால் இயற்கையாக இறக்க நேரிட்டால் அங்கு கூட ஓர் நிம்மதி இல்லாமல் எதனை அனுபவித்தோம் என்ற ஏக்கத்துடனே உலகினை விட்டு பிரிந்து விடுவார்கள்.

நான் கூற வருகின்ற விடயம் சேமியுங்கள் நிச்சயம் அது அவசியம் ஆனால் உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு ஒரு போதும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.
சந்தோசமாக அதனை செலவழித்து வாங்கிக் கொள்ளுங்கள். 

பணத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் நீங்கள் உங்கள் மனதிற்கும் அதிகளவான முக்கியத்துவம் அளியுங்கள்.
மனது சந்தோசமாகவும் , ஆரோக்கியமாகவும் இருந்தால் அனைத்தும் உங்களை தேடி வந்து விடும்.

No comments:

Post a Comment