audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, February 27, 2023

 சாலை வரை கோடுகள்



சாலை நடுக்கோடு :

இக்கோடு சாலையில் நீள வாட்டில் விட்டு விட்டு அல்லது தொடர்ச்சியாக வரையப்பட்டிருக்கும். இது மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

வகை 1:


விட்டு விட்டு வரையப்பட்டிருக்கும் கோட்டைக் கண்டால் நாம் அதன் பக்கமாகவே வாகனத்தை செலுத்த வேண்டும். தேவைப்படும்போது மட்டும் வலது பக்கம் செல்லலாம்.


வகை 2:


மையக்கோடு தொடர்ச்சியாக வரையப்பட்டிருந்தால், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் செல்லக்கூடாது.


வகை 3:


மையக்கோடு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இரட்டையாக வரையப்பட்டிருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் அக்கோட்டைத் தாண்டி கண்டிப்பாக வலது பக்கம் செல்லக்கூடாது.


வகை 4:


இக்கோடு வெள்ளை நிறத்தில் விட்டு விட்டு சாலைக்கு நீள வாட்டில் வரையப்பட்டிருக்கும். இந்தத் தடத்தில் செல்லும்போது, தேவைப்படும்போது ஒரு தடத்திலிருந்து மற்றொரு தடத்திற்கு மற்றவர்களுக்கு ஆபத்தின்றி மாறி மாறிச் செல்ல வேண்டும்.


வகை 5 (நான்கு தடச் சாலை ) :


இந்தச் சாலைகளில் மையக்கோடு தொடர்ச்சியாக வரையப்பட்டு சாலையின் இடப்பகுதி இரண்டு தடங்களாகவும், வலதுப்பகுதி இரண்டு தடங்களாகவும், விட்டு விட்டு வரையப்பட்ட வெள்ளைக் கோடுகளால் பிரிக்கப்படிருக்கும்.

மையக்கோட்டை ஓட்டிய தடம் முதல் தடம் என்றும், அதற்கும் அடுத்த தடம் இரண்டாவது தடம் என்றும் கூறப்படும்.

இது போன்ற சாலைகளில் வேகமாக நேராகச் செல்லும் அல்லது வலது புறம் திரும்பும் வாகனங்கள் முதலாவது தடத்தில் செல்லலாம்.

நேராக இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் அல்லது மெதுவாகச் செல்லும் வாகனங்கள் இரண்டாவது தடத்தில் செல்லலாம்.



வகை 6 (ஆறு தடச்சாலை ) :


இந்தச் சாலையில் மையக்கோடு தொடர்ச்சியாக வரையப்பட்டு சாலையின் இடது பகுதி மூன்று தடங்களாகவும் வலது பகுதி மூன்று தடங்களாகவும் விட்டு விட்டு வரையப்பட்ட வெள்ளைக் கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.

மையக்கோட்டை ஒட்டிய தடம் முதல் தடம் என்றும், அதற்கு அடுத்த தடம் இரண்டாவது தடம் என்றும். கடைசியாக உள்ள தடம் மூன்றாவது தடம் என்றும் கூறப்படும்.

இதுபோன்ற சாலைகளில் வேகமாக, நேராகச் செல்லும் அல்லது வலது புறம் திரும்பும் வாகனங்கள் முதலாவது தடத்தில் செல்லலாம்.

நேராக, வேகமாகக் செல்லும் வாகனக்கள் இரண்டாவது தடத்தில் செல்லலாம். மேலும் நேராக இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் அல்லது மெதுவாகச் செல்லும் வாகனங்கள் மூன்றாவது தடத்தில் செல்லலாம்.



சரியான பாதை :

பொதுவாக வாகனங்களை ஓட்டும்போது, வலது புறம் தன்னை முந்திச் செல்ல இருக்கும் வாகனங்களுக்குப் போதிய அளவு வழிவிட்டும், இடது புறத்தில் சென்று கொண்டிருக்கும், இரு சக்கர மிதிவண்டிகள் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தும் சாலையில் மையப்பகுதியில் வாகனத்தை ஓட்ட வேண்டும்.


2. சாலை சந்திப்புகளில் வாகனம் ஓட்டுதல்


வாகன ஓட்டிகள், தனக்கு வலது மற்றும் இடது புற வாகனங்களைக் கருத்தில் கொண்டே சாலையில் தொடர்ந்து செல்லும்போதும் (அல்லது) அதிலிருந்து இடது பக்க, வலது பக்க சாலைக்கு திரும்பிச் செல்லும்போதும் அதிக கவனத்துடன் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

1. வட்ட சந்திப்புகளில்:


1. வட்ட சந்திப்புகளில் வாகனத்தை ஓட்டிச் செல்ல இருக்கும் ஒருவர் இடது புறமாக திரும்பும் சாலைக்கு செல்ல நினைக்கும்போது தனக்கு இடது புறத்தில் சென்று கொண்டிருக்கும் வாகனத்திற்கு இடம் கொடுத்துச் செல்ல வேண்டும்.

2. நேராகச் செல்ல நினைக்கும் ஒருவர் தான் சென்று கொண்டிருக்கும் சாலையின் வலது புறத்திற்கு வந்து, வட்டச் சாலையை ஓட்டிச் சென்று பின்னர், நேர்ச்சாலையில் பிற வாகனங்களுக்கு இடம் கொடுத்துச் செல்ல வேண்டும்.

3. வலது புறமாக திரும்பும் சாலைக்குச் செல்ல இருக்கும் ஒருவர் தான் சென்று கொண்டிருக்கும் சாலையில் வலது புறத்திற்கு வந்து, வட்டப்பாதையை ஓட்டிச் சென்று, பிற வாகனங்களுக்கு இடம் கொடுத்து வாகனத்தை ஓட்டிச் செல்லவேண்டும்.

4. வட்டச் சந்திப்புகளில் சென்று திரும்ப நினைக்கும் ஒருவர் தான் சென்று கொண்டிருக்கும் சாலையின் வலது புறம் வந்து வட்டப் பாதையை ஓட்டிச் சென்று பிற வாகனங்களுக்கு இடம் கொடுத்து திரும்ப வேண்டும்.


2. சாலை சந்திப்பில் நேராகச் செல்லும்போது ஓட்டுனர் எடுக்கவேண்டிய எச்சரிச்சைகள்.

சாலைகளில் குறுக்குச் சாலைகள், எச்சரிக்கைச் சின்னம் போடப்படிருந்தால் ஓட்டுநர் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் சந்திப்பைக் கடக்க வேண்டும்.

1. ஒரு கிளைச் சாலை, ஒரு முதன்மைச் சாலை சந்திக்கும் இடத்தில் கிளைச் சாலையிலுள்ள போக்குவரத்து முதன்மைச் சாலையில் செல்லும் போக்குவரத்திற்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

2. இரண்டு முதன்மைச் சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தந்த முதன்மைச் சாலையிலுள்ள வாகனங்களுக்கு வலது பக்கமுள்ள போக்குவரத்திற்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

3. நகர்புற சாலை சந்திப்புகளில் நின்று செல்லவும் என்ற உத்தரவுச் சின்னத்தைக் கண்டால் வாகனத்தை நிறுத்தி வலது மற்றும் இடது பக்கம் பார்த்து இடையூறு இல்லையென்றால் சந்திப்பைக் கடக்க வேண்டும்.

No comments:

Post a Comment