audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, February 27, 2023

 


சாலை சைகை விளக்குகள்


பாதுகாப்பாக சாலையில் சென்று திரும்பவே ஓட்டுநர் மற்றும் பாதசாரிகளுக்காக சமிக்ஞை விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை விளக்குகள் சமிக்ஞை விளக்குகளாக பயன்படுத்தப்படுகின்றன.
விளக்கு சமிக்ஞைகள் எரியும்போது ஒட்டுநர்களும், பாதசாரிகளும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கீழே காணலாம்.


1. நில்



சிவப்பு விளக்கு எரியும் போது வாகனத்தை நிறுத்த வேண்டும்.

2. சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு எரியும் போது புறப்படத் தயாராக இருங்கள்



சிவப்பு மற்றும் மஞ்சள் இரண்டு விளக்கு எரியும் போது வாகனத்தை புறப்பட தயார் நிலையில் இருக்க வேண்டும்.

3. புறப்படு (இடையூறு இல்லையென்றால்)



பச்சை நிற விளக்கு எரியும் போது புறப்பட வேண்டும்.

4. சிகப்பு விளக்கு மற்றும் இடதுபுற சைகை எரிந்தால் இடதுபுறம் திரும்பிச் செல்லலாம்.



சிகப்பு விளக்கு மற்றும் இடதுபுற சைகை எரிந்தால் இடதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

5. பாதசாரிகள் நிற்க வேண்டும்.



பாதசாரிகளுக்கு சைகை சிகப்பு நிறம் எரிந்தால் நிற்க வேண்டும்.

6. பாதாசாரிகள் நடக்க வேண்டும்.



பாதசாரிகளுக்கு சைகை பச்சை நிறம் எரிந்தால் நடந்து செல்ல வேண்டும்.

7. விட்டு விட்டு சிகப்பு விளக்கு எரிந்தால் நிற்கும் கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும். பாதையில் இடையூறு இல்லாமல் இருந்தால் சந்திப்பைக் கடக்கவும்.



சிவப்பு விளக்கு விட்டு விட்டு எரிந்தால் வாகனத்தை கோட்டிற்குப் பின்னால் நிறுத்த வேண்டும் அல்லது பாதையில் இடையூறு இல்லாமல் இருந்தால் சந்திப்புகளில் திரும்ப வேண்டும்.

8. விட்டு விட்டு மஞ்சள் விளக்கு எரிந்தால் சந்திப்பில் செல்லவும்.



மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரிந்தால் சந்திப்புகளில் திருப்பி செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment