audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, February 27, 2023

 நிறுத்தவும்





வாகனம் அல்லது பாதசாரிகளை நிற்பதற்கு அறிவுறுத்தும் குறியீடாகும். சில சமயம் போக்குவரத்து போலீசாரும் கையால் இந்த பலகையுடன் சைகை காண்பிப்பதும் வழக்கம்.

வழி கொடுக்கவும்




இந்த அடையாளம் போக்கு வரத்து ஓட்டுனருக்கானது. இந்த அறிகுறியை கண்டால் வலதுபுறம் செல்லும் வாகனத்துக்கு வழி கொடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் குறியீடாகும்.

போகத் தடை




இந்த அடையாளம் போக்குவரத்து ஓட்டுநருக்கு இந்த சாலையில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் குறியீடு ஆகும்.

மோட்டர் வாகனங்கள் செல்லதடை




இந்த அடையாளம் மோட்டார் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.

லாரி செல்லதடை




இந்த அடையாளம் லாரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.

வலதுபுறம் திரும்ப தடை




இந்த அடையாளம் எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநர் கட்டாயமாக வலதுபுறம் நோக்கி திரும்ப கூடாது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
இடதுபுறம் திரும்ப தடை




இந்த அடையாளம் எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநர் கட்டாயமாக இடதுபுறம் நோக்கி திரும்ப கூடாது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.


திருப்பம் திரும்பத் தடை




இந்த அடையாளம் தடை செய்யப்பட்ட இடங்களிலும், நெரிசலான சாலைகளிலும் கண்டிப்பாக எந்த ஓட்டுநரும் U டர்ன் செய்யக் கூடாது. U டர்ன் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களில் பின்புறக் கண்ணாடியைப் பார்த்து, வலதுபுறம் திரும்புவதற்கான சைகை காட்டி (இண்டிகேட்டர் ஒளிரவிட்டு) பாதுகாப்பாகத் திருப்ப வேண்டும்.

ஒலி எழுப்பதடை




இந்த அடையாளமானது சாலையின் அருகில் மருத்துவமனை அல்லது கல்விக்கூடம் உள்ளது. அதனால் இவ்விடத்தில் ஒலி எழுப்புதல் கூடாது என்பதை தெரிவிக்கின்றது.

வேகவரம்பு (50 கி.மீ.)




இந்த அடையாளம் குறிப்பிட்ட போக்குவரத்து சீரான சாலை இடங்களில் காணலாம். அவற்றில் போக்குவரத்து நெரிசகளில் 50 கி.மீ வேக அளவில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.




No comments:

Post a Comment