வாகனம் ஓட்டும்போது கைமூலம் காண்பிக்கப்படும் சைகைகள்
சாலையின் வாகனம் ஓட்டுபவர் மற்றவருக்கு தெரிவிக்கும் மொழி, கை சைகைகள் ஆகும். ஆபத்தில்லாமல் பிரயாணத்தை மேற்கொள்ள ஓட்டுநர்கள் கை சைகைகளை பயன்படுத்தலாம். ஓட்டுநர் கை சைகைகளை காட்டுமுன் பின்னால் வரும் வண்டிகளைக் காட்டும் கண்ணாடியைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
☞ போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் தன்னுடைய வாகனத்தின் வேகத்தை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
☞ வாகனத்தை நகர்த்தும்போதும், நிறுத்தும்போதும், முந்தும்போதும், திரும்பும்போதும் சைகை காட்டுவதற்கு முன்பு, பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தல் மிக அவசியம்.
☞ வாகனம் ஓட்டும்போது தேவையான இடங்களில் கை சைகை அல்லது இண்டிகேட்டர் விளக்கு சிக்னலை உரிய முறையில் காட்டுதல் அவசியம் ஆகும்.
☞ சந்திப்புகளில் நேராகச் செல்லும்போதும், இடதுபுறம் மற்றும் வலதுபுறம் திரும்பும்போதும், சரியான தடத்தைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
☞ தடம் மாறும்போது உரிய எச்சரிக்கையுடன் தேவையான சைகை செய்தல் வேண்டும்.
☞ வலதுபக்கம் வரும்போது அல்லது வலதுபக்கம் திரும்பும் போது வலது கையை வெளியே நீட்டி உள்ளங்கை முன்புறம் நீட்டி சைகை செய்ய வேண்டும்.
☞ இடதுபக்கம் வரும்போதும், இடது பக்கம் திருப்பம் செய்யும்போதும், வலது கையை நீட்டி முன்னோக்கி வலமிருந்து இடது பக்கம் வட்டமாகச் சுற்ற வேண்டும்.
☞ தன் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதற்கு முன்னால், உள்ளங்கையை கீழ்ப்புறம் இருக்க கையை மேலும், கீழும் பல முறை அசைக்க வேண்டும்.
☞ கனரக வாகனத்தை நிறுத்தும் பொழுது, கையை சாய்வாக, உள்ளங்கை முன்புறம் இருக்குமாறு உயர்த்திக் காட்ட வேண்டும்.
☞ சிறிய வாகனத்தை நிறுத்தும்பொழுது உள்ளங்கை முன்புறம் இருக்குமாறு செங்குத்தாக உயர்த்திக் காட்ட வேண்டும்.
☞ பின் வண்டி தம்மை முந்திச் செல்ல அனுமதிக்கும் பொழுது, உள்ளங்கை முன்புறம் படுக்கிடையாக இருக்குமாறு கையை முன்னும், பின்னும் அரைவட்ட வடிவமாக அசைக்க வேண்டும்.
☞ ஆக்ஸிலரேட்டர் பெடல், கிளட்ச் பெடல், கியர் ஷிஃப்ட் லீவர், பிரேக் பெடல், கை பிரேக் லீவர், ஸ்டீயரிங் வீல், ஹாரன் ஆகிய கன்ட்ரோல்களை உரிய முறையில் கையாளுதல் வேண்டும்.
☞ பாதசாரிகள், மற்ற சாலை உபயோகிப்பவர்களின் செயலை அனுசரித்துத் தற்காப்புடன் வாகனத்தை ஓட்டுதல் மிக அவசியமான ஒன்றாகும்.
https://nithra.mobi/namtamil/road_rules/index.php?from=tc
No comments:
Post a Comment