சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை
1. மத்திய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
2. சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
3. சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
4. ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
5. ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.
6. ஓட்டுனருக்கு 67 அடி தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.…
விதிகளை மீறி செல்பவர்களுக்கு மரணம் நிச்சயம்.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை அதிலும் ஆட்டோ எனப்படும் மூன்று சக்கர வாகனம் மற்றும் மினி பேருந்து ஓட்டுனர்கள் யாவரும் பின் விளைவுகளை அறிந்து கொள்ளாமல் சாலை விதிமுறைகளை மதிக்காமல் அதிவேகமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஆகவும் செல்கின்றனர்
ஆட்டோ ஓட்டுனர்கள் யாவரும் சாலையின் திருப்பத்தில் வலது மற்றும் இடது புறம் இன்டிகேட்டர் என்னும் விளக்கை பயன்படுத்துவதில்லை
இதன் விளைவு பின்னால் வருகின்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக பாரம் உள்ள வாகனங்கள் இவற்றுக்கு உள்ளாகின்றன
ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் பின் வரும் வாகனங்களை கவனிக்காமல் பயணிகளை இயற்றும் கவனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென்று நிறுத்திவிடுகிறார்கள்
அதன் காரணத்தினால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது
இது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மினி பேருந்து ஓட்டுனர்கள் மக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனவே சாலை விதிமுறைகள் மற்றும் முக விளக்கு மற்றும் விருப்பத்தின் அறிகுறிகளான இண்டிகேட்டர் களை மற்றும் வேகத்தினை சரியான வகையில் இயக்க
No comments:
Post a Comment