audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, September 21, 2022

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩

தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡

வகுப்புல பாடம் நடத்தும் போது நீ

என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு

கோபமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.

இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭

அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.

உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? 🤔

என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான்.

அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄

ஒரு புதிய சிந்தனை உருவானது.

தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.

ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.

அதன் பெயர் *இயர் மஃப் (Ear muff)*

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்

இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.

ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

அந்தச் சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என

அதிகாரி உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.

கோடீஸ்வரனானான்.

அவர்தான்

*செஸ்டர் கீரின் வுட்*😊

*சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்* 👍🏻👍🏻👍🏻

Tuesday, September 6, 2022

சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

*சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:*

'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர்.முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது.என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.பணம் தலைமுறைகளை தாண்டி, நாடுகளை தாண்டி, கலாசாரங்களை தாண்டி, மதத்தை தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வையும் கூடுதலாக கொடுக்கிறது.பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. *ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.*

Sunday, September 4, 2022

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. 

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். 

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். 

லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். 

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. 

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

Monday, August 29, 2022

🌸It's monkeys outside .- එළියෙ හුගාක් සීතලයි.
🌸I have a sweet tooth./I have a big craving for sweets.- මට පැණිරස වලට ලොකු ආශාවක් තියෙනවා .
🌸I'll come in a jiffy / in a flash .- මම ටක් ගාලා /පට් ගාලා /ඉක්මනින් එන්නම් .
🌸Chop chop !- ඉක්මන් කරන්න 
🌸You are chasing rainbows . 🌈 - ඔයා ලබාගන්න බැරි දෙයක් පස්සේ යන්නේ .
🌸When you do your next project , don't put all eggs in one basket .- ඔයා ඊළග ව්‍යාපෘතිය කරනකොට, ඔබගේ සියලු දේ ඒ දේ මත යොදවන්න එපා .
🌸I knew his nature .- මම එයාගෙ හැටි දැනගත්තා.
🌸It's his nature .- ඒ එයාගෙ හැටි.

I say so because ...


🌸 I say so because you are mine.-
මම එහෙම කියන්නේ ඔයා මගේ නිසයි.

🌸 I say so because I love you . -
 මම එහෙම කියන්නේ මම ඔයාට ආදරේ නිසයි .

🌸 I say so because I don't eat beef by faith .- මම එහෙම කියන්නේ මම ඇදහිල්ලෙන්ම හරක් මස් කන්නේ නැති නිසයි .

🌸 I say so because I can't agree with that. - මට ඒකට එකග වෙන්න බැරි නිසයි මම එහෙම කියන්නේ .

🌸 I say so because he is a fraudster.-මම එහෙම කියන්නේ ඔහු වංචාකාරයෙක් නිසයි.

🌸 I say so because he is a wealthy businessman .-
ඔහු ධනවත් ව්‍යාපාරිකයෙක් නිසයි මම එහෙම කියන්නේ .

🌸 I say so because you need to become a good leader one day.-
මම එහෙම කියන්නේ ඔයා දවසක හොද නායකයෙක් බවට පත්වෙන්න අවශ්‍ය නිසයි .

🌸🥰ඔයාලත් වාක්‍යයක් ලියාගෙන යන්න .😊

Sunday, August 28, 2022

வாழ்க்கை ❤️❤️



தனது குடும்பம் என்ற ஒரு பத்துப் பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்துப் பேர், தனது தொழிலில் ஒரு பத்துப் பேர், தனது வீதியில் ஒரு பத்துப் பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாகக் காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்குப் போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழக் கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாகக், கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. 

இதற்காகத் தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட  பலருக்குத் தெரியாது !!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்???? யார் இவர்கள்????

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்க இவர்கள் யார்????

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. 
அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. 

இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டுச் செல்லுங்கள்" 
❤️

Copied.

Monday, August 22, 2022

சேமியுங்கள் ! ஆனால் வாழ்வதில் கஞ்சத்தனம் வேண்டாம்


அட ! ஜஸ்கிறீம் குடிக்க போறியா ? வேண்டாம் ! விருந்தினர்விடுதி போய் வித விதமாக சாப்பிட போறியா ? வேண்டாம் ! தியேட்டர் போறியா ? வேண்டவே வேண்டாம்.

இது போன்று அடிக்கடி சேமிக்க வேண்டும் அதற்காக இது போன்றவைக்கு செலவழிக்க வேண்டாம்  என்றும் கூறும் அதிகளவானோரை நாம் பார்த்திருப்போம்.
நாமும் அவர்கள் கூறுவது சரி தான் வீணாக இவற்றுக்கெல்லாம் எதற்காக செலவழித்து பணத்தினை அநிநாயமாக்குவான் என்று எண்ணியிருப்போம்.
சேமிப்பு முக்கியம் தான் அதுவே எதிர்காலத்தில் வரப்போகின்ற சில பிரச்சினைகளுக்கு கை கொடுக்க உதவப் போகின்றது.
அதற்காக வாழ்வில் ஏற்படுகின்ற சிறிய சிறிய சந்தோசங்களையும் பிடித்தமானவற்றை வாங்கி உண்ணுவதிலும் நாம் பின்வாங்கி விடுகின்றோம்.
கேட்டால்  விருப்பம் இருக்கு ஆனால் சேமிக்கின்றோம் என்பார்கள். மிகவும் முட்டாள் தனமாக ஒரு விடயம். 

அதனை விட கவலை என்னவென்றால் இறுதியில் அவர்களை எடுத்து பார்த்தால் எதையுமே அனுபவித்து இருக்க மாட்டார்கள்.

வாழ்வின் ஏன் இந்த உலகத்தின் சுவாரஸ்யமான விடயங்களை கூட அனுபவிக்காமல் மண்ணுடன் மண்ணாக இறுதிக்காலத்தில் மாண்டு விடுவார்கள்.
இல்லாவிட்டால் ஏதேனுமொரு நோய் நிலைமை உண்டாகி அதற்கு அதிகளவில் செலவழிப்பார்கள். 
எத்தனை அழகான இந்த வாழ்வில் எத்தனை புதிய இடங்களை அனுபவிக்க வேண்டிய இந்த படைப்பில் சேமிப்பு என்பதை விட கஞ்சத்தனத்தில் அதிகளவானவற்றை இழந்து விடுவார்கள்.

ஒரு விபத்து ஏற்பட்டு இல்லாவிட்டால் இயற்கையாக இறக்க நேரிட்டால் அங்கு கூட ஓர் நிம்மதி இல்லாமல் எதனை அனுபவித்தோம் என்ற ஏக்கத்துடனே உலகினை விட்டு பிரிந்து விடுவார்கள்.

நான் கூற வருகின்ற விடயம் சேமியுங்கள் நிச்சயம் அது அவசியம் ஆனால் உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு ஒரு போதும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.
சந்தோசமாக அதனை செலவழித்து வாங்கிக் கொள்ளுங்கள். 

பணத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் நீங்கள் உங்கள் மனதிற்கும் அதிகளவான முக்கியத்துவம் அளியுங்கள்.
மனது சந்தோசமாகவும் , ஆரோக்கியமாகவும் இருந்தால் அனைத்தும் உங்களை தேடி வந்து விடும்.

Saturday, August 20, 2022

"உறவினர்கள் பெரும்பாலும் தவறான ஆலோசனையையே வழங்குவார்கள்"!

டாக்டர் "ஜோஸப் மார்பி" எழுதிய "ஆழ் மனதின் அற்புத சக்தி" என்னும் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஒரு வரி... "உறவினர்கள் பெரும்பாலும் தவறான ஆலோசனையையே வழங்குவார்கள்"!

ஆம்! உண்மை தான்!!
பெரும்பாலும் உறவினர்கள் ஆலோசனை ஒருதலை பட்சமாக தான் இருக்குமே தவிர ஒரு போதும் தீர்வுகளை நோக்கி இருக்காது.!

அதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு போதும் மூன்றாம் நபரிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்களே தீர்வுகள் எடுக்க முடியும் என்பதை நம்புங்கள்!

உங்களை விட வேறு யாரும் உங்களை நேசிக்க முடியாது!
உங்களை விட வேறு யாருக்கும் உங்கள் மேல் நலன் இருக்காது!
உங்களை விட வேறு யாருக்கும் உங்கள் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்காது!
....என்னும் உண்மையை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்கு உங்கள் மனம் சொல்லும் தீர்வையே சரி என்று எடுங்கள்!


இன்று முதல் RIP க்கு RIP

RIP அர்த்தம் தெரியாமலும், தமிழ் Fonts இல்லாததும் காரணமாக இருக்கலாம். அனுதாபங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தெரிவிக்கும் முறைகளை நான் கீழே தருகின்றேன். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒன்றை COPY PASTE செய்யுங்கள். ஆனால் தயவு செய்து RIP ஐ மட்டும் COPY PASTE செய்யாதீர்கள்!! 
இன்று முதல் RIP kku RIP 

அனுதாபங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தெரிவிக்கும் முறைகள்:
"உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்."
"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்."
"உங்கள் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது."
"இந்த கடினமான நேரத்தில் உங்கள் நினைவுகள் எங்களோடு இருக்கின்றன. 
"உங்கள் மாமா / அத்தை / உறவினர் எம்மை விட்டு சென்றதை அறிந்தேன். மிகவும் வருந்துகிறேன்"
இந்த கடினமான நேரத்தில் நீங்கள் எங்கள் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எமது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாகத் தெரியவில்லை. எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

“I’m sorry for your loss.”
“My deepest sympathies to you and your family.”
“Words can’t describe how sorry I am for your loss.”
“Thinking of you at this difficult time.”
“So sorry to hear about your uncle/aunt/cousin’’
Please know that you are in our thoughts and prayers at this difficult time.
Words seem inadequate to express our sadness. Our deepest condolence. 
May the love of those around you help you through the days ahead.
We are deeply sorry to hear about your loss.
Words cannot even begin to express our sorrow. You are in our prayers.
We are saddened to hear of your sudden loss.
Please accept our heartfelt condolences on the loss of your loved one.
Words can't express how saddened we are to hear of your loss.
We share your grief at this difficult time with deep sympathy.
My deepest sympathies are with you at this difficult time.

Thursday, August 11, 2022

🌸It's monkeys outside .- එළියෙ හුගාක් සීතලයි.
🌸I have a sweet tooth./I have a big craving for sweets.- මට පැණිරස වලට ලොකු ආශාවක් තියෙනවා .
🌸I'll come in a jiffy / in a flash .- මම ටක් ගාලා /පට් ගාලා /ඉක්මනින් එන්නම් .
🌸Chop chop !- ඉක්මන් කරන්න 
🌸You are chasing rainbows . 🌈 - ඔයා ලබාගන්න බැරි දෙයක් පස්සේ යන්නේ .
🌸When you do your next project , don't put all eggs in one basket .- ඔයා ඊළග ව්‍යාපෘතිය කරනකොට, ඔබගේ සියලු දේ ඒ දේ මත යොදවන්න එපා .
🌸I knew his nature .- මම එයාගෙ හැටි දැනගත්තා.
🌸It's his nature .- ඒ එයාගෙ හැටි.
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰