audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 22, 2021

🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿

*💗தெரிந்து கொள்வோம்...*

*ஒட்டகங்கள் - சில வியத்தகு உண்மைகள்..!!*

ஒட்டகம் குட்டி போட்டு பாலூட்டும் ஒரு பாலூட்டிவிலங்கு ஆகும் . இது பாலைவனங்களில் அதிகம் வாழக்கூடிய விலங்காகும்.

நீரில்லாமல் பல வாரங்கள் வாழக் கூடியது. பொதுவாக 4 முதல் 5 வாரங்கள் வரை நீர் அருந்தாமல் பாலைவனத்தில் வாழக்கூடியது. மேய்வதற்கு புல் கிடைத்து விட்டால் 10 மாதங்கள் வரை நீர் அருந்தாமல் வாழக் கூடியது. 

தன் உடல் வெப்ப நிலையை காலநிலைக்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ள வல்லது. அதாவது 34 டிகிரி முதல் 41 டிகிரி வரை உடல் வெப்ப நிலையை சரி செய்து கொள்ளும். நீர்ச்சத்து வற்றிப் போகாமல் இருப்பதற்காக ஒட்டகங்கள் வியர்வையை வெளியிடுவதில்லை.

நீர் கிடைக்கவில்லை என்றால் தனது சிறுநீரை வெளியிடுவதை குறைத்துக் கொள்ளும்.

200 கிலோ எடையை சுமந்து கொண்டு ஒரே நாளில் 50 கிலோமீட்டர் தொடர்ந்து நடக்கும் வல்லமை கொண்டது ‌.

அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது இவற்றால் சராசரியாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.

இதனுடைய கால்கள் பாலைவனத்தில் நடந்து செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. குடிக்கும் நீரில் பகுதியை உடலில் தேக்கி வைக்கும் வல்லமை கொண்டது. 

தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரில் குறிப்பிட்ட பகுதியை ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் ஆக மாற்றி வைத்துக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் உண்மையான அளவை விட 200 மடங்கு அதிகமாக்கி வைத்துக்கொள்ளும். தேவைப்படும் போது அதை வைத்து சரிசெய்து கொள்ளும். 

தன் உடலில் 40 சதவீதம் தண்ணீர் குறைந்தாலும் ஓட்டத்தால் வாழ முடியும். பாலைவன சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருக்க கண்களில் அதிகமான நீரை சுரந்து கண்கள் காய்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

பாலைவனப் புயல் ஏற்படும் போது தூசிகளின் பாதிப்பில் இருந்து கண்களையும், மூக்கையும், பாதுகாத்துக்கொள்ள இயற்கையாகவே இறைவன் அதன் மேல் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளான்.

ஏற்கனவே உடலில் சேர்த்து வைத்த தண்ணீர் குறைந்து விட்டால், தன் மூக்கால் மோப்பம் விட்டு தண்ணீர் இருக்குமிடம் அறிந்து கொண்டு, அந்த இடத்தை சென்றடைந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளும்.

*பகிர்வு*

🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿
💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡

*💗உடல் நலம்...*

*கண் தானம் குறித்து பரவலாக பேசப்படும் கட்டுக்கதைகளும், உண்மைகளும்..!!*

இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாகவும், 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வை குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்கதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், கண் தானம் செய்வதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அப்போது தான் இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும். கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அதனை பரப்புவதும் சமூகத்தின் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

ஏனென்றால், கண்தானம் குறித்த பரவலான கட்டுக்கதைகள் சமூகத்தில் பரவி வருவதால், அதனை குறித்த உண்மையை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகிறது. கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் கடமையாகிறது. ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பார்வையை வழங்கிடக் கூடிய இத்தகைய அற்புதமான நன்கொடைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவ சமூகங்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

*கண் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?* 

கண்ணின் முன்புறமானது, கார்னியா எனப்படும் வெளிப்படையான திசுக்களால் மூடப்பட்டிருக்கும். காயம், நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கூட கார்னியா ஒரு மேகமூட்டமான வடிவத்தை உருவாக்கக்கூடும். அதனால், ஒரு நபருக்கு பார்வை பலவீனமடையவோ அல்லது சில நேரங்களில் பார்வை இழப்போ நேரலாம். சேதமடைந்த கார்னியாவை ஆரோக்கியமான மனித கார்னியா கொண்டு மாற்றுவதன் மூலம் கார்னியல் குருட்டுத்தன்மையின் நிலையை சரிசெய்திட முடியும். இத்தகைய கார்னியா மாற்று சிகிச்சையானது, கண் தானம் மூலம் மட்டுமே பெற முடியும். 

பார்வையற்ற ஒருவருக்கு பார்வையையே பரிசாக வழங்குவது எவ்வளவு உன்னதமான செயல் என்று யோசித்து பாருங்கள். அனைத்திலும் சிறந்தது கண் தானம் என்று வெறும் வசனமாக மட்டுமே பெரும்பாலும் பேசப்படுகிறது. இத்தகைய தானத்தை செய்ய முன்வர பலருக்கும் பலவிதமான தயக்கங்கள் இருக்க தான் செய்கிறது. இவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது, கண் தானம் குறித்து பரவி வரும் கட்டுக்கதைகள் தான். கண் தானம் குறித்து அகற்றப்பட வேண்டிய சில கட்டுக்கதைகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுக்கதைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைப் புரிந்துகொள்வதன் மூலம், கண்களை தானம் செய்ய முன்வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிடும்.

*கட்டுக்கதை 1:* கண் தானம் செய்தால், முகமே சிதைந்தது போல் முற்றிலும் மாறிவிடும். 

*உண்மை:* கண் தானம் செய்வதால் முகத்தில் எவ்வித சிதைவும் ஏற்படாது. இந்த நடைமுறையின் போது, கார்னியாக்கள் அகற்றப்பட்டு ஷெல்கள் பொருத்தப்படுகின்றன. எனவே, கண்கள் மூடப்படும்போது, அவை எப்போதும் போல சாதாரணமாக தான் தெரியும்.

*கட்டுக்கதை 2:* கண்கள் தானம் செய்தால், அடுத்த பிறவியில் அந்த நபர் பார்வையற்றவராக பிறப்பார்கள். 

*உண்மை:* அடுத்த பிறப்பு பற்றி யாருக்கும் உறுதியாக எதுவும் தெரியாது. ஒருவேளை அப்படி அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அதில் புதிய உடலுடன் தான் பிறக்கப் போகிறீர்கள். எனவே, முந்தைய பிறவியின் கண்கள் தேவையே இல்லை. இது முற்றிலும் கட்டுக்கதை மட்டுமே என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மேலும், கண் தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவதற்கு மிகப்பெரிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

*கட்டுக்கதை 3:* உயிருடன் இருக்கும் போதும் கண் தானம் செய்ய முடியும். 

*உண்மை:* சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலின் ஒரு பகுதி ஆகியவற்றை மட்டுமே, ஒருவரால் நேரடியாக இன்னொருவருக்கு தானம் வழங்க முடியும். ஆனால், கண் தானம் என்பது ஒருவரின் மரணத்திற்குப் பிறகுதான் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போது ஒருவர் தனது கண்களை தானம் செய்வதாக உறுதியளிக்கலாமே தவிர, உயிருடன் இருக்கும் போதே கண்களை வழங்கிட முடியாது. மேலும், இந்த காரணத்திற்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரை கண் தானம் வழங்கிட ஊக்குவியுங்கள்..

*கட்டுக்கதை 4:* பார்வையற்ற நபர்கள் அனைவருக்குமே கண் தானம் மூலம் பார்வையை பெற செய்திடலாம். 

*உண்மை:* கார்னியஸின் ஒளிபுகா தன்மை கொண்ட நபர்கள் (கண்ணின் முன் வெளிப்படையான பகுதி) மட்டுமே பயனடைய முடியும். இதற்கு மாறாக, ரெட்டினா அல்லது ஆப்டிக் நரம்பு தொடர்பான பார்வை திறன் இழந்தவர்களுக்கு மற்றவர்களது கண் தானத்தால் எவ்வித பயனும் கிடையாது.

*கட்டுக்கதை 5:* விழித்திரை பிரச்சனையால் அவதிப்பட்டவர்கள் அல்லது கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யாரும் கண் தானம் செய்ய முடியாது. 

*உண்மை:* இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே கண் தானம் செய்யலாம்.எந்த இரத்த வகையை சேர்ந்தவரும், அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தாலும் அல்லது விழித்திரை அல்லது பார்வை நரம்பு பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவர்கள் தாராளமாக தங்களது கண்களை தானம் செய்யலாம். இவர்கள் தான் கண் தானம் செய்ய முடியம் என்ற எந்தவொரு வரையரையும் இல்லை.

*கட்டுக்கதை 6:* கண் தானமானது, ஒருவரது மரணத்திற்குப் பிறகு செய்யக் கூடியது. மரணத்தின் காரணம் எதுவானாலும் சரி அவர்களால் கண் தானம் செய்ய முடியும். 

*உண்மை:* கண் தானம் செய்த ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் கண் தானம் பெறுவோருக்கு பொருத்தப்பட வேண்டும். கண் தானம் செய்தோரின் உடல் குளிர்ச்சியான சூழலில், மின்விசிறிகள் போடப்படாமல், கண்கள் மூடப்பட்டு, கண்களில் மேல் ஈரமான பஞ்சு வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தலை பகுதிக்கு கீழே 2 தலையணைகள் வைக்கப்பட வேண்டும். உள்ளூர் கண் சேகரிப்பு மையம் (மருத்துவமனை) அல்லது கண் வங்கியை தொடர்பு கொள்ள சிறிது நேரம் தேவை. மேலும், மரணத்திற்கான காரணம் செப்டிசீமியா, எச்.ஐ.வி, ரேபிஸ் போன்றவை என்றால், கண்கள் பார்வையற்ற பெறுநருக்கு நன்கொடை அளிப்பதை விட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

*கட்டுக்கதை 7:* கண்களை தானம் செய்தால், அவர்கள் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவருக்கு விற்று பணமாக்கி விடுவார்கள். 

*உண்மை:* எந்தவொரு மனித உறுப்புகளையும் விற்பது சரி, வாங்குவது சரி சட்டவிரோதமான செயல். மேலும், அத்தகைய செயல் சட்டப்படி தண்டனைக்குரிய பெருங்குற்றமாகும். இது ஒரு உன்னதமான செயலுக்காகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளாலும் முறையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

*பகிர்வு*

💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡
அரட்டை அறிவியல்..05

வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

சில வருடங்களுக்கு முன் முழு சந்திர கிரகணம் வரப்போகிறது என்று வகுப்பில் பேசிக்கொண்டு இருந்தோம்.

பாடத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் பற்றி இருந்தன.

கிரகணம் என்பது நிழல். பூமியைச் சுற்றி வரும் நிலவே கிரகணத்திற்கு அடிப்படையானது. இவ்வாறு சுற்றி வரும்போது சூரியன், பூமி, நிலா என்ற மூன்று வான் பொருட்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உண்டாகிறது. சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பூமி வரும்போது சூரிய ஒளியை பூமி மறைப்பதால்  பூமியின் நிழல் நிலவில் விழுகிறது. இதையே சந்திர கிரகணம் (SEM) என்கிறோம். இது முழு நிலவன்று இரவில் நிகழும்.

அதேபோல் சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா வரும்போது நிலவின் நிழல் பூமியில் விழுகிறது. இதையே சூரிய கிரகணம்(SME) என்கிறோம். இது பகலில் அமாவாசையன்று நிகழும்.

ரத்த நிலா...

சரி இப்போது சிவப்பு நிலா (Red moon) அல்லது ரத்த நிலா (Blood moon) பற்றி பார்ப்போம்.

முழு சந்திர கிரகணத்தன்று இரவில் சூரியனுக்கும் நிலவுக்கும்‌ இடையே பூமி மெல்ல மெல்ல வரும். பூமியானது முழுவதும் நிலவை மறைக்கும் போது நிலவு என்ன ஆகும்? இருளாகி நிலவு தெரியாமல் போய் விடுமா? அதுதான் இல்லை முழுமையான சந்திர கிரகணம் நிகழும்போது நிலா சிவப்பு நிறமாகத் தெரியும். இதையே நாம் ரத்த நிலா அல்லது சிவப்பு நிலா என அழைக்கிறோம்.

சரி ஏன் இவ்வாறு நிகழ்கிறது?

காலையிலும் மாலையிலும் சூரியன் இருக்கும் திசையில் ஏன் வானம் சிவப்பாகத் தெரிகிறது? என்ற கேள்வியின் பதிலே மேற்கண்ட வினாவுக்கும் பதில் ஆகும். 

அதாவது பகலில் நீலநிறமாகத் தெரியும் வானம் காலை மாலையில் சிவப்பு நிறமாகத் தெரிவதற்குக் காரணம் ஒளிச்சிதறல் காரணமாகும். சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன. இவை 400 நானோமீட்டர் (வயலட்) முதல் 700 நானோமீட்டர் ( சிவப்பு) வரை Violet, Indigo, Blue, Green, Yellow, Orange,Red என வெவ்வேறு அலைநீளங்களில்  பரவிக் காணப்படுகின்றன. இதில் அலைநீளம் குறைந்த ஊதா(Violet) பூமியின் வளிமண்டலத்தால் மிக அதிக சிதறலுக்கு (ராலே ஒளிச்சிதறல்) உட்படுகிறது. அலைநீளம் அதிகமான சிவப்பு மிகக்குறைந்த சிதறலுக்கு உட்படகிறது.

காலை மாலையில் சூரிய ஒளி மதிய நேரத்தைவிட அதிக தூரம் பயணம் செய்து பூமியை வந்தடைகிறது. எனவே அலைநீளம் குறைந்த ஊதா முதல் மற்ற நிறங்கள் சிதறலடைய அலைநீளம் அதிகமான மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு நிறங்கள் நம்மை வந்தடைகின்றன. இதனாலேயே மாலை நேரங்களில் வானம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் இருக்கின்றன. 

சிவப்பு நிறத்தின் இந்த தொலைதூரம் பயணிக்கும் பண்பினாலேயே ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போதும், அதிக பனி விழும் காலங்களிலும் சிவப்பு நன்கு தெரியும்.

இப்போது முழு சந்திர கிரணத்தின்போது நிலா ஏன் சிவப்பாக மாறுகிறது எனப் பார்ப்போம்...

சூரியன் பூமி நிலா... இம்மூன்றும் நேர்க்கோட்டில் இருக்கும்போது பூமியானது முழுவதும் நிலவை மறைக்கும். இப்போது பூமியைச்சுற்றியுள்ள வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளியானது செல்லும் போது சற்று ஒளி விலகல் அடைந்து வளைந்து சூரிய ஒளி நிலவை அடைகிறது. பூமியின் வளிமண்டலமானது அலைநீளம் குறைந்த மற்ற நிறங்களைக் அதிகம் சிதறலடைய (ராலே ஒளிச்சிதறல்) வைக்கிறது. நாம்‌ முன்பே கண்டது போல அலைநீளம் அதிகமான சிவப்பு ஒளி அதிக தூரம் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பை அடைகிறது. இதனாலேயே முழுசந்திர கிரகணத்தன்று மிக மெல்லிய சிவப்பு நிறம் நிலவில் தெரிகிறது. இதையே நாம் சிவப்பு நிலா அல்லது ரத்த நிலா என்கிறோம்.

நீல நிலா(Blue moon)....

சிவப்பு நிலாவை நாம் நேரடியாக முழு சந்திர கிரகணத்தன்று காணலாம். ஆனால் நீல நிலா என்பது கற்பனை. இது ஒரு கருத்தியல் அவ்வளவே.

நீல நிலா என்பதற்கு இரண்டு வரையறை உண்டு...

1. பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு முழு நிலா (பௌர்ணமி) வரும். எப்போதாவது ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வரும்போது அம்மாதத்தில் இரண்டாவது வரும் முழு நிலவை நாம் நீல நிலா என்கிறோம்.

2. இரண்டாவது வரையறை ஒருவருடத்திய season ஐ அடிப்படையாகக் கொண்டது.

பொதுவாக ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்கள் மூன்று மூன்று மாதங்களாக நான்கு பருவகாலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பருவத்திற்கு (Autumn,Spring, Summer, Winter) மூன்று மாதங்கள். பொதுவாக ஒருபருவத்தின்  மாதத்திற்கு ஒன்று  என மூன்று முழு நிலவு வர வேண்டும். எப்போதாவது ஒரு பருவத்தில் மூன்று நிலவுக்குப் பதிலாக நான்கு முழு நிலா நாட்கள் வரும்போது அந்த ஒரு பருவத்திய நான்கு முழுநிலவுகளில் மூன்றாவதாக வரும் நிலவையே நீல நிலா (Blue moon) என வரையறுக்கிறார்கள்.

வெள்ளி நிலவே....வெள்ளி நிலவே...

மஞ்சள் பூசும் வானம் எட்டிப் பார்த்தேன்...

வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

என நிலவின் நிறங்களை நிறைய பாடல்களில் வர்ணித்து இருக்கிறார்கள்.

அந்த வண்ணம் கொண்ட வெண்ணிலவைப் பற்றிய விவாதமாக அன்றைய வகுப்பறை நிறைந்தது.

நன்றி!

இவண்...

இராமமூர்த்தி நாகராஜன்

மனிதஉடலை பற்றிய அழியாத ரகசியங்கள்



*இதுஒரு மனிதஉடலை பற்றிய விழிப்புணர்வு பதிவு??*

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது.

நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்…

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை…

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது…

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்…

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது…

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லைஇ சுமார் 40 முறை அந்தப் பக்கம்இ இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்…

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630…

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது…

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1ஃ4 செ.மீ. வளர்கின்றன…

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்…

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ…

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது…

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…

24. பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது…

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்…

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்…

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது…

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது…

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்…

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது…

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்…

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள்l, நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்…

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன…

37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது…

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும்இ உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்…

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே…

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது…

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்…

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே…

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்…

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன…

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்…

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது…

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்…

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்…

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்…

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன…

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது…

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்…

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்…

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்…

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன…

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது…

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்…

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது…

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்…

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்…

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது…

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை…

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்…

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது..

85. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்..

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்..

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருஷத்திற்கு 4 கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உடலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது…

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்…

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி…

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


திட்டமிட்டு செயல்படுவது

*சிந்தனைக் களம்*
➖➖➖➖➖➖➖
நமக்கு முன்னேற்றம் தேவை. அதற்கு ஒவ்வொரு நாளையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருக்கும் நேரத்தை வீணாய் கழித்துவிட்டு `நேரம் போதவில்லை’ என்றும், `நான் நினைத்தது நடக்கவில்லை’ என்றும் சாக்குப்போக்கு சொல்லித் திரிந்தால் முன்னேற்றம் முடங்கித்தான் கிடக்கும்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியமானது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி நாம் பார்க்கலாம்.

நேரத்தை சரியாக பயன்படுத்துவதில் முதல் மந்திரமே திட்டமிட்டு செயல்படுவதுதான். இதில் திட்டமிடுவது வேறு, செயல்படுவது வேறு. எல்லோரும் திட்டமிடுகிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி செயல்படுவது கஷ்டம்.

இதைத் தவிர்த்து முழுமையாக செயல்பட விரும்பினால் முதலில் நாம் ஒரு செயலை ஒரே முறையில் செய்து முடிக்கப் பழக வேண்டும். அப்படியானால்தான் அடுத்தடுத்த செயல்களை திட்டமிட்டபடி செய்ய முடியும்.

அடுத்ததாக எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி நூல்பிடித்தாற்போல செய்ய முடியாது. அதற்கு காரணம், நாம் மட்டும் இங்கு தனித்து இல்லை. சமுகமாக வாழ்கிறோம். நமக்காக, குடும்பத்துக்காக, ஊருக்காக என்று கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறோம். அதனால் மற்றவர்களின் தலையீடு நிச்சயம் இடையே வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு பணியை செய்யும்போது, பெற்றோர் ஒரு வேலையை செய்யச் சொல்லலாம். அதை உங்கள் பணிக்கு முன்பாக முடிக்க வேண்டிய அவசரம் என்று வற்புறுத்தலாம். இதனால் உங்கள் திட்டப்படி ஒரு செயலை செய்ய முடியாமல் போகலாம்.

இதுபோன்ற இடையூறைத் தவிர்க்க உங்கள் திட்டத்தை இரண்டாக வகுக்க வேண்டும். ஒன்று உங்கள் பணி (திட்டம்) சார்ந்தது. மற்றொன்று சூழல் (குடும்பம், சமுகம், உறவு, ஓய்வு) சார்ந்ததாக பிரிக்க வேண்டும். இதில் இத்தனை மணி நேரம் பணிக்கு, இதில் இருந்து இத்தனை மணி நேரம் மற்றவற்றிற்கு என்று பிரித்தாலும் சிக்கலைச் சந்திப்போம்.

நமது இலக்கை அடைய இவ்வளவு பணியைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று வகுக்க வேண்டும். அதன் இடையே சூழல்சார்ந்த நேர ஒதுக்கீடும் இடம் பெறவேண்டும். ஆனால் அன்றைய நாளின் பயன்பாட்டை கணக்கிடும்போது நாம் திட்டப்படி இலக்கிற்கான பணிகளை சரியாகச் செய்து முடித்திருக்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்படி செயல்படும்போது முடிக்காத பணிகளைக் கண்டு திகைக்கக் கூடாது. நாம் அந்தப் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் போனதற்கு என்ன காரணம்? அதில் நாம் எந்த வகையில் சம்பந்தப்பட்டு இருக்கிறோம் என்று அடையாளம் காணுங்கள். அடுத்த நாள் அதை தவிர்க்க முயலுங்கள்.

உங்களின் திட்டம் குறித்து அனுபவ ரீதியாக சிலரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அவர்களிடம் கிடைக்கும் சாதகமான, பயனுள்ள ஆலோசனைகளை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு பணியை அந்த நேரத்தில் செய்து முடிக்காமல் விட்டுவிட்டால் பணிகள் தேக்கம் அடைகிறது. இது ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். சோம்பலையும் வளர்க்கும். அது ஒரு குப்பைக்கூளம் போன்றது எனலாம். இந்தப் பணி அசுத்தம் மற்ற பணிகளையும் பாதிக்கும். அதனால்தான் ஒரே முறையிலும், தேக்கமில்லாமலும் செய்ய முடித்தாலே வெற்றியை நெருங்கிவிடலாம் என வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் இலக்கிற்கு இடைப்பட்ட காலத்தில் சந்தோஷம் தரும் செய்திகள், துக்கம் தருபவை, கொண்டாட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சந்தோஷம் வந்தால் நான் எதிர்பார்த்ததுதான் என நினையுங்கள். துக்கம் வந்தாலும் எதிர்பாராத இந்த இழப்பை சரி செய்வேன், அதற்காக உழைப்பேன் என்று எண்ணுங்கள்.

இறுதியாக நாம் உணர வேண்டியது வெற்றியாளர் களின் நேரம் தவறாமையைத்தான். ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்புலமாக `நேரம் தவறாமை’ இருக்கும். இதைப் பின்பற்றுவது ஆரோக்கியமான வளர்ச்சியைத் தரும். நன்மதிப்பையும் பெற்றுத்தரும். இது ஒரு டானிக் மாதிரி நம்மை ஊக்குவிக்கும்.

அதை நாமும் கடைபிடிப்போம். கடைபிடித்தால் வெற்றி பெறுவோம்!

Wednesday, April 7, 2021

💜💛💜💛💜💛💜💛💜💛💜💛

*💗உடல் நலம்...*

*இருதய நோய் தவிர்க்க, ஒரே பிராண்ட் எண்ணெயை தவிர்க்க வேண்டும்..!!*

''இருதய நோய் தாக்குவதை தவிர்க்க, சமையலில் ஒரே பிராண்ட் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்,'' என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நந்தகுமார்.

*இன்று இருதய நோய் அதிகரிக்க காரணம் என்ன?*

கடந்த, 15 ஆண்டுகளாக, 28 முதல், 45 வயதுக்குள் இருப்பவர்கள் பலர், இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறையே காரணம். மனக்குழப்பம், துாக்கமின்மை, அதிகமாக உணர்ச்சி வசப்படும் தன்மை, தேவைற்ற பிரச்னைகளை உருவாக்கி கொள்தல் போன்ற உளவியல் சிக்கல்களை தவிர்க்க வேண்டும்.

*இருதய நோய் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?*

வாழ்க்கையில் சிக்கல், கவலை, கடன் பற்றி மட்டுமே நினைத்து, கவலை மேல் கவலை அடைவதால், பிரச்னை தீரப் போவதில்லை. முதலில் டென்ஷன், எமோஷன் இவை இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் உறங்கி, விழிப்பது அவசியம். எவ்வளவு பிரச்னை இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு, எந்த பிரச்னையும் இல்லாத மனிதனை போல், தினமும் இரண்டு மணி நேரம், மனம் விரும்பியதை செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் இருதய நோய் நெருங்காது.

*இருதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதை, எப்படி தெரிந்து கொள்வது?*

சிலருக்கு ரத்த குழாய்களில், அதிக இடங்களில் அடைப்பு இருந்தாலும் தெரியாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வலி தெரியாது. சிலருக்கு மூச்சிரைப்பு ஏற்படும். சோர்வாக இருக்கும். தினமும் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு, ஏதாவது மாற்றம் இருந்தால் உடனே தெரிந்து விடும். நெஞ்சு பட படப்பு, தலை சுற்றல் இருந்தால், இருதயம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.சந்தேகம் இருந்தால், டிரெட் மில் டெஸ்ட் எடுத்து பார்த்தால் தெரிந்துவிடும். சிகிச்சை எடுத்து, மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருதய நோயாளிகளுக்கு, என்ன பிரச்னைகள் ஏற்படும்?*

இரண்டு நோய்க்கும் மருந்து எடுத்து கொள்வதால், அதிக சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நோயில் இருந்து மீண்டவர்களுக்கு, வேறு சில பிரச்னைகளும் வர ஆரம்பித்துள்ளன. காலப்போக்கில் அவை தெரிய வரும்.

*கொரோனா நமக்கு சொல்லும் பாடம் என்ன?*

கொரோனா வந்த பிறகுதான், நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம், சொத்து வைத்து இருந்தும், பலரால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாங்க முடியவில்லை. எதிர்கால வாழ்க்கை மீதான அச்சத்தை, இந்நோய் உருவாக்கி இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் மட்டும்தான், நம் வாழ்க்கை நமக்கு சொந்தம். இதுதான் கொரோனா சொல்லிக் கொண்டிருக்கும் பாடம்.

*இருதய நோய் தவிர்க்க, என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்?*

எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், அளவாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் வறுத்ததாக இருக்க கூடாது. ஒரே பிராண்ட் எண்ணெயை தினமும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என, தினமும் மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். தினமும் சாப்பிடும் உணவு கலோரிகளை, அன்றைக்கே எரிக்கும் அளவுக்கு உடல் உழைப்பு இருக்க வேண்டும்.

- டாக்டர் நந்தகுமார்.
இருதய நோய் சிறப்பு மருத்துவர்.

*பகிர்வு*

💜💛💜💛💜💛💜💛💜💛💜💛

சிலர் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்..!!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

**

ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக
நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம்
பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார்.

நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.”

அவர் விக்கித்துப் போனார்.

சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக வரும் நாகேஷ் சொல்லும் வசனம் போல் “குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள்” நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்களின் சாதனைகளை இவர்களால் ரசிக்க முடியாது. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள மனம் இவர்களுக்கு வராது. பலரும் பாராட்டினாலும் இவர்கள் வித்தியாசப்பட்டு விமரிசிப்பார்கள். அப்படி மாறுபடுவதாலேயே அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். அதுவும் பிரபலங்களை விமர்சிப்பது என்றால் இவர்களுக்கு தனி உற்சாகம் வந்து விடும். அவர்களை விமரிசிப்பதாலேயே அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பில் இருப்பார்கள். தங்களை வித்தியாசமான அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ள நினைப்பார்கள்.

குறைகள் கண்டிப்பாக சுட்டிக் காட்டப்பட்டால் தான் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அப்படி திருத்திக் கொள்ளும்
போது தான் மனிதன் முன்னேறுவதும், பக்குவம் அடைவதும் சாத்தியமும் கூட. ஆனால் நிறைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டு, குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடுவது என்பது நேர்மையான விமரிசனத் தன்மை அல்ல. மாறாக அது விமரிசிப்பவனின் தரத்தின் சிறுமையை சுட்டிக் காட்டி விடும்.

வாழ்க்கைக் கனவுகளை நனவாக்க நாம் எடுத்து வைக்கும் ஆரம்ப அடிகள் மிக மென்மையானவை. நமக்கு நம் மீதே முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்காத காலமது. நம் ஆரம்ப முன்னேற்றங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அடுத்தவர் வாய்வழியாக சில சமயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றும். அப்படிப்பட்ட சமயங்களில் இது போன்றவர்களின் கருத்தைக் கேட்கும் தவறைச் செய்து விடாதீர்கள். கேட்காமலேயே தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. அப்படி தெரிவித்தாலும் அதை அலட்சியப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவர்கள் கருத்து, விதைத்தவுடன் ஊற்றப்படும் வெந்நீராக அமைந்து விடும். அந்தக் கனவு விதைகளை ஆரம்பத்திலேயே அழித்து விடும்படியான அமிலமாக இவர்கள் விமரிசனம் அமைந்து விடலாம். மன உறுதி மட்டும் இல்லா விட்டால் உங்கள் தன்னம்பிக்கை அப்போதே காணாமல் போய் விடும்.

எத்தனையோ திறமைகள் முளையிலேயே இவர்களால் கிள்ளி விடப்பட்டிருக்கின்றன. அதிலும் இவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் மற்றவர்களின் உற்சாகத்தையும், துடிப்பையும் கண நேரத்தில் காணாமல் போகும்படி பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் பேச்சுகள் எல்லாமே குறைகளையும், பலவீனங்களையும் சார்ந்ததாக இருக்கும்.  பேச்சுகள் மட்டுமல்லாமல் பார்க்கின்ற விதமும், சொல்கின்ற தோரணையும் கூட கிண்டல் நிறைந்ததாக இருக்கும். இவர்களை அலட்சியப்படுத்தி தூர நகர்வதே புத்திசாலித்தனம். எப்பாடுபட்டாவது இவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று விடலாம் என்று நினைப்பது மலைக் கல்லில் கிணறு தோண்டுவதைப் போல் பலன் தரமுடியாத செயல்.  

அதே போல ஒன்றைப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களிடமும் அதைக் குறித்த பாராட்டை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அறிஞர் அண்ணா அழகாகக் கூறுவார். “செவி பழுதுற்றவன் அருகில்
சென்று சிதம்பரம் ஜெயராமன் என்ன அழகாய்ப் பாடினாலும் அவன் ‘இவருக்கு என்ன ஆயிற்று? இவர் வாய் ஏன் இப்படி கோணிக் கொள்கிறது’என்றல்லவா நினைப்பான்?”.  நகைச்சுவையாகத் தோன்றினாலும் சில நேரங்களில் நாமும் அதே போன்ற முட்டாள்தனத்தைச் செய்து விடுகிறோம். எதையும் பாராட்டவும், விமரிசிக்கவும் கூட அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டுமே அந்த பாராட்டும், விமரிசனமும் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.

எனவே பாராட்ட மனமில்லாதவனிடமிருந்தும், பாராட்ட  தகுதி இல்லாதவனிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். முன்னவன் பாராட்ட மாட்டான். பின்னவன் பாராட்டு பொருளில்லாதது. மாறாக உள்நோக்கம் இல்லாத ஒருவன், உள்ளதை உள்ளபடி சொல்ல முடிந்தவன், உங்களைப் பாராட்டாமல் விமரிசித்தாலும் கூட அது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

நம்முடைய நிஜ எதிரி யார்..??

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

*💗படித்ததில் பிடித்தது...*

**

எமோஷனல் இண்டெலிஜன்ஸ் (உணர்வுசார் நுண்ணறிவு) குறித்து புத்தகங்கள் இன்றைக்கு அவசியமானவை. சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதிவரும் சோம.வள்ளியப்பன் ஆங்கிலத்தில் 'YOU Vs YOU' என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.இந்நூல் எமோஷனல் இண்டெலிஜன்ஸை அலசி ஆராய்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி.

தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிலரும்கூட, மற்றவர்களால் தூண்டப்படும்போது சில நேரம் தவறான விஷயங்களைச் செய்துவிடுகிறார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் உள்ள மனிதர்களைக் கையாளுவது அவ்வளவு எளிதானதல்ல. சிலர் படபடவென்று பொரிந்து தள்ளிவிடுவார்கள்.

ஆனால், இன்றைய வேலைச் சூழலில் மற்றவர்களுடனான நமது அணுகுமுறை மிகவும் முக்கியமானது. சூழ்நிலையும், தருணமும் இணக்கமற்று, எதிர்நிலையில் இருக்கும்போதுகூட, சிலர் விஷயங்களைச் சிறப்பாகக் கையாண்டு தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். தங்களுடைய, மற்றவர்களுடைய உணர்ச்சிப் பிரச்சினைகளைச் சிலர் எவ்வளவு சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதைச் சுவாரசியமான உண்மைச் சம்பவம் மூலம் பார்க்கலாம்.

*அனுமதியில்லை..*

இந்தச் சம்பவம் நடைபெற்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருச்சி அருகேயுள்ள டால்மியா சிமெண்ட்ஸின் முதலாளி ஜெய்தயாள் டால்மியா, சென்னையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி ஜங்ஷன் சென்று, அங்கிருந்து தனது தொழிற்சாலைக்கு வருவதுதான் அவர் வழக்கம். ஏதோ சில காரணங்களால், அவரது தொழிற்சாலை இருந்த ஸ்டேஷன் அருகே ரயில் சில நிமிடங்கள் நிற்க நேரிட்டது.

அங்கிருந்து திருச்சி ஜங்ஷன் சென்று, தொழிற்சாலைக்குத் திரும்ப 2 மணி நேரம் ஆகும். அன்றைக்கு அவரிடம் பெரிய லக்கேஜும் இல்லை. இதையெல்லாம் யோசித்து, அங்கேயே அவர் இறங்கிவிட்டார். ரயில் தடம் வழியாகவே சென்று, 10 நிமிடங்களில் தொழிற்சாலையின் பின் கதவை அவர் அடைந்துவிட்டார். அந்தக் கதவு வழியாகத்தான் சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களான சுண்ணாம்புக் கற்கள், சரக்கு ரயில்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படும்.

அதிகாலை நேரம் என்பதால், அந்தப் பகுதி சுறுசுறுப்பாக இல்லை. கதவு மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த வாட்ச்மேனை அழைத்த டால்மியா, கதவைத் திறக்கச் சொன்னார்.

“எதற்காகத் திறக்க வேண்டும்? இந்தக் கதவு சரக்கு ரயில் போவதற்குத்தான். உரிய உத்தரவு இல்லாமல், யாரையும் இந்தக் கதவு வழியாக அனுப்ப முடியாது, சார்” என்று அந்த வாட்ச்மேன் சொன்னார்.

“நான்தான் இந்தக் கம்பெனியின் முதலாளி” என்றார் டால்மியா.

“அப்படியானால் உங்கள் ஐ.டி. கார்டைக் காட்டுங்கள்” என்றார் அந்த வாட்ச்மேன். டால்மியாவிடம் அப்படி எதுவும் இல்லாததால், நீங்கள் மெயின் கேட் போய்விடுங்கள் சார் என்று அந்த வாட்ச்மேன் சொல்லிவிட்டார்.

இதையடுத்து டால்மியா, 2 கி.மீ. தொலைவு நடந்து மெயின் கேட் வந்தார். சூரியன் உதயமாகி இருந்ததால், மெயின் கேட் போனவுடன் அங்கிருந்தவர்கள் அவரை நன்றாக அடையாளம் கண்டுகொண்டு சல்யூட் அடித்து, அவரிடம் இருந்து பெட்டியை வாங்கிக்கொண்டார்கள்.

காலை 10 மணிக்கு, எல்லாத் துறைத் தலைவர்களையும், அவரை உள்ளே அனுமதிக்காத வாட்ச்மேனையும் டால்மியா அழைத்தார். அனைத்துத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் அந்த வாட்ச்மேனைப் பாராட்டி, பரிசுப் பணமும் கொடுத்தார். ஆனால், அந்த வாட்ச்மேனிடம் நான்தான் முதலாளி என்று வலியுறுத்திச் சொல்லிவிட்டு, அவர் உள்ளே போயிருக்கலாம். ஆனால் ஏன் அப்படிச் செய்யாமல், வாட்ச்மேன் சொன்னதை டால்மியா ஏன் கேட்டார்.

“கதவைத் திற” என்று வாட்ச்மேனிடம் டால்மியா உத்தரவு போட்டிருக்கலாம். ஆனால், அவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அது மட்டுமில்லாமல், அந்த வாட்ச்மேனை அழைத்து எல்லாத் துறைத் தலைவர்கள் முன்னிலையிலும் அவர் பாராட்டினார்.

அது ஏன் என்றால், இது போன்ற மதிப்பீடுகளுக்கு (விதிமுறைகளை மதித்தல்) எவ்வளவு தூரம் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை வெறுமனே சொல்லாக இல்லாமல், செயலாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். இதுபோன்ற புத்திசாலித்தனமான செயல்பாடுகள், மிகப் பெரிய பலன்களைத் தரும்.

*பகிர்வு*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛

*💗உடல் நலம்...*

*டென்ஷனைக் குறைக்க 'நடை தியானம்'..!!*

இன்றைய வாழ்க்கையில் டென்ஷன் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. யாருக்குத் தான் டென்ஷன் இல்லை என்கிறார்கள். அதிகாலையில் ஆரம்பித்து அன்று இரவு படுக்கையில் சாயும் வரை டென்ஷன் தான். தூக்கத்தில் கூட ஆழமும் அமைதியும் இல்லை.

மறுபடி காலை ஆரம்பிக்கிற நாளில் முந்தைய நாளின் டென்ஷனும் சேர்ந்து கொள்கிறது. இப்படி சேர்ந்து கொண்டே போகும் டென்ஷன் கோபமாய், கத்தலாய், வியாதியாய், வெறுப்பாய், பல ரூபங்கள் எடுத்து நமக்கு உள்ள சிக்கல்களை மேலும் அதிகப்படுத்தி விடுகிறது.

ஒருசிலர் "எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்றுகிறது" என்று புலம்புவது உண்டு. ஓடிப் போனாலும் அங்கும் நமக்கு முன்னால் டென்ஷன் நின்று கொண்டு காத்திருக்கும். அப்படியானால் என்ன தான் வழி என்றால் அதற்கு மாமருந்து தியானம் தான். 

தியானத்தில் பல நூற்றுக் கணக்கான முறைகள் இருக்கின்றன. எல்லாமே உயர்ந்தவை தான் என்றாலும் பெரும்பாலான தியானங்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்வதில் இருந்து ஆரம்பிக்கின்றன. அப்படிப்பட்ட தியானங்கள் பலருக்கு கைகூடுவதில்லை. சிலரால் சில நிமிடங்கள் சேர்ந்தாற் போல அமர்ந்திருக்க முடிவதில்லை. முடிந்தவர்களிலும் சிலர் அப்படியே உறங்கி விடுவதும் உண்டு.

அவர்களுக்கெல்லாம் இந்த நடை தியானம் மிகவும் பயன்படும். இதை முதலில் உருவாக்கியவர் திச் நாட் ஹான் என்கிற வியட்நாமிய புத்தத் துறவி. பின்னர் அந்த நடை தியானம் சில கூட்டல் கழித்தல்களுடன் பலரால் பல அவதாரங்கள் எடுத்தது. அதில் சிலவற்றின் அம்சங்களைக் கலந்து நடை தியானம் ஒன்றைப் பயன்படுத்திப் பயன் பெற்றவன் நான். எனவே இதைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்ய முடிந்தால் கண்டிப்பாக நீங்கள் பெரும் மாற்றத்தை உங்களிடத்தில் காண்பீர்கள் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

இது மிகவும் எளிமையானது. நடை தியானம் செய்யும் முறை இதோ...

1) முதலில் அதிக நெரிசலோ, கூட்டமோ இல்லாத அமைதியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு வாகன, மக்கள் போக்குவரத்து குறைவாக இருக்கிறதோ அந்தப் பாதை சிறந்தது.

2) காலை அல்லது மாலை அல்லது இரவு நேரங்கள் உத்தமம். ஆனால் தேர்ந்தெடுத்த பின் தொடர்ந்து அதே வேளையில் நடை தியானத்தை தினமும் செய்வது நல்லது.

3) நடக்கையில் கூட ஒருவர் இருப்பதைத் தியானம் கை கூடும் வரை தவிர்ப்பது நல்லது. செல் போன் இருந்தால் அதை ஆ·ப் செய்து விடுங்கள்.

4) நடக்க ஆரம்பிக்கும் முன் சிறிது அமைதியாக நில்லுங்கள். முதலில் உங்கள் உடலுடன் தொடர்பு கொள்ளுங்கள். இயந்திரத்தனமாக வாழ ஆரம்பித்து விட்ட நாம் பெரும்பாலான நேரங்களில் நம் உடலின் சின்னச் சின்ன உணர்வுகளைக் உணர்வதில்லை. மூச்சை மூக்கு வழியாக ஆழமாக உள்ளிழுத்து மெள்ள வெளிவிடுங்கள். மூச்சுக் காற்று உங்கள் உடலில் பயணம் செய்வதை உணருங்கள். காலடியில் செருப்பின் ஸ்பரிசம், வெளியே வீசும் காற்று/வெயில்/சீதோஷ்ணம் உங்கள் உடலைத் தொடும் விதம் போன்றவற்றை கண்களை மூடிக் கொண்டு அனுபவியுங்கள்.

5) மூன்று முறை முன்பு சொன்னது போல் மூச்சு விட்டு விட்டு நடக்க ஆரம்பியுங்கள். நிதானமாக நடக்க ஆரம்பித்து பின் இயல்பாக சீராக ஒரே வேகத்தில் நடந்து செல்லுங்கள். மூச்சையும் இயல்பாக விட்டால் போதும். ஆனால் உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் விடும் மூச்சில் இருக்கட்டும். நடக்க நடக்க உங்கள் மூச்சு தானாக ஆழப்படும்.

6) நடக்கையில் உங்கள் மூச்சில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும். மனம் ஆயிரத்தெட்டு விஷயங்களை அவசரமாக உங்களுக்குச் சொல்ல ஆசைப்படும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனம் மூச்சில் இருந்து வேறு விஷயங்களுக்கு சஞ்சரிக்கும் போது அமைதியாக அதை மறுபடி மூச்சுக்கே கொண்டு வாருங்கள். திரும்பத் திரும்ப அது அலையும். சலிக்காமல் அதை உங்கள் மூச்சுக்கே கொண்டு வாருங்கள். சிறிது சிறிதாக மனம் தாவும் வேகம் குறைந்து போகும். மனம் அமைதியடைய ஆரம்பிக்கும்.

7) நீங்கள் சீராக மூச்சு விட்டபடி தாளலயத்தோடு அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தவுடன் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திகளை மூச்சுக் காற்றோடு அமைதியாக உங்களுக்குள் இழுத்துக் கொள்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளையும், டென்ஷனையும், பலவீனங்களையும் வெளிமூச்சு வழியாக வெளியே விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

8) சுமார் பதினைந்து நிமிடங்களாவது இப்படிக் கற்பனையோடு மூச்சு விட்டு நடந்தீர்களானால் சிறிது சிறிதாக உங்களுக்குள் அமைதியும் சக்தியும் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்.

9) நீங்கள் உங்கள் நடை தியானத்தின் முடிவுக்கு வரும் போது மறுபடி உங்கள் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்துங்கள்.

அவ்வளவு தான். இதைத் தினந்தோறும் செய்ய அரை மணி நேரத்திற்கு மேல் நமக்குத் தேவையில்லை. ஆனால் தொடர்ந்து செய்தால் மன அமைதி, உடல் நலம் இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கலாம். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.

*பகிர்வு*

💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡
🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙

*💗உடல் நலம்...*

*நோய் எதிர்ப்பு சக்திக்கு புரதம் ஏன் அவசியம்..??*

செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், புதுப்பித்தலுக்கும் தேவையான அடிப்படை காரணி, புரதம். நோய் எதிர்ப்பு செல்கள், முழு திறனுடன் செயல்பட்டு, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி போன்ற நோய் கிருமிகளை அழிக்கத் தேவையான திறனைக் கொடுப்பது புரதம்.

*தினமும் எவ்வளவு புரதம் தேவை?*

அவரவர் செய்யும் வேலையைப் பொறுத்து, புரதத் தேவையின் அளவு மாறுபடலாம். சராசரியாக, ஒருவரின் உயரத்தில், 100 செ.மீ., கழித்தால், எவ்வளவு வருமோ அவ்வளவு கிராம், புரதம் சாப்பிட வேண்டும். உதாரணமாக, ஒருவரின் உயரம், 150 செ.மீ., என்று வைத்துக் கொண்டால், அதில், 100ஐ கழிக்கும் போது, 50 வரும். ஐம்பது கிராம் புரதம் சாப்பிட வேண்டும். சாப்பிடும் உணவு அனைத்திலும் போதுமான அளவு புரதம் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*புரதச் சத்து மிகுந்த உணவுகள் எவை?*

பால், பாலாடை, முட்டை வெள்ளைக் கரு, மீன், கோழி இறைச்சி, சோயா, பருப்பு வகைகள், பாதாம், முந்திரி, வால்நட் உட்பட நட்ஸ் வகைகள், பொட்டுக் கடலை, வேர்க்கடலை போன்றவை.

*ஆரோக்கியமான உணவு எது?*

இட்லி, தோசை, இடியாப்பம், ரசம் போன்ற தென்னிந்திய உணவுகள் தான் ஆரோக்கிய மானவை. காரணம், இவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை. எந்த உடல் பிரச்னையும் இல்லாவிட்டால் கூட, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு சத்துகள் அடங்கிய, சமச்சீரான உணவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இதயக் கோளாறு உட்பட பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது, மன அழுத்தம். இதய மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்க, மன அழுத்தத்தை குறைக்க, பாதாம் உதவுகிறது. இதயத் துடிப்பு மாறுபாட்டை சரி செய்யும் ஆற்றல், பாதாம் பருப்பிற்கு உள்ளது. பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் தோலை நீக்கி விட்டு, தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை சீராக வைக்கும்.

*தோலுடன் பாதாமை ஏன் சாப்பிடக் கூடாது?*

'டேமின்' என்ற வேதிப் பொருள், பாதாம் பருப்பின் தோலில் உள்ளது. இது, பருப்பில் உள்ள நுண்ணுாட்டச் சத்தை, முழுமையாக செரிமான மண்டலம் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும். தினமும், 8 - 10 பாதாம் சாப்பிடுவ தால், இதில் உள்ள அமினோ அமிலம், மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் - பி17, கேன்சர் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.

டாக்டர் ஷீலா கிருஷ்ணசுவாமி,
பெங்களூரூ.

*பகிர்வு*

🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙