💜💛💜💛💜💛💜💛💜💛💜💛
*💗உடல் நலம்...*
*இருதய நோய் தவிர்க்க, ஒரே பிராண்ட் எண்ணெயை தவிர்க்க வேண்டும்..!!*
''இருதய நோய் தாக்குவதை தவிர்க்க, சமையலில் ஒரே பிராண்ட் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்,'' என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நந்தகுமார்.
*இன்று இருதய நோய் அதிகரிக்க காரணம் என்ன?*
கடந்த, 15 ஆண்டுகளாக, 28 முதல், 45 வயதுக்குள் இருப்பவர்கள் பலர், இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறையே காரணம். மனக்குழப்பம், துாக்கமின்மை, அதிகமாக உணர்ச்சி வசப்படும் தன்மை, தேவைற்ற பிரச்னைகளை உருவாக்கி கொள்தல் போன்ற உளவியல் சிக்கல்களை தவிர்க்க வேண்டும்.
*இருதய நோய் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?*
வாழ்க்கையில் சிக்கல், கவலை, கடன் பற்றி மட்டுமே நினைத்து, கவலை மேல் கவலை அடைவதால், பிரச்னை தீரப் போவதில்லை. முதலில் டென்ஷன், எமோஷன் இவை இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் உறங்கி, விழிப்பது அவசியம். எவ்வளவு பிரச்னை இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு, எந்த பிரச்னையும் இல்லாத மனிதனை போல், தினமும் இரண்டு மணி நேரம், மனம் விரும்பியதை செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் இருதய நோய் நெருங்காது.
*இருதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதை, எப்படி தெரிந்து கொள்வது?*
சிலருக்கு ரத்த குழாய்களில், அதிக இடங்களில் அடைப்பு இருந்தாலும் தெரியாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வலி தெரியாது. சிலருக்கு மூச்சிரைப்பு ஏற்படும். சோர்வாக இருக்கும். தினமும் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு, ஏதாவது மாற்றம் இருந்தால் உடனே தெரிந்து விடும். நெஞ்சு பட படப்பு, தலை சுற்றல் இருந்தால், இருதயம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.சந்தேகம் இருந்தால், டிரெட் மில் டெஸ்ட் எடுத்து பார்த்தால் தெரிந்துவிடும். சிகிச்சை எடுத்து, மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.
*கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருதய நோயாளிகளுக்கு, என்ன பிரச்னைகள் ஏற்படும்?*
இரண்டு நோய்க்கும் மருந்து எடுத்து கொள்வதால், அதிக சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நோயில் இருந்து மீண்டவர்களுக்கு, வேறு சில பிரச்னைகளும் வர ஆரம்பித்துள்ளன. காலப்போக்கில் அவை தெரிய வரும்.
*கொரோனா நமக்கு சொல்லும் பாடம் என்ன?*
கொரோனா வந்த பிறகுதான், நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம், சொத்து வைத்து இருந்தும், பலரால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாங்க முடியவில்லை. எதிர்கால வாழ்க்கை மீதான அச்சத்தை, இந்நோய் உருவாக்கி இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் மட்டும்தான், நம் வாழ்க்கை நமக்கு சொந்தம். இதுதான் கொரோனா சொல்லிக் கொண்டிருக்கும் பாடம்.
*இருதய நோய் தவிர்க்க, என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்?*
எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், அளவாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் வறுத்ததாக இருக்க கூடாது. ஒரே பிராண்ட் எண்ணெயை தினமும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என, தினமும் மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். தினமும் சாப்பிடும் உணவு கலோரிகளை, அன்றைக்கே எரிக்கும் அளவுக்கு உடல் உழைப்பு இருக்க வேண்டும்.
- டாக்டர் நந்தகுமார்.
இருதய நோய் சிறப்பு மருத்துவர்.
*பகிர்வு*
💜💛💜💛💜💛💜💛💜💛💜💛
No comments:
Post a Comment