audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, May 30, 2023

பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்றாது விடுதல்

 சில சம்பவங்கள், பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்றாது விடுதலும் முக்கியமானதே.


அமெரிக்க பாடகியும் நடிகையுமான Barbra Streisand , கலிபோர்னிய கடற்கரை ஓரம், மாலிபு எனும் இடத்தில் பெரிய பங்களா வீடொன்றை வாங்கினார். தனது ப்ரைவசியை பேணுவதற்காக, நிம்மதியாக வாழ்வதற்காக அந்த வீட்டைப் பற்றி யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் அவர் அதிகம் கவனம் செலுத்தினார். எனவே, வீட்டை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வராமால் இரகசியமாக வைத்திருந்தார்.


2003 ல், கடலரோம் சம்பந்தமாக ஆய்வு ஆவணங்களை சேகரித்து வந்த Kenneth Adelman என்ற புகைப்படக் கலைஞர்,  ஸ்ரைசேன்டின் அறிமுகம் இல்லாத வீட்டையும் சேர்த்து படம் எடுத்து தனது தளத்திலே பதிவேற்றி விட்டார். அவர் அந்த ப்ரொஜெக்டில் மொத்தமாக எடுத்த 12000  போட்டோக்களில் இந்த வீடும் ஒன்று. அவ்வளவு தான் மேட்டர்.


ஆனால், யாருக்கும் தெரியாமல் இருந்த தனது வீடு இணையத்தளம் ஒன்றில் போட்டோவுடன் வீதியோடு கிளகயராக அப்லோட் ஆகி இருப்பதை கண்ட பாடகிக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் கட்டிக் காத்த இரகசியம் வெளியே தெரிந்து விடும் என்று அஞ்சினார். தனது வீட்டை போட்டோ எடுத்த அந்தப் புகைப்படக் கலைஞர் மேல், 50மில்லியன் டாலர் கேட்டு, மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் பாடகி ஸ்ரைசேன்டின். செய்தி காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவ ஆரம்பித்தது. மீடியாக்களில் பேசுப்படும் கிசு கிசுவாக அந்த வீடு மாறியது.


மானநஷ்ட வழக்குக்கு போடுவதற்கு முன், அந்த வீட்டின் படம் இணையதளத்தில் வெளிவந்த நாள் முதல், மொத்தம் ஆறே ஆறு நபர்களால் மட்டுமே டவுன்லோட் செய்யப்பட்டு இருந்தது. அதில் நாலு டவுண்லோட்கள், கேஸ் சம்மந்தப்பட்ட லோயர்கள் இருவரால் செய்யப்பட்டது.

ஆனால், அந்த நீதி மன்ற வழக்கிற்குப் பின்னர், ஒரே ஒரு மாதத்திற்குள் மட்டும் 400 ,000 க்கும் மேற்பட்டவர்கள் அந்த வீட்டின் படத்தை டவுன்லோட் செய்து விட்டார்கள். கடைசியில்,  இது தான் பார்பரா ஸ்ரைசேன்டின் வீடு என்பது ஊருக்கே தெரிந்து விட்டது.


கடைசியில் நீதிமன்றமும் இந்த கேசை நிராகரித்தது மட்டுமல்லாமல், அந்த புகைப்பட கலைஞருக்கு ஏற்பட்ட வழக்கறிஞர்களுக்கான செலவை பாடகியையே பொறுப்பேற்குமாறும் உத்தரவிட்டது.


இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், யாராவது  எதையாவது மறைக்க வேண்டும், தடுக்க வேண்டும் என்று எதிர் வினையாற்ற முற்பட்டால், தடுக்க அல்லது மறைக்க முற்பட்ட விடயம் விடையம், முன்னரை விட அதிகம் வெளியே தெரியவரும், நேர் எதிரான  விளைவையே ஏற்படுத்தும் என்பதற்கு இந்த கேஸ் நல்ல உதாரணம்.


பேசாமல் விட்டிருந்தால் அந்த வீடு யாருக்கும் தெரியாமலே இருந்திருக்கும். தெரியக் கூடாது என்று தடை போட மெனக்கட்டது கடைசியில் நேர்மாறான விளைவுகளேயே கொண்டு வந்து சேர்த்தது. அதனால் தான் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஸ்ட்ரைஸண்ட் எஃபெக்ட் (Streisand Effect) என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதையே chengyu எனப்படும்‌ சீனப் பழமொழி  "wishing to cover, more conspicuous" (欲蓋彌彰) மறைக்க நாடுவதே அதிகம் வெளித்தெரியும் என்று  சொல்கிறது.


ஆகவே நாம் மறைக்க நாடிய ஒன்று வெளித் தெரிந்து விட்டது என்று தெரிந்தால், அது குறித்து ரீஅக்ட் பண்ணாமல் இருப்பதே சிறந்தது. ரீஅக்ட் பண்ணுவது ஸ்ட்ரைஸணட் எபக்டையே கொண்டு வரும். 


இப்போது உங்களுக்கு தெரிந்த ஸ்ட்ரைசன்ட் எபக்ட் வேறு என்ன இருக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம். தற்போது நாட்டில் நடக்கும் நிறை சம்பவங்கள், முகநூலில் நடைபெறும் கருத்தாடல்களும் இதை அடியொற்றியே நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment