audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

நாசிசம்



By C.P.சரவணன் | 








நாசிசம் (Nazism)

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள் (racial hierarchy), ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது; மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை (Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை செய்தது.





ஜோசப் ஆர்தர் டி கொபின்யூ

ஜோசப் ஆர்தர் டி கொபின்யூ (Joseph Arthur de Gobineau) என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபு, ஆரிய இன’ கொள்கைக்கு வித்திட்டவருள் முக்கியமானவர். இக்கொள்கைகளை தன் “An Essay on the Inequality of the Human Races’ என்ற 1400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் விளக்கியுள்ளார்.





நாசி ஜெர்மனி, ஸ்வஸ்திக் கூடிய புதிய கொடி







ஸ்வஸ்திக் என்பது ஒன்றையொன்று அவற்றின் நடுப்பகுதியில் செங்குத்தாக வெட்டும் ஒரேயளவான இரண்டு கோடுகள், அவற்றின் எல்லா நுனிப்பகுதிகளும் ஒரே திசையில் வளைந்து இருக்குமாறு அமைந்த ஒரு வடிவத்தைக் குறிக்கும். இது நுனிகள் வலப்பக்கம் வளைந்தவையாகவோ (卐), இடப்பக்கம் வளைந்தவையாகவோ (卍) இருக்கலாம்.

இந்த வடிவம் பண்டை இந்தியாவின், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இது இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் ஆகியவற்றில் பரவலாகப் பயன்பட்டது.

மேற்கத்திய பண்பாட்டில் குறுகிய காலம் இவ்வடிவம் பெரு வழக்கில் இருந்ததைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டில் தேசிய சமூகவுடமைச் ஜெர்மன் தொழிலாளர் கட்சியினர் (நாசிக் கட்சி) இவ்வடிவத்தைத் தமது சின்னமாக ஆக்கினர். 1933 ஆம் ஆண்டில் அடோல்ஃப் இட்லர் செருமனியின் ஆட்சியைப் பிடித்த பின்னர், ஸ்வஸ்திக் நாசி செருமனியில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னம் ஆனது.

1935 ஆம் ஆண்டில் ஸ்வஸ்திகாவைக் கொண்டிருந்த நாசிக் கட்சியின் கொடி, செருமனியின் கொடி ஆக்கப்பட்டது. இதனால் 1930களில், சுவசுத்திக்காவை நாசிசம், பாசிசம், வெள்ளையின உயர்வுக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகவே மேற்குலகம் பார்த்தது. தற்காலத்தில் மேற்கு நாடுகளில் இது இகழ்ச்சிக்கு உரிய ஒரு சின்னமாகவே உள்ளது. நாசிசத்தின் சின்னமாக இது பயன்படுத்தப்படுவதை செருமனி தடை செய்துள்ளது. நாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட பல தற்கால தீவிரவாத அரசியல் கட்சிகள் சற்று மாற்றியமைக்கப்பட்ட சுவசுத்திக்காவைத் தமது சின்னமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து, 1,500 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பாவுக்கு இவர்கள் குடிபெயர்ந்த "ரோமா' பழங்குடிகள் பயன்படுத்திய "ஸ்வஸ்திக்' சின்னத்தை தான் நாசி கட்சியினர் பயன்படுத்தி கொண்டதாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.





அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler)

ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்

தொழிலாளர் கட்சியானது (ஜெர்மன்: Nationalsozialistische Deutsche Arbeiterpartei NSDAP), 1929 ல் பெரும் பொருளாதார மந்தநிலையுடன் ஏற்பட்ட சமூக மற்றும் நிதி எழுச்சிகளின் போது, ​​அது ஒரு வலதுசாரி அரசியல் கட்சியாக இருந்தது. நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது; மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை செய்தது.

ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Concept) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூதத் தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி ஈவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. அடால்ப் ஹிட்லர் தனது சிறைவாசத்தின் போது எழுதிய மெயின் கேம்ப் (Mein Kampf.) எனும் நூலில் நாசிசக் கொள்கைகள் விவரிக்கப்பட்டுள்ளது.





ஆல்பிரட் ரோசன்பெர்க் (Alfred Ernst Rosenberg)

ஆல்பிரட் ரோசன்பெர்க் பால்டிக் ஜெர்மானியக் கோட்பாட்டாளரும் ஜெர்மன் நாசிக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவருமாவார். டீட்ரிக் எக்கார்ட் என்னும் தேசிய ஜெர்மன் தொழிலாளர் கட்சித் தலைவர் இவரை ஹிட்லரிடம் அறிமுகம் செய்தார். அது முதல் நாசி அரசாங்கத்தின் செயல் வடிவங்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். இனவெறிக்கொள்கை, யூதப்பகைமை, வெர்செய்ல் ஒப்பந்தங்களை மீறுதல் போன்ற செயல்களில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது. கிருஸ்த்துவத்தை வெறுத்த ரோசன்பெர்க், கிருஸ்த்துவத்தை நடைமுறைக்குகந்த சமயமாக (Positive Christianity) மாற்ற முனைந்தார். இவருக்கு இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமைக்கப்பட்ட நியூரம்பெர்க் விசாரணை ஆணையத்தினால் போர் விதிமீறல் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் அக்டோபர் 16, 1946 இல் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்





ஹெர்மன் வில்லெம் கோரிங் (Hermann Wilhelm Goring)

ஹெர்மன் வில்லெம் கோரிங் ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் (Lutfwaff) என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத் தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டு வீழ்த்திய பெருமைக்குரியவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது தண்டனை நிறைவேறுவதற்கு முன் இரவு அக்டோபர் 15, 1946, அன்று பொட்டாசியம் சயனைட் உட்கொண்டு தற்கொலை புரிந்து இறந்தார்.





பால் ஜோசப் கோயபெல்ஸ் (Paul Joseph Goebbels)

கோயபெல்ஸ் ஜெர்மனியின் மிக முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவர். அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார். அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்:

இவரின் சித்தாந்தம் “"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது." என்பதாகும்.

அடால்ப் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் 1933 முதல் 1945 வரையுள்ள காலத்தில் ஜெர்மானிய ரெய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இவரின் யூதப்பகைமைக்குச் சான்றாக கிரிஸ்டல் நைட் (Crystal Night) கொடூரநிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இவர் பல புதினங்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன் வரவில்லை. இவரின் கருத்துக்கள் பொதுவுடமைவாதிகளையும், சோசலிசவாதிகளையும் எதிர்ப்பதாகவும், ஸ்ட்ரோமப்டேலுங் எஸ் ஏ அமைப்பினரை ஆதரிப்பதாகவும் அமைந்தன. 1923இல் நாசி அரசியலில் நுழைந்த இவர் 1928களில் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவராக மதிக்கப்பட்டார். அதன் பின் 1933இல் ஹிட்லர் அரசு பதவியில் அமர்ந்தபொழுது கொள்கை பரப்பு அமைச்சராக பதவியில் அமர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர் பலரை போரில் பங்குபெற வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1943ஆம் ஆண்டில் அச்சு நாடுகளுக்கு எதிராக உலகநாடுகள் திரும்புகையில் அவற்றுக்கு எதிராக ஜெர்மானியர் திரும்புமாறு தன் பரப்புரை மூலம் ஒன்று திரட்டினார் என்று கூறப்படுகிறது. கோயபெல்ஸ், ஹிட்லரின் இறுதி நாட்களில் அவர் இறக்கும் வரை உடனிருந்தார். ஹிட்லர் இவரைத் தனக்குப் பின்வரும் அதிகாரப்பூர்வ வேந்தராக அறிவித்துவிட்டு இறந்தார். ஹிட்லர் இறந்தபின் கோயபெல்ஸ் 1 மே, 1945 அன்று தன் மனைவி மகதா, ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பு பற்றி பலவிதங்களில் பேசப்படுகிறது.





ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர் (Heinrich Himmler)

ஹிம்லர் நாசி ஜெர்மன் அரசியலில் மிக முக்கியப்பங்கு வகித்தவர். இவர் உடன் இருந்த மற்ற அரசியல் தலைவர்களுட்ன ஒப்பிடுகையில் இவர் அதிக அரசியல் பலம் கொண்டவர் ஹிட்லரின் மதிப்புக்குரியவர். எஸ் எஸ் படைப்பிரிவின் தளபதியாக, ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஆக பதவி வகித்தவர். இவர் ஆளுமையின் கீழ்தான் ஜெர்மனியின் அனைத்து நாசிச் சிறைச்சாலைகளும் இயங்கின. இவர் ரோமானியர்களையும், யூதர்களையும் கொன்று குவித்ததின் எண்ணிக்கை 2 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை நீள்கிறது. அது மட்டுமில்லாமல் போர்க் கைதிகளையும், பொதுவுடமைவாதிகளையும், புரட்சியாளர்களையும், ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களையும், மன நலம் குன்றியவர்கள் என்று இவர் கொன்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சமாகும். உலகப்போரின் முடிவில் இவர் மீதுள்ள குற்றங்களை கைவிடுவதென்றால் சரணடைவதாக நேசநாட்டுப் படையினருக்கு நிபந்தனை விதித்தார் . பின்னர் பிரிட்டீஷ் படையினரால் கைது செய்யப்பட்டு மே 23, 1945 ல் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டார் அங்கு ஆணையத்திற்கு பதிலளிக்குமுன் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்தார்.

நாசி தலைவர்களின் அனைவரின் இறுதி முடிவை காணும்போதே, நாசி கொள்கையை பற்றி நாம் புரிந்து கொள்ளலாம்.



தொடரும்...

No comments:

Post a Comment