audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, June 13, 2023

 கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த Artistic swimming  போட்டியில் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை அனிதா ஆல்வாரெஸ் கலந்து கொண்டு போட்டி ஆரம்பித்தவுடன் நீச்சல் குளத்தில் குதித்து விட்டார். ஆனால் மேலே வரவேண்டிய நேரத்தில் அனிதா வரவில்லை. உலக சேம்பியன்ஷிப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளர் மட்டும் மேலே வரவில்லை என்பதை லைப்கார்ட் உள்ளிட்ட யாரும் கவனிக்கவில்லை. மக்களும் மிகுந்த ஆராவாரத்துடன் நீச்சல் வீராங்கனைகள் செய்யும் ஆர்ட்டிஸ்ட்டிக் நீச்சலை ரசித்துக் கொண்டிருந்தனர்.


ஏதோ தவறு நடந்திருக்கிறதென்று  அனிதாவின் கோச் ஆன்டிரியா உடனே நீச்சல் குளத்தில் குதித்து பார்த்த போது குளத்தின் ஆழத்தில் அனிதா மயக்கமாகியிருந்தது தெரிந்தது. ஆன்டிரியா குதித்தவுடன் நீச்சல் குளத்தின் முனையில் போட்டியில் கலந்து கொள்ள தயாராக இருந்த மற்றொரு போட்டியாளரும் உடனே குதித்து அனிதாவை மேலே தூக்கி வந்தனர். 


சரியான நேரத்தில் தனது கோச் ஆன்டிராயாவினால் காப்பாற்றப் பட்ட அனிதா மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை தேறிவந்தார். 


இதை நாம் நமது வாழ்கை பயணத்திலும் பொறுத்தி பார்க்கலாம். நம்மை சுற்றியுள்ளவர்களை கவனித்தாலே நிறைய விஷயங்களை பெற முடியும். அலுவலகத்திலேயே நிறைய பேரின் நடவடிக்கைகளை கவனித்தாலே தெரியும் ஒரு சிலர் எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று. என்ன இந்த பொருள் சேர்க்கும் உலகில் நாம் நம்மை பற்றி மட்டுமே கவலை பட்டு நம்மை சூழ்ந்தவர்களை கவனிக்க தவறி விடுகிறோம். ஆனால் நமது தர்மம் அடுத்த மனிதரையும் நமது சொந்தமாக கருதுவதைத்தான் போதிக்கிறது. சிறுதளவாவது அனுசரனையுடன் நமது அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் பிரச்சனை என்னவென்று அவர்களை பேச வைத்து நீங்கள் தீர்வு சொல்ல முடியவில்லை என்றாலும் ஆறுதலான வார்த்தைகளை அவர்களுக்கு அளிக்கலாம். 


எல்லோருக்கும் அனிதாவின் கோச் ஆன்டிரியா போன்று ஒருவர் இருந்தால் நிறைய மன அழுத்தங்களால் உண்டாகும் பிரச்சனைகளை தடுக்கலாம் மற்றும் தற்கொலைகளை தடுக்கலாம். அவ்வாறு வாழ்க்கையிலும் கோச்சாக ஒருவரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். அது உங்களது சகோதரரோ, சகோதரியோ, நண்பரோ, உங்களது அலுவலகத்தில் சக ஊழியரோ அதை கண்டு கொள்வது மிக முக்கியமான ஒன்று.


நான்கு பேருக்கு நல்லது செய்யனும் நான்கு பேருக்கு உதவி பன்னனும் என்று நமது இந்து தர்மத்தில் சொல்லப்படும் அந்த நான்கு பேர் கடைசி காலத்தில் நமது சவத்தை தூக்கி வருபவர்கள் மட்டுமல்ல. நல்லது கெட்டதை பகிரவும் தான். அவ்வாறான சொந்தத்தையோ நண்பர்களையோ பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். என்ன ஒரு சில சமயங்களில் நமது நடவடிக்கை மற்றும் வித்தியாசமான சொற்களால் அது மாதிரியான ஆட்களை வாழ்க்கையில் தவற விட்டு விடுகிறோம்.


நண்பர் ஒருவர் அனிதா மூழ்கிய போது அவரது கோச்சால் காப்பாற்றபட்ட நிகழ்வை பகிர்ந்து நமது வாழ்க்கையில் இது மாதிரியான ஒருவர் கோச்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதனது தாக்கம்தான் இந்த பதிவு. 

🙏🙏🙏



( .....humanity ....படித்ததில் பிடித்தது.....))

No comments:

Post a Comment