ஒரு காலத்தில் அடுத்தவர் Opinion எனக்கு மிகவும் முக்கியமாய்ப்பட்டது. எங்கே அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும், Convince பண்ணுவதற்காகவும் போலியாய் புழுங்கித்திரிந்த நாட்கள் அது. நான் நாட்டில் விட்டு வந்த சிலதில் இந்த பழக்கமும் ஒன்று. இனி யாரையும் Convince பண்ணுவதற்காக மெனக்கெடத்தேவையில்லை என்ற எண்ணப்பாட்டை நானே எனக்குள் வளர்த்துக்கொண்டேன்.
இதற்கு பின்னால் பெரிய காரணம் எதுவும் தேவையில்லை. எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தாலே போதும். நீங்கள் என்னதான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் உங்களை பிடிக்காதவனுக்கு உங்களை பிடிக்காது. அப்படிப்பட்டவர்களை நம்மை சுற்றி வைத்திருப்பதே Negative Energy. நீங்கள் சரியாகவும், நான் பிழையாகவுமே இருந்துவிட்டு போகிறேன். நீங்கள் எனக்கு தேவையில்லை என்கிற நிலைப்பாடு ஆறுதலை தருகிறது.
நான் இப்போதெல்லாம், முகத்துக்கு நேரே, 'பிடிக்கவில்லையா தாராளமாக விலகிச்செல்லுங்கள்' என்று சொல்லப்பழகிவிட்டேன். ஏனென்றால் எனக்கு யார் தேவை யார் தேவையில்லை என்பதை நான் வரையறுத்துவிட்டேன். ஆமாம் சாமி போட வேண்டாம், ஆனால் நெகட்டிவ்வான மனிதர்கள், அடுத்தவரை பெருமை என்பவர்கள், பொறாமையில் வெந்து சாபவர்கள், தனது சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவனின் மூக்கை தொடுபவர்கள் யாரையும் என் எல்லைக்குள் அனுமதிக்க தயாராகவே இல்லை.
You live only once. நல்ல நண்பர்கள், சக மனிதர்கள், நமது வெற்றியில் சந்தோஷம் பெறுபவர்கள் கூட இருந்தாலே போதுமாகிறது. எண்ணிக்கைக்காக சேர்ப்பது ஆள் அல்ல, வெறும் நம்பர் மாத்திரம் தான். Collecting stamps போல Collecting friends க்கு வயதாகிவிட்டது.
நம்பினால் நம்புங்கள், நம்மை யோசிக்கச்செய்து, குற்ற உணர்வை தூண்டி விடுபவர்கள் அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறார்கள். நாம் தான் அதைப்பற்றியே நினைத்து நேரத்தை வீணடிக்கிறோம்.
No comments:
Post a Comment