audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, June 13, 2023

மகிழ்ச்சியாக_வாழும்_கலை

 "#மகிழ்ச்சியாக_வாழும்_கலை..."


"என்னால் மகிழ்ச்சியாக வாழ முடியும், என்னால் செல்வ செழிப்பாக வாழ முடியும் என்கிற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்க்கையும் அப்படியே அமையும்.‌"


பெரும்பாலான மக்கள் தன்னால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதையோ, தன்னால் செல்வ செழிப்பாக வாழ முடியும் என்பதையோ? நம்புவதே இல்லை. 


யாராவது உங்களால் நீங்கள் விரும்பியது போல வாழ முடியும் என்று கூறினால் கூட அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.


என்னால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? என்னால் எப்படி செல்வ செழிப்பாக வாழ முடியும்? அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தங்கள் வாழ்க்கையை தாங்களே எதிர்மறையாக மாற்றிக்கொள்கிறார்கள். என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது என்று வாதிடுகிறார்கள்.  ‌ 


"உருவமற்ற பொருட்களில் இருந்து உருவமுள்ள பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய ஒரே சக்தி எண்ணம்தான்."

- வால்ஸ் டி வால்ட்ஸ்


முதலில் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக மற்றும் செல்வ செழிப்பாக அமையும் என்பதை நாம் நம்ப வேண்டும்.


மகிழ்ச்சியாக வாழ்வதும், செல்வ செழிப்பாக வாழ்வதும் யாரோ சிலருக்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் கருதினால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.


மகிழ்ச்சியாக வாழ்வதும், செல்வ செழிப்பாக வாழ்வதும் ஒவ்வொரு நபருக்கும் சொந்தமான உரிமை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வது போல மற்றும் நீங்கள் செல்வ செழிப்பாக வாழ்வதைப் போல அல்லது நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே உங்களால் வாழ முடியும் என்பதை முதலில் நம்புங்கள்.


"உங்களால் கற்பனையில் செல்வத்தைக் காண முடிந்தால், நிஜத்திலும் காண முடியும்."

-நெப்போலியன் ஹில். 


உங்களால் மகிழ்ச்சியாக வாழ முடியும், செல்வ செழிப்பாக வாழ முடியும் என்று நீங்களே நம்பாமல் இருந்தால், நிஜத்தில் மட்டுமே எப்படி நடக்கும்? 


என்னால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று நம்புங்கள்.


என்னால் செல்வ செழிப்பாக வாழ முடியும் என்று நம்புங்கள். 


அதன்படியே செயல்படுங்கள். 


மகிழ்ச்சியாக மற்றும் செல்வ செழிப்பாக உங்களால் வாழ முடியும்.


பேரன்புடன்...


த.கார்த்திக் தமிழ் 

#BRAIN_vs_MIND

(Writer and Law of Attraction Coach)

📱98437-81071...

No comments:

Post a Comment